மகரம் செப்டம்பர் மாத ராசி பலன் 2025 | September Matha Magaram Rasi Palan 2025

மகரம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2025:
இந்த மாதம் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்கள் காணப்படும். கணவன்–மனைவிக்கிடையிலான காதல் உறவுகள் சிறப்பாக மலரக்கூடும். பெற்றோர்களுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும். நிதிநிலை கவலை அளிக்கும் வகையில் இருக்கும். தொழிலாளர்களுக்கு தொழில் தொடர்பான கூட்டாளிகளுடன் குழப்பம் ஏற்பட்டு, லாபத்தில் தாமதம் அல்லது குறைவு காணப்படலாம். ஆகவே, மாத இறுதி வரை பெரும் முடிவுகளை எடுக்காமல் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. மன அழுத்தம் மற்றும் சோர்வு செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். பள்ளி மாணவர்களும் இளநிலை கல்லூரி மாணவர்களும் கல்வியில் நன்றாக செயல்படுவர். மேலும் அவர்களுக்கு சக நண்பர்களிடமிருந்து ஆதரவும் பாராட்டும் கிடைக்கும்.
காதல் / குடும்ப உறவு
செப்டம்பர் மாதம் நேசமும் மென்மையும் நிரம்பிய காலமாக இருக்க வாய்ப்பு உள்ளது. துணையுடன் நேரத்தை தரமான முறையில் கழிப்பது, நெருக்கத்தை வளர்க்கவும், மீண்டும் ஒருமுறை அன்னியோன்யம் பெருகவும் வழிவகுக்கும். மகரம் ராசியினரின் வாழ்க்கையில் பெற்றோர்கள் அல்லது பெற்றோர் போன்றவர்கள் இருப்பின், அவர்கள் உணர்வுப்பூர்வமான குழப்பங்களிலும் சிரமங்களிலும் பேருதவியாக இருப்பார்கள்; பாதுகாப்பும் ஊக்கமூட்டும் வகையிலும் அவர்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள். இருப்பினும், உங்களை விட வயதில் மூத்தவர்கள் அல்லது நீண்ட காலமாக உங்களை அறிந்திருக்கும் நண்பர்கள் ஒருசில சவால்களை ஏற்படுத்தக்கூடும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை
நிதிநிலை
நிதி தொடர்பான பிரச்சனைகள் இந்த மாதம் முழுவதும் சிக்கலாகவே இருக்கக்கூடும். வருமானத்தைவிட செலவுகள் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது, குறிப்பாக வீட்டு செலவுகள் அல்லது மருத்துவச் செலவுகளைப் பொருத்தமட்டில் எதிர்பாராத செலவுகள் உருவாகலாம். ஏற்கனவே வாங்கிய கடன்களை செலுத்துவதை கடினமாக உணர்வீர்கள். சேமிப்புகள் குறைவடையலாம். முதலீடுகள், குறிப்பாக ஊக அடிப்படையிலானவை, எதிர்பார்த்த வருமானத்தை தராமல் போகலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
உத்தியோகம்
மகர ராசிக்காரர்களுக்கு, செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக தேக்க நிலையை ஏற்படுத்தக்கூடும். சக ஊழியர்கள் உங்கள் செயல்களை தவறாகப் புரிந்து கொள்ளலாம், திட்டங்கள் கால அட்டவணையில் பின்தங்கக்கூடும், மேலும் உங்கள் மேலதிகாரிகள் உங்கள் பங்களிப்புகளைப் பாராட்டத் தவறிவிடலாம். அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்கள், அதிகாரபூர்வ ஒப்புதல் அல்லது திடீர் இடமாற்றம் காரணமாக ஏற்பட்டிருக்கும் தாமதங்கள் காரணமாக மன அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடலாம். தினசரி ஊதியம் பெற்றுக் கொள்பவர்கள் வேலை வாய்ப்பு குறைவால் மற்றும் சம்பளத் தாமதத்தால் நிதி சிக்கல்களை எதிர்கொள்வார்கள். நிதி மற்றும் வங்கி துறையில் பணியாற்றுபவர்கள் எதிர்பாராத வேலைச்சுமையால் சோர்வடையக்கூடும்; வாடிக்கையாளர் எதிர்ப்புகள் அல்லது ஒழுங்குமுறைப் பிரச்சனைகள் அவர்களை பாதிக்கக்கூடும். விளையாட்டு வீரர்களும், விளையாட்டை ஆர்வமாக பின்பற்றுபவர்களும், தங்களது போட்டி திறமைகளை நிரூபிக்கும் விருதுகள், பாராட்டுகள் அல்லது வாய்ப்புகளைப் பெறக்கூடிய சாதகமான சூழலை அனுபவிக்கக் கூடும்.
உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை
தொழில்
செப்டம்பர் மாதத்தில் வியாபாரம் மந்தமாகவோ அல்லது நிறுத்தப்படுவதுபோலவோ காணப்படலாம். உங்கள் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனையை தாமதிக்கக் கூடும், புதிய வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும், மேலும் சட்ட முறைமைகள் சார்ந்த சிக்கல்களாலும் நீங்கள் தடையடைய வாய்ப்புள்ளது. முன்னேற்றம் மெதுவாக இருக்கும், பங்குதாரர்களிடமிருந்து ஒப்புதலைப் பெறுவது சவாலாக இருக்கலாம். ஏனெனில் அவர்கள் முடிவுகளைப் பற்றிய தங்களது கருத்துகளில் வேறுபாடு கொண்டிருக்கக்கூடும்.
ஆரோக்கியம்
செப்டம்பர் மாதம் முழுவதும் உடல்நிலை அசாதாரணமாகவோ அல்லது பலவீனமாகவோ இருக்க வாய்ப்புள்ளது. மகர ராசிக்காரர்கள் செரிமான குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். ஏற்கனவே உள்ள உடல் நலப் பிரச்சனைகளுக்கு கூடுதல் கவனம் தேவைப்படும். தூக்கமின்மை ஏற்படக்கூடும்; இது உணர்ச்சி சமநிலை இழப்பையும், சரிவு அல்லது நரம்பியல் பலவீனத்தையும் உருவாக்கக்கூடும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : கேது பூஜை
மாணவர்கள்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த மாதத்தில் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களின் முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களும், முதுநிலை படிப்புகள் மற்றும் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களும் அறிவும், நிலைத்தன்மையும், நல்ல வாய்ப்புகளையும் பெறக்கூடும். ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் தங்கள் தீஸிஸ் அனுமதி, நிதி வசதி, போன்றவற்றில் தாமதங்களையும் ஊக்கமின்மை மற்றும் பிற சிக்கல்கள் சந்திக்க வாய்ப்புள்ளது.
கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை
சுப தேதிகள் : 2,3,5,7,9,10,11,13,15,17,18,19,20,22,23,25,27,28,29,30
அசுப தேதிகள் : 1,4,6,8,12,14,16,21,24,26.
