கடக ராசி - பொதுப்பலன்கள்
இந்த மாதம் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். அது உங்களுக்கு சிறந்த பலனைத் தரும். நீங்கள் துடிப்புடன் செயல்படுவதன் மூலம் உங்களுக்கு நன்மை விளையும். உங்களின் திறமையான தகவல் தொடர்பாடல் உங்களுக்கு அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருக்கும். இந்த மாதம் அதிக பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் உங்கள் பதட்டத்தை குறைக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் தான் முக்கிய நபராக விளங்குவீர்கள். பொய்மையான வாக்குறுதிகளை தவிர்த்திடுங்கள். உங்கள் சமூக வட்டாரத்தை விரிவுபடுத்த கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகளை வசூலிப்பதில் தீவிரம் காட்டுங்கள். இந்த மாதம் நீங்கள் அவற்றை எதிர்பார்க்கலாம். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் சரிவிகித உணவு மேற்கொள்ளுங்கள்.
கடக ராசி - காதல் / திருமணம்
உங்கள் உள்ளுணர்வுகளை உங்கள் துணையார் நன்கு புரிந்து கொள்வார். இந்த மாதம் சுமூகமான உறவை பராமரிப்பீர்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து உல்லாசப் பயணத்திற்கு செல்ல திட்டமிடுவீர்கள். இதன் மூலம் உங்கள் இருவரிடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். இப்பொழுது உங்களுக்கு திருமண வரன் அமைய உகந்த நேரம். நட்பு வட்டராத்திலிருந்து வரும் வரன் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சனி பூஜை கடக ராசி - நிதிநிலைமை
பயணத்திற்காக தேவையற்ற செலவுகள் செய்ய நேரும். உங்களின் வருமானத்தைக் கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இயலாது. அவசர காலத்திற்கென சேமித்த பணத்தை இப்பொழுது நீங்கள் பயன்படுத்தி சூழ்நிலையை சமாளிப்பீர்கள். உங்கள் அதிகரிக்கும் செலவுகளை கண்காணியுங்கள். உங்கள் நண்பர்களிடமிருந்து வர வேண்டிய தொகையை நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் திரும்பப் பெறுவீர்கள்.
நிதிநிலை மேம்பட பரிகாரம் : சுக்கிரன் பூஜைகடக ராசி - வேலை
அலுவலகப் பணிகள் உங்களுக்கு சிறப்பாகவும் சாதகமாகவும் காணப்படும். நீங்கள் உற்சாகமாகப் பணி செய்ய உங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். சக பணியாளர்களுடன் சுமூகமான உறவை பராமரிப்பீர்கள். உங்களுக்கு தரப்படும் அறிவுரைகளுக்கு நீங்கள் கீழ்படிய வேண்டும்.சில காரியங்களில் பொறுமையுடனும் தந்திரமாகவும் செயல்பட வேண்டும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : அங்காரக பூஜைகடக ராசி - தொழில்
தொலை தூரத்திலிருந்து உங்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஒவ்வொரு பணியிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நேரமின்மை காரணமாக பணிகள் இறுக்கமாக காணப்படும். உங்கள் கூட்டாளி களுக்கும் பணிகள் தந்து அவர்களையும் பணியில் உட்படுத்த வேண்டும். பயணத்தின் போது செலவுகள் அதிகமாக காணப்படுவதால் அவைகளை கட்டுப்படுத்தவும்.
கடக ராசி - தொழில்
தொழில் வல்லுநர்களுக்கு இது ஒரு சாதகமான மாதம். உங்கள் கடின உழைப்பிற்கு மேலதிகாரிகள் அங்கீகாரம் தருவார்கள். சக பணியாளர்களின் பாராட்டு உங்களுக்கு திருப்தியை அளிக்கும். உங்கள் முதலாளிகளிடம் நீங்கள் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். அவர்களின் அறிவுரைகளை பின்பற்றுங்கள். உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் தரும் ஆதரவு கண்டு நீங்கள் திருப்தியடைவீர்கள்.
கடக ராசி - ஆரோக்கியம்
இந்த மாதம் நீங்கள் உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும். இரத்தச் சிகப்பணுக்களின் குறைபாட்டின் காரணமாக அவதிப்படுவீர்கள். உங்களை ஆரோக்கியமாய் வைத்திருக்க நீங்கள் இலை வகை உணவுகளை உட்கொள்ளுங்கள். சத்தான உணவு மற்றும் பழங்களை உண்ணுங்கள். உங்கள் உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க முறையான தூக்கம் மேற்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜைகடக ராசி - மாணவர்கள்
உங்களுக்கு பிடித்த பாடத்தை தேர்வு செய்யுங்கள். நண்பர்களை பின்பற்றாதீர்கள். படிப்பில் உங்கள் சொந்த முடிவை எடுங்கள்.வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்சுப தினங்கள் : 3rd, 4th, 5th, 6th,13th, 16th, 19th, 20th, 24th and 31st
அசுப தினங்கள்: 7th, 9th, 11th, 15th, 22nd, 28th and 30th
Tags: intha matha rasi palan in tamil 2018 Kadaga rasi palan May 2018 May 2018 Kadaga rasi palan May matha Kadaga rasi palan in tamil May matha palangal Kadaga Rasi May month Kadaga rasi palan in tamil 2018 May rasi palan 2018 மே மாத கடகம் ராசி பலன்கள் 2018 May month Kadaga rasi palan in tamil 2018 May rasi palan 2018 May 2018 Kadaga rasi palan May matha Kadaga rasi palan in tamil Kadaga rasi palan May 2018 intha matha rasi palan in tamil 2018 May matha palangal Kadaga Rasi மே மாத கடகம் ராசி பலன்கள் 2018
Leave a Reply