AstroVed Menu
AstroVed
search
search

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026

dateApril 9, 2025

பொதுப்பலன் :

உங்கள் ராசியில்  இருந்து  9வது வீடான மிதுன ராசியில் குருபெயர்ச்சி நிகழும். இந்த பெயர்ச்சி மே 15, 2025 அன்று காலை 2:30 முதல் ஜூன் 2, 2026 வரை நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சி காலத்தில் குருவின் பார்வை உங்கள் ராசி, 3 வது வீடு மற்றும் 5 ஆவது வீட்டில் இருக்கும்.

உத்தியோகம் என்று எடுத்துக் கொண்டால், நீங்கள் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி காண்பீர்கள். என்றாலும் நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு அது உதவிகரமாக இருக்கும். பொறுமையாக செயல்படுவதன் மூலம் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நிறுவனத்தின் அனைத்து முக்கிய நோக்கங்களுடன் உங்கள் சொந்த நோக்கங்களை சீரமைக்க இது உங்களுக்கு சிறந்த முறையில் உதவும். உங்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவில் சிறிய மோதல்கள்  இருக்கலாம். உங்களுக்கு இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் எழலாம். சமரசமாக செல்வதும் அனுசரித்து விட்டுக் கொடுத்து செல்வதும் உறவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்.

குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் உரையாடல் பலனளிக்கும் வகையில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் காணப்படும். சூழல் மற்றும்  குடும்ப பிணைப்புகள் சம்பந்தப்பட்ட அனைவரின் மகிழ்ச்சியையும் பலப்படுத்தும். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு இது ஒரு சிறந்த நேரம். ரியல் எஸ்டேட் நீங்கள்  எதிர்பார்க்கும் வகையில் லாபம் அளிக்காது.  எனவே அதில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

சில சமயங்களில், நீங்கள் சிறிய உடல் அசௌகரியங்களை சந்திக்க நேரும். சிறிய தலைவலி அல்லது சளி மற்றும்  அவ்வப்போது வயிறு உபாதைகள் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அதிர்ஷ்டவசமாக, அவற்றிலிருந்து வேகமாக குணமடைவீர்கள். அதிக அளவில்  தண்ணீர் குடிப்பது, மற்றும் முறையான ஓய்வு உங்கள் ஆரோக்கியத்தை சீராக தக்க வைக்க உதவும்.

மாணவர்கள் தங்கள் பள்ளியில் நடை பெறும் விளையாட்டு நிகழ்சிகளில் கலந்து கொள்ளலாம். பள்ளி நிர்வாகம் அதற்கு உதவலாம்.அதே நேரத்தில் மாணவர்கள் தங்கள் கல்விக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். முதுகலை மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள்.

உத்தியோகம்

இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் உத்தியோகத்தைப் பொறுத்தவரை நீங்கள் சில பல  தடைகளை சந்திக்க நேரிடும். பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண உங்கள் அலுவலக மேலதிகாரிகள்  மற்றும் சக ஊழியர்களுடன்  நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வழங்கப்படலாம். பொறுமையுடன் செயல்பட்டால் நிர்வாக எதிர்பார்ப்புகளைப் நீங்கள் பூர்த்தி செய்யலாம்.  இது நிறுவனத்தின் நோக்கங்களுடன் உங்கள் இலக்குகளை சீரமைத்துக் கொள்ள உதவும்.

காதல் / குடும்ப உறவு

குடும்பத்தில் இருக்கும் மூத்த உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.  குடும்பத்தில் நடத்தப்படும் விவாதங்கள் சுதந்திரமாகவும் நல்ல பிணைப்பிற்கு அடித்தளமாகவும்  இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும். பரஸ்பரம் நெருக்கம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் நட்புடன் பழகுவீர்கள்.  மேலும் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த நேசத்துக்குரிய தருணங்களை உருவாக்குவீர்கள். பகிரப்பட்ட எண்ணங்களும் ஆர்வங்களும் உங்களுக்கிடையில் ஆழமான பிணைப்பை உருவாக்க உதவும். உங்கள் இருவருக்கும் இடையே உள்ள நம்பிக்கையும் அக்கறையும் ஆழமடையும்.

திருமண வாழ்க்கை

தம்பதிகளுக்குள் சிறு சிறு சண்டைகள் இருக்கலாம். இருவரின் கருத்துகளும் மாறுபடலாம். வெளிப்படையாக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவது பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்கும். பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்வது உறவில் சுமுக நிலையை அளிக்கும். இருவரும் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்கள் விரைவில் தீரும். அன்பின் உதவியால், தடைகளைத் தாண்டுவது எளிது. உங்கள் உணர்வுகளை நேர்மையாகவும் மரியாதையுடனும் வெளிப்படுத்துங்கள். இது உங்கள் கவலைகளை வெளிப்படுத்த ஒரு பாதுகாப்பான சூழலை  உருவாக்கும்.

நிதிநிலை

இந்தக் காலக்கட்டத்தில் பங்கு சந்தை மூலம் எதிர்காலத்தில் லாபம் காணலாம். ரியல் எஸ்டேட் மூலம் லாபம் கிடைக்கும் என்றாலும் அது அதிக அளவில் இருக்க வாய்ப்பில்லை. பிறரை கண்மூடித்தனமாக  எளிதில் நம்பி கடன் அளிக்காதீர்கள். உங்களால்  அதை திரும்ப பெற இயலாமல் போகலாம்.  உங்கள் பணம் சார்ந்த கொடுக்கல் வாங்கலில் விழிப்புடன் இருங்கள். அனாவசியச்  செலவுகளை மேற்கொள்ளாதீர்கள்.  புத்திசாலித்தனமான முதலீடுகள் மேற்கொள்வது மற்றும்  செலவுகளில் விவேகமாக செயல்படுவது உங்கள் நிதிநிலையை மேம்படுத்தும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் உங்கள் இலக்குகளை அடையலாம்.

மாணவர்கள்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு நடவடிக்கைகளில் தங்கள் ஈடுபாட்டை குறைத்துக் கொண்டு படிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முதுகலை அல்லது பிஎச்டி துறையில்  ஆய்வறிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் தக்க வழிகாட்டிகளைப் பெறலாம்.

ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியம் ஓரளவு நன்றாக இருக்கும். அவ்வப்போது  தலைவலி, சளி மற்றும் சில லேசான செரிமான கோளாறுகள் போன்ற உபாதைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். என்றாலும் அதில் இருந்து நீங்கள் விரைவாக குணமடைவீர்கள். வீட்டு வைத்தியம் நல்ல பலனளிக்கும்.  அதிக தண்ணீர் அல்லது பானங்களைக் குடிப்பது, ஓய்வெடுப்பது மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வது உங்கள் மீட்சியை விரைவுபடுத்தும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உடலுக்கு  போதுமான ஓய்வு கொடுப்பது முக்கியம்.


banner

Leave a Reply