Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

Viruchagam Rahu Ketu Peyarchi Palangal 2023 | விருச்சிகம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025

August 30, 2023 | Total Views : 1,669
Zoom In Zoom Out Print

ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகம் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் என்று அழைக்கப்படுகின்றன.  ராகு போககாரகன் என்று அழைக்கப்படுகிறது.  நமது விருப்பங்கள் மற்றும் பொருள் வசதிகளை ராகு குறிப்பிடுகிறது.  கேது மோட்சகாரகன்  என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக உணர்வு மற்றும் இறை தொடர்பை கேது குறிப்பிடுகிறது.   இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த நிழல் கிரகங்களின் நிலைகள் ஒவ்வொருவரின்  தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 5 ஆம் வீடாகிய  மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள்  ராசிக்கு 11 ஆம் வீடாகிய   கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 30 அக்டோபர் 2023 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் 2025 மே 18 வரை அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கப்  போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.

விருச்சிகம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023

உத்தியோகம் :- 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சி உங்கள்

தொழில் வாழ்க்கையில் சில சவால்களையும் பிரச்சனைகளையும் தரக்கூடும். உங்கள் பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன, அது உங்கள் முன்னேற்றத்தை தாமதப்படுத்தலாம். உங்கள்  இலக்குகளை நீங்கள் சந்திக்க முடியாத தருணங்கள் இருக்கலாம். உங்கள் தொழிலில்  தேவையான திருப்தியைப் பெற சிறப்பாகச் செயல்பட வேண்டும். பதவி உயர்வுகள் தாமதமாகலாம் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தெளிவான திட்டங்களை வகுத்தும். லாபம் கிடைக்காமல் போகலாம். அரசாங்கத்தில் இருக்கும் ஆட்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். இந்த பெயர்ச்சி மிகவும் கடினமாக இருக்கும் மற்றும் உங்கள் தொழில் தொடர்பான எந்த உணர்ச்சிகரமான முடிவுகளையும் எடுக்க முடியாது.

ராகு கேது பெயர்ச்சி 2023 பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க

காதல் / குடும்ப உறவு :  

ஒற்றையர்களுக்கு இந்த பெயர்ச்சி கலவையான முடிவுகளைத் தரும். அதிகப்படியான பற்றின் காரணமாக உறவில் மோதல்களில் முடிவடையும் சாத்தியக்கூறுகள் உண்டு. காதலர்கள்  கவனமாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் அகங்கார குணங்கள் உறவை அழிக்க விடாதீர்கள். சிறந்த புரிதல் உங்கள் காதல் வாழ்க்கையில் அமைதியான பயணத்தை அளிக்கலாம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்.

குடும்ப உறவு நடுநிலையாகத் தெரிகிறது. குடும்ப உறுப்பினர்களிடையே சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடவோ ஊக்குவிக்கவோ கூடாது. குடும்பப் பொறுப்புகள் கூடும் வாய்ப்புகள் உண்டு. மூத்த உடன்பிறப்பு உறவு சற்று ஆதரவற்றதாகத் தெரிகிறது, திருப்திகரமாக இல்லை மற்றும் பிரச்சினைகள் ஏற்படலாம்.  சில சமயங்களில் நெகிழ்வாக இருங்கள் மற்றும் சங்கடமான சூழ்நிலைகளின் போது கவனமாகப் பேச வேண்டும், அது ஒற்றுமையின்மையைக் குறைக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக இந்த காலகட்டத்தில் பெரும்பாலான செலவுகள் நடக்கலாம்.

திருமண வாழ்க்கை :-

இந்த பெயர்ச்சிக் காலத்தில் உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் நன்றாக   இருக்கும். உங்கள் மனைவி உங்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படலாம். உங்கள் மனைவியிடமிருந்து நீங்கள் பெறும் ஒத்துழைப்பால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் பங்குதாரர் உங்கள் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கலாம் மற்றும் உங்கள் இருப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் விடுமுறை பயணத்திற்கு திட்டமிடலாம். முன்பு இருந்த தவறான புரிதல் முடிவுக்கு வரலாம். புதிதாக திருமணமான தம்பதிகள் குழந்தைப் பேற்றில் தாமதத்தை எதிர்பார்க்கலாம்.

நிதிநிலை :- 

நிதிநிலையைப் பொறுத்தவரை எதிர்பாராத நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் முந்தைய முதலீடுகளிலிருந்து எதிர்பார்க்கப்படும் வருமானம் தாமதமாகலாம். பணத்தை வழங்கவோ அல்லது கடன் கொடுக்கவோ கூடாது. புதிய முன்முயற்சிகள் அல்லது கூட்டு முயற்சிகள் லாபத்தைத் தராது, எனவே முதலீடு செய்வதற்கு முன் ஒன்றுக்கு இருமுறை யோசிக்க வேண்டும். நிதிநிலையில் பெரிய மேம்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. எனவே நீங்கள் செலவழிக்கும் போது அது தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 11 ஆம் வீட்டில் உள்ள கேது விரும்பிய லாபத்தைப் பெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் தரக்கூடும், எனவே உங்கள் நிதி ஒப்பந்தங்களில் புத்திசாலித்தனமாக இருங்கள். முதலீடுகளுக்கு அல்லது கடன்களைப் பெறுவதற்கு ஏற்ற நேரம் அல்ல.

மாணவர்கள் :-

மாணவர்கள் தங்கள் தேர்வில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராபவர்கள்  தடைகள் மற்றும் தாமதங்கள்  சந்திக்கக்கூடும் என்பதால், 100% முயற்சிகளை மேற்கொண்டால் தான்  தேர்வுகளில் தேர்ச்சி பெறலாம். வெளிநாட்டில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் சவால்களையும் தாமதங்களையும் சந்திக்க நேரிடும். நிபுணர்களின் சரியான வழிகாட்டுதலைப் பெறுவது தடைகளை கடக்க உதவும். நீட் மற்றும் பிற தேர்வுகளை எழுதும் மாணவர்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெற அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு பெற்றோர்கள் தார்மீக ஆதரவை வழங்க வேண்டும். குழுவாக சேர்ந்து படிப்பதன் மூலம் பாடங்களை மிகச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்கும் சிறந்த தெளிவைப் பெறுவதற்கும் உதவக்கூடும்.

ஆரோக்கியம் :-  

இந்த பெயர்ச்சி காலத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையை இயக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கலாம். ஏற்கனவே உள்ள உங்கள் உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து குணமடையலாம் மற்றும் மருத்துவ செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கலாம். பிராணயாமம் மற்றும் பிற யோகா நடவடிக்கைகளில் ஈடுபடுவது உங்களை மிகவும் வலிமையாக்கும். அதிக வேலை செய்வதை தவிர்த்து, உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாள்பட்ட நோய்களில் இருப்பவர்கள் மருந்துகளில் இருந்து விடுபடலாம். விரைவில் குணமடைய வழிவகுக்கும் உங்கள் தற்போதைய நோய்களுக்கான சிகிச்சைகளைத் தேட இதுவே சரியான நேரம். அவசரமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும். உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் சில கவலைகளைத் தரக்கூடும், எனவே உங்கள் உட்கொள்ளலில் நீங்கள் கவனமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், ஆரோக்கியமான உணவுத் திட்டம் அதிக பலனளிக்கும் முடிவுகளையும் நிலையான ஆரோக்கியத்தையும் தரக்கூடும்.

பரிகாரங்கள் :-

1)  தினமும் விநாயகர் (கேதுவின் அதிபதி)மற்றும் துர்க்கை (ராகுவின் அதிபதி) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.

2) செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்கா சாலிசா மந்திரத்தையும், தினமும் கணேஷ பஞ்சரத்னம் மந்திரத்தையும்  பாராயணம் செய்யவும்  அல்லது கேட்கவும்.

3) சனிக்கிழமைகளில் கருப்பு நாய்களுக்கு உணவளிக்கவும், அனாதை இல்லங்களுக்கு நீலம் அல்லது கருப்பு நிற ஆடைகளை தானம் செய்யவும்.

4) அருகில் உள்ள கோவிலுக்கு மாதம் ஒருமுறை எண்ணெய் தானம் செய்யுங்கள்.

'ஓம் ராஹவே நமஹ' என்று 18 முறையும், "ஓம் கேதுவே நமஹ' என்று 7 முறையும் ஒரு நாளில் ஜெபிக்கவும்.

banner

Leave a Reply

Submit Comment