மீன ராசி அன்பர்களே! உங்கள் ராசி அதிபதியும், 10 ஆம் வீட்டை ஆட்சி செய்பவருமான குரு பகவான் (வியாழன் கிரகம்), இந்த 2022 ஏப்ரலுக்குப் பிறகு, உங்கள் ராசிக்கே பெயர்ச்சி ஆகிறார். இது உங்கள் வேலை அல்லது தொழிலில் அசாதாரணமான வெற்றி அல்லது வளர்ச்சியை அளித்து, உங்கள் நீண்ட நாள் விருப்பங்களையும் நிறைவேற்றக்கூடும். இந்த ஆண்டு, பணிகளில் நீங்கள் லட்சியத்துடனும், உத்வேகத்துடனும் செயல்படுவீர்கள் எனலாம். லட்சியங்களை அடைந்து, பணியிடத்திலோ அல்லது சமுதாயத்திலோ, உயர் பதவி அல்லது உயர் நிலையையும் எட்டக்கூடும். தவிர, இந்த ஆண்டு, விளையாட்டு, கலை தொடர்பான முயற்சிகள், ஜோதிடம், அரசியல் ஆகியவற்றுக்கும் சாதகமாக அமையலாம். பல இடங்களிலிருந்து நீங்கள் வருமானமும் ஈட்டலாம். உங்கள் வளம், செல்வாக்கு, செல்வச் செழிப்பு ஆகியவை உயரக்கூடும்; அதிர்ஷ்டமும் உங்கள் பக்கம் இருக்கக்கூடும். எனவே, சிறப்பாகச் செயலாற்றி, இந்த ஆண்டு, உங்கள் திட்டங்கள் அனைத்தையும், நீங்கள் நல்ல முறையில் நிறைவேற்றிக் கொள்ளக் கூடும். சிலர் வெளிநாடுகளில், விரைவான முன்னேறத்தையும் அடையும் வாய்ப்புள்ளது.
கார் போன்ற வாகனங்கள் அல்லது தொலைத் தொடர்புத் துறைகளில் உள்ளோர், இந்த 2022 இல் குறிப்பிடத்தக்க லாபங்களையும், வளர்ச்சியையும் காணக்கூடும். பலருக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு, அங்கீகாரம், மதிப்பு மரியாதை, வெகுமதிகள் ஆகியவை கிடைக்கலாம். சிலருக்குப் புதிய பொறுப்புகளும் அளிக்கப்படலாம்; அவற்றிலும் நீங்கள் நன்றாகச் செயலாற்றக் கூடும். குறிப்பாக, கலைத்துறை, பொழுது போக்குத் துறையில் உள்ளவர்களுக்குப் பெரு வெற்றியும், புகழும் கிடைக்கக்கூடும். விளையாட்டிலும், பல பாராட்டுகளும், வெகுஜன அபிமானமும் கிடைக்கக்கூடும். கூட்டுத்தொழிலும் கூட கணிசமான செல்வம் தரலாம். எனவே, உங்கள் மதிப்பும், செல்வாக்கும் உயரும் ஆண்டாக இது இருக்கக்கூடும்.
பல இளம் வயது மீன ராசி அன்பர்களின் வாழ்வில், இந்த ஆண்டு, காதல் அரும்பும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு மிகவும் ஏற்ற உயிர்த் துணை உங்கள் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவும் வாய்ப்புள்ளது. உணர்ச்சிகளும், வேட்கையும் உங்கள் காதல் வாழ்க்கையில் கொப்பளிக்ககூடும். உங்கள் உள்ளம் கவர்ந்தவர், உங்கள் காதலை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. எனவே, துணையுடன் நீங்கள் சில மறக்க முடியாத தருணங்களை அனுபவிக்ககூடும். மென்மையான அன்பையும், பரிவையும் அவரிடமிருந்து பெறவும் கூடும். எனவே, காதலையும், உறவுகளையும் உயிரோட்டமாக வைத்துக் கொள்வதற்கு, இப்பொழுது நீங்கள் பெரும் முக்கியத்துவம் அளிக்கக்கூடும். மேலும், துணை உங்களிடம், விசுவாசமாகவும், நம்பகத்தன்மையுடனும் நடந்து கொள்வார் என எதிர்பாக்கலாம். தவிர, நீண்ட நாள் காதலர்கள், 2022 இல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
உங்கள் மணவாழ்க்கை ஆனந்தமயமாக இருக்கக்கூடும். அமைதி, வசதிகள், சுகம் என அனைத்தும் அங்கு நிலவக்கூடும். கணவர் அல்லது மனைவியுடனான உறவு, நெருக்கம், பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, புரிந்துணர்வுடன் சிறந்து இனிமையாக இருக்கக்கூடும். காதல் திருமணங்கள் வெற்றி பெறக்கூடும். திருமணத்திற்குப் பிறகு சிலரது வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசக்கூடும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களிடம் அன்பு, பரிவு, மற்றும் ஆதரவுடனும் நடந்து கொள்ளக் கூடும். நீங்களும் அவரிடன் விசுவாசத்துடன் நடந்து கொள்வீர்கள் எனலாம். ஆனால், அவருக்கு ஏற்படும் சில உடல்நிலைப் பிரச்சனைகள், சிறிது காலத்திற்கு, உங்களுக்குப் பதட்டத்தை அளிக்கலாம். எனினும், இந்த 2022 இல், உங்கள் சந்தோஷமும், வசதிகளும் அதிகரிக்கும் என எதிர்பாக்கலாம்.
மீன ராசி அன்பர்களின் செல்வமும், சேமிப்பும் இந்த ஆண்டு அதிகரிக்கக்கூடும். வளத்துக்கும், பணப் புழக்கத்துக்கும் குறையிருக்காது எனலாம். சிலர் அயல் நாடுகளில் மிக அதிக வருமானம் ஈட்டக்கூடும். தொழில் முனைவோர் அதிக ஆதாயமும், லாபமும் ஈட்டக்கூடும். புதிதாகத் தொடங்கப்பட்ட வேலையும், தொழிலும் தழைத்தோங்கக் கூடும். இணையவழி வியாபாரம், ஒப்பனைப் பொருட்கள், ஆடைகள், வாங்கல்-விற்றல் தொழில்கள் அதிக லாபம் தருவதாக அமையக்கூடும். சந்தை விற்பனை மற்றும் விளம்பரத் துறைகளும் கூடுதல் வருமானம் தரலாம். மேலும், சிலருக்கு, மருத்துவம், மருந்துத் (மருந்தகம்) துறைகளின் மூலமாகவும், கணிசமான செல்வம் ஈட்டும் வாய்ப்பு உருவாகக்கூடும்.
அயல்நாடுகளில் உயர்கல்வி பெற விரும்பும் மீன ராசி மாணவர்களின் பிரார்த்தனையும், விருப்பமும் இந்த ஆண்டு நிறைவேறலாம். பொதுவாக மாணவர்கள், கல்வியிலும், தேர்வுகளிலும் மிகச் சிறப்பாக விளங்கக்கூடும். கல்லூரியிலேயே நடைபெறும் தேர்வு முகாம் மூலம், சிலருக்கு நல்ல வேலையும் அமையலாம். சிலர், போட்டி அல்லது நுழைவுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண்களுடன் தேர்வு பெறலாம். மருத்துவம், பொறியியல் மாணவர்களும் மிக நல்ல முறையில் பாடங்களில் சிறக்கலாம். 2022 இல் சிலருக்குக் கல்வி உதவித் தொகையும் கிடைக்கலாம். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று, சிலர் அரசாங்க வேலை அல்லது நிர்வாகத் துறைப் பணியில் அமரலாம். மேலும், இந்த ஆண்டு அதிர்ஷ்டம் உங்களுக்குக் கைகொடுக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.
மீன ராசி அன்பர்கள் இந்த ஆண்டு, ஆரோக்கியத்துடன் இருக்கும் வாய்ப்புள்ளது. எனினும் சிலர், கொழுப்பு அல்லது ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படக்கூடும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவர்கள் உணவிலும், மருந்து எடுத்துக் கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், கல்லீரல், நுரையீரல், இதயம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளோர், இவற்றிலிருந்து குணமடையக் கூடும். வேறு எந்தவித உடல்நிலைப் பிரச்சனைகளும், காயங்கள் ஏற்படுவது போன்றவையும், இந்த 2022 இல், அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை எனலாம். ரத்த அழுத்தம் உள்ளோரும், ஏப்ரல், 2022 க்குப் பின் குணமடையும் வாய்ப்புள்ளது. தவிர யோகா, தியானம், மற்ற உடற்பயிற்சிகளும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடும். எனினும், துரித உணவு வகைகளை, இயன்ற வரை தவிர்ப்பது நல்லது.
வாழை மரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்
வியாழக்கிழமைகளில், மஞ்சள் பயிறு அல்லது பருப்பை ஏழைகளுக்கு தானம் செய்யவும்
வியாழக்கிழமைகளில், விஷ்ணு சாலிஸா மற்றும் சிவ சாலிஸா பாராயணம் செய்யவும்
வியாழக்கிழமைகளில், நெற்றியில், குங்குமம் மற்றும் மஞ்சள் திலகம் இட்டுக் கொள்ளவும்
வியாழக்கிழமைகளில் மாமிச உணவையும், மதுவையும் தவிர்க்கவும்
வியாழக்கிழமை பகல் நேரங்களில், விஷ்ணு பகவானுக்காக விரதம் (உண்ணா நோம்பு) இருக்கவும்
ஆள்காட்டி விரலில், மஞ்சள் நீலமணிக்கல் அணியவும்
எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், குருபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.
உங்களின் ராசிக்கான குருபெயர்ச்சி 2020 பலன்களை அறியவும், குருபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்
குரு ஹோமம் செய்வதன் மூலம், குருவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்