கும்பம் செப்டம்பர் மாத ராசி பலன் 2025 | September Matha Kumbam Rasi Palan 2025

கும்பம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2025:
வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை, குடும்ப உறுப்பினர்கள், காதல் துணை உங்களிடம் எளிதில் கோபம் கொள்ளக் கூடும். நீங்கள் புறக்கணிக்கப்பட்டது போல உணரலாம். தவறான புரிந்துணர்வு காரணமாக உறவில் இடைவெளி பராமரிக்கலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் மந்தமாக இருக்கலாம். நீங்கள் சில பின்னடைவுகளை சந்திக்கலாம். உங்களுக்கு அங்கீகாரம் இல்லாதது போல உணரலாம். பணியிடத்தில் சில பிரச்சினைகளை சந்திக்கலாம். உங்கள் பொருளாதார நிலை ஸ்திரமாக இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். கடன்கள் தீரும். முதலீடுகளின் மூலம் லாபம் மற்றும் ஆதாயங்கள் கிட்டும்.தொழில் புரிபவர்கள் தொழிலில் விரிவாக்கம் காணலாம். கூட்டாண்மை சிறப்பாக இருக்கலாம். லாபங்கள் அதிகரிக்கலாம். உங்கள் ஆரோக்கியம் ஸ்திரமாக இருக்கும். உங்கள் ஆற்றல் மற்றும் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பதட்ட நிலையை சந்திக்கலாம். கவனச் சிதறல் மற்றும் ஆர்வமின்மை காணப்படும்.
காதல் குடும்ப உறவு
உங்கள் தனிப்பட்ட உறவுகளில் பதற்ற நிலை இருக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணை உணர்ச்சி இடைவெளி பரமாரிக்கலாம். அல்லது அதிருப்தியை வெளிப்படுத்தலாம். இது உங்கள் உறவில் குழப்பத்தை ஏற்படுத்தும். உங்கள் பெற்றோர்களின் ஆதரவு இந்த மாதம் கிடைக்காது. அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் காணப்படும். இது உறவில் அமைதியின்மையைக் கொண்டு வரும். காதலர்கள் தங்கள் உறவில் பாதுகாப்பின்மையை உணரலாம். இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் எழலாம். இதனால் விரக்தி ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்கள் அசாதரணமாக நடந்து கொள்ளலாம். நண்பர்கள் பேசாமல் இருக்கலாம். தேவைப்படும் நேரத்தில் ஆதரவு அளிக்காமல் இருக்கலாம். இந்த மாதம் உங்களுக்கு பொறுமை அவசியம். அவசரப்பட்டு எதையும் செய்யாதீர்கள். வார்த்தைகளை விடாதீர்கள். மனதில் சமநிலையுடன் இருங்கள்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் நன்றாக இருக்கும். வழக்கமான வருமானங்கள் வரும். எதிர்பாராத பண வரவு உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். கடன்களை அடைப்பது, பணத்தை சேமிப்பது போன்ற பணம் சார்ந்த எந்த முடிவுகளாக இருந்தாலும் அது நல்ல பலனை அளிக்கும். உங்கள் முதலீடுகளில் இருந்து வருமானம் வரலாம். குறிப்பாக சொத்து. மற்றும் விற்பனை மூலம் வருமானம் கிடைக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை
உத்தியோகம்
இந்த மாதம் உத்தியோகத்தில் மெதுவான முன்னேற்றம் காணப்படும். மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்களுக்கு இது வெற்றிகரமான மாதமாக இருக்கலாம். பணிக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறலாம். பொது அல்லது தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் வேலையில் நிலைத்தன்மை காணலாம். சரியான நேரத்தில் பணிக்கான வெகுமதிகள் பெறலாம். மற்றும் மென்மையான பணிகளை மேற்கொள்ளலாம். தினசரி கூலித் தொழிலாளர்கள் வழக்கமான வேலை நேரங்களையும், முடிந்தவரை சம்பாதிக்கும் வாய்ப்பையும் கொண்டிருக்கலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் கருத்துக்கள், நிலைத்தன்மை மற்றும் சரியான நேரத்தில் செயல்படுவதன் அடிப்படையில் ஒரு திருப்புமுனை மாதத்தைக் கொண்டிருக்கலாம். தொழில்முறை அணுகுமுறை இல்லாததால் சில பிழைகள் இருக்கலாம். பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிபுணர்கள் பயனுள்ள உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் முன்னேற்றங்களை அனுபவிக்கலாம். மென்பொருள் பொறியாளர்கள் திட்டப் பணிகளை முடிப்பதில் வெற்றியை எதிர்பார்க்கலாம். விளையாட்டு வல்லுநர்கள் தங்கள் முந்தைய நிலைக்குத் திரும்புவதைக் காணலாம். பொதுவாக, உங்கள் பணியில் சீராகவும் ஆர்வமாகவும் இருப்பது இறுதியில் வெற்றிக்கு வழிவகுக்கும்.
உத்தியோகத்தில் மேன்மை பெற : கேது பூஜை
தொழில்
இந்த மாதம் தொழில் நன்றாக நடக்கும். தொழில் மூலம் லாபங்கள் கிடைக்கும். இந்த மாதம் அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் விரிவாக்கம் செய்யலாம். வாடிக்கையாளர்கள் தளத்தை விரிவுபடுத்தலாம். கூட்டுத் தொழிலை மேற்கொள்ளலாம். உங்களின் கடந்த கால முயற்சிகளுக்கு இந்த மாதம் பலன் காண்பீர்கள். உங்கள் முடுவெடுக்கும் திறன் மேம்படும்.
ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் கணிசமான முன்னேற்றம் இருக்கும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். கடந்த கால உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். உடற்பயிற்சி மேற்கொள்வது, சரியான உணவு, போதிய தூக்கம் உங்கள் ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தியை தக்க வைத்துக் கொள்ள உதவும். மன அழுத்தங்களை தவிர்ப்பதன் மூலம் மன தெளிவு மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பெறலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த மாதம் சில குழப்பங்களை சந்திக்கலாம். முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அனுகூலமான பலன்களைப் பெறலாம். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் வழிகாட்டுதல் கிடைக்கும். உங்கள் கற்கும் திறன் மேம்படும். இந்த மாதம் நீங்கள் பரிசுகளைப் பெறலாம். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிடுவதற்கும், கருத்தரங்குகளை வழங்குவதற்கும், சர்வதேச மாநாடுகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் இது ஒரு சிறந்த நேரம்.திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் நீடித்த நற்பலன்களைப் பெறலாம்.
கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை
சுப தேதிகள் : 1,4,5,6,7,8,9,11,13,15,17,18,20,21,22,25,27,28,29,30
அசுப தேதிகள் : 2,3,10,12,14,16,19,23,24,26
