மகர ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 3 மற்றும் 12 ஆம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் (வியாழன் கிரகம்), 2 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது, இந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 வரை, எதிர்பாராத ஆதாயங்களையும், சாதகம் தரும் பயணங்களையும் உங்களுக்கு வழங்கக்கூடும். உங்கள் பொருளாதார நிலையும் நன்றாக இருக்கலாம்; சில திட்டங்களும், ஆசைகளும் நிறைவேறலாம், ஆனால் ஏப்ரல் 12 க்குப் பிறகு உங்கள் 3 ஆம் வீட்டில் நடைபெறும் குரு பெயர்ச்சி, கலவையான பலன்களை உங்களுக்கு அளிக்கக்கூடும். காதல் வாழ்க்கையில் சில பின்னடைவுகள் ஏற்படலாம்; வேலையிலும் ஏற்றத்தாழ்வுகள் வரலாம். அதிர்ஷ்டமும் 2022 இல் மாறிக்கொண்டே இருக்கலாம். செலவுகள் அதிகம் இருந்தாலும், பொருளாதார நிலை ஸ்திரமாகவே இருக்கும். சிலர் கல்விக்காக வெளிநாடு செல்லக்கூடும்; சிலருக்கு அயல்நாடுகளில் நல்ல வேலையும் கிடைக்கக்கூடும். அயல்நாட்டவர் அல்லது அயல் நாடுகளில் ஏற்படும் நடவடிக்கைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் மூலம் நீங்கள் செல்வந்தராகும் வாய்ப்பும் உள்ளது.
சினிமா, கலை, பொழுதுபோக்கு, மாடெலிங், டிஸைனிங் போன்ற துறைகள், இந்த ஆண்டு சில பின்னடைவுகளைச் சந்திக்கலாம். திரைத்துறையிலும் நீங்கள் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கலாம். அதே நேரம், ஏற்றுமதி-இறக்குமதித் தொழில், துவக்கத்தில் நஷ்டம் கொடுத்தாலும், பின்னர் லாபம் தரக்கூடும். மருத்துவம், பொறியியல் துறையில் உள்ளவர்களுக்கும் இது சுமாரான காலமாகவே இருக்கக்கூடும். ஆனால், தகவல் தொழில்நுட்பம், மருந்தகம், சந்தை விற்பனை போன்ற துறைகளில் உள்ளவர்கள், லாபம் ஈட்டக்கூடும்.
அதே நேரம், ஃபேஷன், விளம்பரத் துறைகள் பின்னடைவுகளைச் சந்திக்கலாம். எனினும், ஊடகம், விளையாட்டுத் துறைகளின் சில மகர ராசி அன்பர்கள், வெற்றியும் புகழும் பெறக்கூடும். மேலும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த ஆண்டு, நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும் சாத்தியம் உள்ளது. தவிர வாங்கல், விற்றல் தொழில், உணவுத் தொழில் போன்றவற்றில் உள்ளோருக்கு, சுமாரான வெற்றி கிடைக்கக்கூடும்.
பல மகர ராசி அன்பர்கள், தங்கள் காதல் வாழ்க்கையில் பின்னடைவுகளையும், சோகங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். காதல் தோல்விகளும் ஏற்படலாம். இந்த 2022 இல், இளைஞர் பலருக்கு, அவர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை அமையாமல் போகலாம். சிலருக்குக் கூட்டு வியாபாரம் சாதகம் தரலாம். ஆனால், உங்கள் காதலர் அல்லது காதலி உங்களை ஏமாற்றவும் வாய்ப்பு உள்ளது. தனிமை, மனச்சோர்வு, துயரம் போன்றவை உங்கள் காதல் வாழ்க்கையை பாதிக்கலாம். காதல் தோல்விக்குப் பின், மீண்டு வருவது சிலருக்கு சவாலாக இருக்கலாம்.
மகர ராசி அன்பர்களின் மணவாழ்க்கை, இயல்பாகவும், இணக்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கக்கூடும். எனினும் இந்த ஆண்டு, சிலரது திருமணம் விவாகரத்தில் முடிந்துவிடும் அபாயம் உள்ளது. குடும்ப வாழ்க்கை பொதுவாக அமைதியாகவே சென்றாலும், வாழ்க்கைத் துணை அல்லது குடும்பத்தினருடன் ஏற்படும் சில கருத்து வேறுபாடுகள், உங்கள் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் குறைத்துவிடக் கூடும். இருப்பினும், பொதுவாக, தம்பதிகளுக்கு இடையே, பரஸ்பர மரியாதையும், புரிதலும் நன்றாகவே இருக்கலாம். துணை அல்லது துணைவர் மனதளவிலும், பொருளாத விஷயங்களிலும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார். ஆனால், இந்த ஆண்டு, அவரது ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக அக்கரை செலுத்த வேண்டியிருக்கும். எனினும், அதிக ஆசைகளும், துணைவருக்காக போதிய நேரம் ஒதுக்க இயலாமல் போவதும், வருடக் கடைசியில் ‘யார் பெரியவர்’ என்பது போன்ற சில அகம்பாவப் பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடலாம். ஆயினும், சிலர், குடும்பத்துடன் அழகிய இடங்களுக்குச் சுற்றுலா செல்லும் வாய்ப்புள்ளது.
2022 இல், உங்கள் செலவுகள் அதிகமாக இருந்தாலும், நல்ல வருமானமும், தொடர் பணப்புழக்கமும் நன்றாகவே இருக்கும். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலிருந்து வருமானம் ஈட்டக்கூடும். புதிய வேலை அல்லது தொழில் வருடத் துவக்கத்திலும், இறுதியிலும் அதிக லாபம் தரக்கூடும். ஆயினும் உங்கள் பணியைப் பொறுத்தவரை, சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும். நிலக்கரி, எண்ணெய், இரும்புத் தாது, மரம், போக்குவரத்து, ஜவுளித் தொழில் நன்றாக நடைபெறும். எந்த நிறுவனத்திலாவது பங்கு வைத்திருந்தால், அவை எதிர்பாராத ஆதாயம் தரக்கூடும். ஊக வணிகம் அல்லது முதலீடுகளிலிருந்து வரும் லாபங்கள், உங்களை மகிழ்விக்கக் கூடும். மேலும், விவசாயம் அல்லது சொத்து தொடர்பான வேலையோ, தொழிலோ, இந்த ஆண்டு, கணிசமான லாபங்களை, மகர ராசி அன்பர்களுக்கு அள்ளித் தரக்கூடும்.
சில மகர ராசி மாணவர்களுக்கு, குறிப்பாக வெளிநாடுகளில் கல்வி உதவித்தொகை கிடைக்கக்கூடும். சிலருக்கு, அயல்நாடுகளில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலும், நிறைவேறக்கூடும். பொதுவாக மாணவர்கள், இந்த ஆண்டு பரிட்சைகளிலும், நேர்முகத் தேர்வுகளிலும் பிரகாசிக்கக்கூடும். ஆனால், போட்டித் தேர்வு அல்லது நுழைவுத் தேர்வு எழுதுபவர்களுக்குப், பலமுறை முயற்சித்த பின்னரே வெற்றி கிடைக்கக்கூடும். எனவே, இந்த நேரத்தில் அவர்களுக்குப், பொறுமை மிக அவசியம் எனலாம். ஆனால், மருத்துவ மற்றும் பொறியியல் மாணவர்கள் கல்வியிலும், தேர்விலும் சிறந்து விளங்கக்கூடும். ஆயினும், பள்ளி மாணவர்கள் வகுப்பில் பிரகாசிக்க, கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சில மாணவர்கள், பேச்சுப் போட்டி, விளையாட்டு, தடகளப் போட்டி போன்றவற்றில், தங்கள் பள்ளி அல்லது கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் வாய்ப்புள்ளது.
மகர ராசி அன்பர்களின் உடல்நிலை, பொதுவாக நன்றாகவே இருக்கக் கூடும். ஆனால் சிலர், இந்த ஆண்டு ஏதோ ரகசிய வியாதியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனினும், நோய் எதிர்ப்பு சக்தியும், ஆற்றலும் அதிகம் இருக்கக்கூடும் என்பதால், நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டுளவர்கள் கூட, அதிலிருந்து விடுபடும் வாய்ப்புள்ளது. ஆனால், குடும்பத்தினர் சிலர் நோய்வாய்ப்படலாம்; இதனால் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். யோகா, தியானம், உடற்பயிற்சிகள் மூலம், இப்பொழுது சிலர் தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளக்கூடும். வயது முதிர்ந்தவர்கள், கொழுப்பு சத்து, ரத்தம் தொடர்பான பிரச்சனைகளைக் கட்டுக்குள் வைக்க, தாங்கள் உட்கொள்ளும் உணவில் மிகக் கவனமாக இருப்பது அவசியம். கல்லீரல், இதயம், மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், அவையும் இப்பொழுது தீர்ந்துவிடக் கூடும்.
சனிக்கிழமைகளில் அரச மரத்தடியில் நெய்தீபம் ஏற்றவும்
சனிக்கிழமைகளில், ஏழைகளுக்கும், கண் பார்வை இல்லாதவர்களுக்கும், உணவு, இனிப்பு வினியோகிக்கவும்
சனிக்கிழமைகளில், நாய்கள், பறவைகள், பசுக்களுக்கு உணவளிக்கவும்
தினமும் ஆல மரத்துக்கும், அரச மரத்துக்கும் தண்ணீர் ஊற்றவும்
சனிக்கிழமைகளில் மாமிச உணவையும், மதுவையும் தவிர்க்கவும்
சனிக்கிழமைகளில் பாதாம் பருப்பையும், கடுகு எண்ணெயையும், அந்தணப் புரோகிதருக்கு தானம் அளிக்கவும்
எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், குருபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.
உங்களின் ராசிக்கான குருபெயர்ச்சி 2020 பலன்களை அறியவும், குருபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்
குரு ஹோமம் செய்வதன் மூலம், குருவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்