இந்த மாதம் ஆடம்பர செலவுகளை தவிர்த்து அத்தியாவச செலவுகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். மாணவர்கள், ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் கல்வியில் வெற்றி பெறலாம். அரசு துறையில் வேலையில் உள்ளவர்கள் பணி நிமித்தமாக சிறந்த பலன்களைப் பெறலாம். இந்த மாதம் உங்கள் மூத்த சகோதரர்களின் மூலம் உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதற்கான முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படலாம்.