AstroVed Menu
AstroVed
search
search

12 ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் 2022 - 2025 | Sani Peyarchi Palangal 2022-2025

dateDecember 21, 2021

கர்மகாரகன் எனப்படும் சனி பகவான் நீதிமான் என்றும் கடின உழைப்பை விரும்புபவர் என்றும் ஜோதிட சாஸ்திரம் மூலம் அறியலாம். மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் நீடித்து இருக்கக் கூடிய வெற்றியை அளிக்கக் கூடியவர் என்றாலும் தாமதமாகத் தான் பலன்களை அளிப்பார். நமது கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை மற்றும் தீய பலன்களை தப்பாமல் அளிப்பவர் சனி பகவான். நல்ல பலன் என்றாலும் தீய பலன் என்றாலும் இம்மி அளவு கூட பாரபட்சமின்றி அளிப்பவர். எனவே சனி அளிக்கும் பலன்களை அனுபவிக்க பொறுமை மற்றும் விடா முயற்சி தேவை. 

பொதுவாக எந்த ஒரு ராசியினர் என்றாலும், அவரவர்  ராசிக்கு 3 ஆம் வீடு, 6 ஆம் வீடு, மற்றும் 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் சனி நல்ல பலன்களையே அளிப்பார்.  சனி பகவான் ஒரு ராசியைக் கடக்க 2½ ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். ராசி சக்கரத்தின் பதினொன்றாம் வீடாகிய லாப ஸ்தானம் மற்றும் தனது சொந்த ராசியில் சனி பகவான் சஞ்சரிப்பதால் பெரும்பாலான மக்களுக்கு நன்மையே நடக்கும். குறிப்பாக பொருளாதாரம், நிதிநிலை சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட நபருக்கு மட்டுமின்றி உலகளவிலும் இந்த நன்மைகள் கிட்டும்.  

சனி பெயர்ச்சி 2022 பரிகார சேவைகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

சனி பெயர்ச்சி 2022-இல், மகர ராசியில் இருந்து கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகும் சனி பகவான்  அங்கு 29 ஏப்ரல் 2022 முதல்  29  மார்ச்  2025 வரையிலும் சஞ்சரிப்பார். மேலும் சனி 12 ஜூலை 2022 முதல் 17  ஜனவரி  2023 வரையிலும் மகர ராசியில் சஞ்சாரம் செய்கிறார். 5 ஜூன் 2022 முதல் 23 அக்டோபர் 2022 வரை சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்கிறார். 

கும்ப ராசியில் சனிபெயர்ச்சி 2022 – 2025 -  பன்னிரண்டு ராசிகளுக்கான பலன்கள் :

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களே ! சனி பகவான், ராசிச் சக்கரத்தின் பதினொன்றாம் வீடாகிய கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேஷ ராசியினருக்கு இந்த பெயர்ச்சி மூலம் நன்மையான பலன்களும் ஆதாயங்களும் கிட்டும். உங்கள் முயற்சிகள் யாவற்றிலும் நீங்கள் வெற்றி காண்பீர்கள். வெற்றியும் லாபமும் படிப்படியாக  கிட்டும். புதிய நட்புகள் மற்றும் புதிய உறவுகள் உண்டாகும். தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகள் தங்கள் தொழிலில்  சிறப்பாகச் செயலாற்றுவார்கள். உத்தியோகத்தில் இருக்கும் ஒரு சில மேஷ ராசி அன்பர்கள் உயர் பதவி கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு ஊதிய உயர்வு இந்த  காலக்கட்டத்தில் உங்களை நாடி வரும். 

இரண்டரை ஆண்டு கால கும்ப ராசி பெயர்ச்சிக் காலத்தில் இடையில் சனி பகவான், மகர ராசியில் ஒரு சில காலம் சஞ்சாரம் செய்வார். அந்த நேரத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். மலை போல வேலைகள் வந்து குவியும். அதன் காரணமாக பதட்டமும், வாழ்வில் போராட்டங்களும் இருக்கும். சில முக்கிய பணிகள் முடிக்க முடியாமல் முடங்கி விடும் சாத்தியங்கள் ஏற்படும். சனியின் வக்கிர கதி சஞ்சாரம் காரணமாக எடுக்கும் முயசிக்ளில் தடைகளும் தாமதங்களும் இருக்கும்.  

சனி பெயர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு விடை தெரிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அழையுங்கள்   

ரிஷபம் :  

உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சனியின் பெயர்ச்சி நடக்கிறது. பத்தாம் இடம் என்பது தொழில் ஸ்தானம் என்பதால் உங்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிட்டும். பணிகள் அதிகமாக இருக்கும். வாழ்வில் முன்னேற்றங்கள் மந்த கதியில் இருக்கும். சில சமயங்களில் செலவினங்கள் அதிகமாக இருக்கும். ரிஷப ராசி அன்பர்களில் சிலர் பணப் பற்றாக்குறையைக் கூட சந்திக்க நேரும். ஒரு சிலரின் குடும்ப வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் பிரச்சினைகள் தலை தூக்கும். அதனால் மகிழ்ச்சியின்மை காணப்படும். குடும்பத்தில் குழப்பமும், பிரிவினையும் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகத்திலும் நீங்கள் சில பின்னண்டைவுகளை சந்திக்க நேரும். பதவி உயர்வ மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதங்கள் காணப்படும். தொழில் செய்பவர்கள் நெருக்கடியான தருணங்களை சந்திக்க நேரும். பெரிய வகையில் ஆதாயங்கள் இருக்க வாய்ப்ப்பில்லை. ஆனால் சிறு சிறு லாபங்கள் கிட்டும். 

வக்கிர கதியில் சனி சஞ்சரிக்கும் காலங்களில் நீங்கள் சில புதிய நேர்மறை மாற்றங்களை சந்திக்க நேரும். நீங்கள் நினைத்த சில முக்கிய காரியங்களை இந்த காலக்கட்டத்தில் நடத்தி முடித்துக் கொள்வீர்கள். மேலும் உங்கள் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் சிறந்த பலனும் அதிர்ஷ்டமும் கிட்டும்.

சனி பெயர்ச்சி 2022 பரிகார சேவைகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

மிதுனம் :

29 ஏப்ரல் 2022 முதல் 29 மார்ச் 2025 வரையிலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வார். ஒன்பதாம் வீடு பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும். இங்கு சனியின் சஞ்சாரம்  வெளி நாட்டின் மூலம் புதிய வாய்ப்புகளை பெற்றுத் தரும். ஒரு சில மிதுன ராசி அன்பர்கள் வெளிநாட்டிற்கு சென்று இந்த இரண்டரை வருட காலங்கள் தங்கும் வாய்ப்பும் கிட்டும். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி பயிலும் பல மிதுன ராசி மாணவர்கள் சிறப்பாகச் செயலாற்றி வெற்றி வாகை சூடுவார்கள். கும்ப ராசியில்  சனி சஞ்சரிக்கும் காலங்களில் திடீர் ஆதாயங்கள் கிட்டும். குறிப்பாக உங்கள் மேலதிகாரிகள் மூலம் ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் முக்கியமான நடவடிக்கைகளில் நீங்கள் ஆதாயம் பெருகும் வகையில் அதிர்ஷ்டம் கூடும். உங்களுக்கான வாழ்க்கைத் துணை கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலர் தங்கள் காதல் துணையை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கைத் துணையாக மாற்றிக் கொள்வீர்கள். மொத்தத்தில் உங்கள் தனிப்பட்ட் மற்றும் தொழில் வாழ்க்கை சீராக ஓடிக் கொண்டிருக்கும். 

12 ஜூலை 2022 முதல் 17 ஜனவரி 2023 வரையிலான காலம் வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடாகிய மகர ராசியில் சஞ்சாரம் செய்வார். இந்த காலக் கட்டத்தில் சில பின்னடைவுகளும் தோல்விகளையும் நீங்கள் சந்திக்க நேரும். நீங்கள் தனிமையை உணர்வீர்கள். கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக நீங்கள் உணர நேரலாம். ஒரு சிலர் தங்கள் துணையை தற்காலிகமாக பிரியக் கூட நேரலாம். கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பில்  தடைகளை சந்திக்க நேரலாம். 2023 முதல் விஷயங்கள் படிப்படியாக முன்னேற்றம் காணும்.

சனி பெயர்ச்சி 2022 பரிகார சேவைகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

கடகம் :

கடக ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு எட்டாம் வீடாகிய கும்ப ராசியில்  சனி பெயர்ச்சி ஆகி சஞ்சாரம் செய்கிறார். எட்டாம் வீடு என்பது பிரச்சினைகளைக் குறிக்கும் வீடு என்பதால் இந்த காலக் கட்டங்களில் நீங்கள் சில எதிர்பாராத பின்னடைவுகளை சந்திக்க நேரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் நீங்கள் சில தற்காலிக தோல்விகளை சந்திக்க நேரும். திருமணமான தம்பதிகளுக்குள் பிரிவினை ஏற்படலாம்., ஒரு சிலர் விவாகரத்து கூட செய்ய நேரலாம்.  ஒரு சில கடக ராசி அன்பர்கள் வேலை அல்லது பதவி இழக்க நேரலாம். தொழில் செய்பவர்கள் சனியின் இந்த பெயர்ச்சிக் காலங்களில் நஷ்டங்களையும் தோல்விகளையும் சந்திக்க நேரும். படைப்புத் துறை, எழுத்துத் துறை, ஜோதிடம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் வெற்றியும் சிறந்த ஆதாயமும் காண்பீர்கள். சுய தொழில் மூலம் நீண்ட காலம் ஆதாயம் பெறுவீர்கள். 

இந்த சனி பெயர்ச்சி காலத்தில, சனி பகவான் ஒரு சில மாதங்கள் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்கிறார். அதன் காரணமாக 2022 ம் வருடத்தின் மத்திம காலங்களில் கடக ராசி அன்பர்களின் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். உங்கள் ராசிக்கு ஏழாம்  வீட்டில் வக்கிர கதியில் சஞ்சரிக்கும் சனி உங்கள் திருமண வாழ்வில் நல்ல பலன்களை பெற்றுத் தருவார். திருமணமான தம்பதிகள் நல்ல செய்திகளை கேட்க நேரும். என்றாலும் பலரின் திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலையற்றதாக இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தாமதங்களை சந்திக்க நேரும். தனிமை உணர்வு இருக்கும்.  

சனி பெயர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு விடை தெரிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அழையுங்கள்

சிம்மம் :

இந்த சனிபெயர்ச்சி காலக் கட்டத்தில் சனியின் சஞ்சாரம்  உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் நடக்கின்றது.  ஏப்ரல் 2022 முதல் மார்ச்  2025 வரை நடை பெறும் இந்த காலக்கட்டத்தில் உங்கள் உத்தியோகம் மற்றும் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். நீங்கள் பாராட்டும் பரிசும். புகழும் பெறுவீர்கள். திருமண வாழ்வு இனிமையாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்வு மற்றும் தொழில் இரண்டிலும் திருப்தி நிலவும்.  கூட்டுத் தொழில் செய்பவர்களும் சிறந்த லாபம் காண்பார்கள்.. ஒரு சில சிம்ம ராசி அன்பர்கள்  வெளிநாட்டு தொடர்பு மூலம் அல்லது வெளிநாட்டில் சென்று வேலை செய்வதன் மூலம் லாபங்களைக் காண்பார்கள்.

2022 ஆம் ஆண்டின் மத்திம காலத்தில் மகர ராசியில் சனியின்  வக்கிர கதி சஞ்சாரம் காரணமாக நீங்கள் சில பதட்டமான தருணங்களை சந்திக்க நேரும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலை தூக்கி பதட்டத்தை அளிக்கும். பணியிடத்திலும் சில போராட்டங்கள் காணப்படும். ஒரு சிலர் வழக்கு பிரச்சினைகளை சந்திக்க நேரும். என்றாலும் வெற்றி உங்கள் பக்கம் தான் இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். அதே சமயத்தில் செலவுகளும் அதிகரித்துக் காணப்படும். ஜூலை 2022 முதல் ஜனவரி  2023 வரை  உங்கள் உடல் பலவீனமாக இருக்கும். 

சனி பெயர்ச்சி 2022 பரிகார சேவைகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

கன்னி :

கன்னி ராசி அன்பர்களே ! உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி பெயர்ச்சி ஆகி 29 ஏப்ரல் 2022 முதல் 29 மார்ச் 2025 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த காலக் கட்டத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சனி பகவான் வெற்றியை அளிப்பார். ஆனால் தொழில் அல்லது வியாபாரம் செய்யும் கன்னி ராசி அன்பர்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் இருக்கும் கன்னி ராசி அன்பர்கள் இந்த பெயர்ச்சி காலக் கட்டத்தில் வெற்றிகளைக் காண்பார்கள். அரசு வேலை அல்லது நிர்வாகம் சார்ந்த வேலைக்குத் தயாராகும் கன்னி ராசி அன்பர்கள் கூடுதல் முயற்சி மற்றும் விடா முயற்சி மூலம் வெற்றி காண்பார்கள். அரசியல் துறை சார்ந்த ஒரு சில கன்னி ராசி அன்பர்கள் உயர் பதவி அல்லது குறிப்பிடத்தக்க வெற்றியைக் காண்பார்கள். வழக்குகளில் உங்களுக்கு சார்பாக தீர்வு கிட்டும். 

2022 ஆம் ஆண்டின் மத்தியில் மகர ராசியில் வக்கிர கதியில் சனியின் சஞ்சாரம் காரணமாக இந்தக் காலக் கட்டங்களில் உங்கள் திருமண வாழ்வில் சில பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் முக்கிய பணிகளை முடிப்பதில் சில தாமதங்கள் ஏற்படும். நீங்கள் சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.ஒரு சிலருக்கு பிரிவினையை சந்திக்க நேரும். ஒரு சிலர் நல்ல நோக்கத்துடன் புதிய திருப்பங்களுடன் வாழ்வை எதிர்கொள்வார்கள்.  

சனி பெயர்ச்சி 2022 பரிகார சேவைகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

துலாம்:

உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சனிபெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சி காரணமாக உங்கள் தனிப்பட்ட வாழ்வில் சில வருத்தங்களும் பிரிவுகளும் ஏற்படும். திருமண வாழ்விலும் சில பிரிவுகளை சந்திக்க நேரும். குடும்பத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் சில துன்பங்களை சந்திக்க நேரும். உங்கள் தொழில் மற்றும் உத்தியோகம் சிறப்பாக இருக்கும். படைப்புத் துறை மற்றும் கலைத் துறையில் இருக்கும் துலாம் ராசி அன்பர்கள் வெற்றி காண்பார்கள். இந்த பெயர்சிக் காலக் கட்டத்தில் பிரபலம் அடைவார்கள். செல்வம் சேர்ப்பார்கள். ஒரு சிலர் வெளி நாட்டிற்குச் சென்று  தங்கள் படிப்பு மற்றும்வேலையில் வெற்றி காண்பார்கள். 

2022 ஆம் ஆண்டின் மத்தியில் மகர ராசியில் சனியின் வக்கிர கதி சஞ்சாரம் காரணமாக குடும்ப வாழ்வில் சில குழப்பங்கள் ஏற்படும். ஒரு சிலரின் திருமண வாழ்வில்  2022 ஆம் ஆண்டின் இடைப் பகுதி முதல் அந்த ஆண்டின் இறுதி வரை சில பிரச்சினைகள் இருந்து கொண்டு இருக்கும். ஒரு சிலர் பிரிவினை அல்லது விவாகரத்து கூட கோரலாம். உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்த செலவினங்கள் ராக்கெட் வேகத்தில் உயரும். ஒரு சில துலாம் ராசி அன்பர்கள் 2022 ஆம் ஆண்டில் பண நெருக்கடிகளை சந்திக்க நேரும். 

சனி பெயர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு விடை தெரிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அழையுங்கள்


விருச்சிகம் :

விருச்சிக  ராசி அன்பர்களே ! உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சனி பெயர்ச்சி ஆகி 29 ஏப்ரல் 2022 முதல் 29 மார்ச் 2025 வரை சஞ்சாரம் செய்கிறார். இங்கு சனியின் சஞ்சாரம் உங்கள் வாழ்வின் முக்கிய அம்சங்களில் சில பிரச்சினைகளையும் தாமதங்களையும் அளிக்கும். ஆரோக்கியக் குறைபாடு காரணமாக தேவையற்ற செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரும்.பெரும்பாலான விருச்சிக ராசி அன்பர்கள் தங்கள் உத்தியோகத்தில் வெற்றியை அனுபவித்து மகிழ்வார்கள். ஒரு சிலர் இந்த பெயர்ச்சி காலக் கட்டத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பெறுவார்கள். என்றாலும் உங்கள் வாழ்வின் முக்கிய விஷயங்களில் காணப்படும் தடைகளும் தாமதங்களும் உங்கள் மனதில் விரக்தியை ஏற்படுத்தும். வெளிநாட்டில் தங்குவதும், வெளிநாட்டில் வேலை செய்வதும் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

2022 ஆம் ஆண்டின் மத்திம காலத்தில் மகர ராசியில் சனியின் வக்கிர கதி சஞ்சார காலக் கட்டத்தில் உங்கள் குழப்பங்களுக்கு திடீர் முடிவு கிட்டும். பிரச்சினைகள் இந்தக் காலக் கட்டங்களில் ஒரு முடிவுக்கு வரும். நீங்கள் இழந்த வெற்றி மற்றும் மகிழ்ச்சியை மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் மீட்டுத் தருவார். உங்கள் நீண்ட கால விருப்பங்கள் இந்தக் காலக் கட்டத்தில் நிறைவேறும். திருமண வாழ்விலும், காதல் வாழ்விலும் காதலும் அன்பும் பொங்கும். 

சனி பெயர்ச்சி 2022 பரிகார சேவைகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

தனுசு :

தனுசு  ராசி அன்பர்களே ! உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சனி பெயர்ச்சி ஆகி 29 ஏப்ரல் 2022 முதல் 29 மார்ச் 2025 வரை சஞ்சாரம் செய்கிறார். சனியின் இந்த பெயர்ச்சி ஊடகம், விளம்பரம், வாணிகம், நடனம் மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த பிற துறைகளில் இருப்பவர்களுக்கு வெற்றியை அளிக்கும். உத்தியோகத்தில் வெற்றி கிட்டும். உயர்வை சந்திப்பீர்கள். உங்களில் ஒரு சிலர் அதிகார பதவியைக் கூட பெறும் வாய்ப்பு உள்ளது. நடிப்பு, எழுத்து,  நிகழ்ச்சி தொகுப்பு போன்ற துறைகளில் இருப்பவர்கள் புகழைப் பெறுவார்கள். விளையாட்டுத் துறை    மற்றும் தடகளத் துறை சார்ந்தவர்கள் செல்வமும், புகழும் பெறுவார்கள். 

2022 ஆம் ஆண்டின் மத்திம காலத்தில் மகர ராசியில் சனியின் வக்கிர கதி சஞ்சார காலக் கட்டத்தில் உங்கள் வாழ்வில் பலவகை வழிகளில் இருந்து நீங்கள் செல்வம் மற்றும் ஆதாயம் பெறுவீர்கள். தொழில் முனைவோர், சுய தொழில் புரிவோர் சிறந்த லாபமும் ஆதாயமும் காண்பார்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். சேமிப்பு உயரும்
மகரம் : மகர   ராசி அன்பர்களே ! உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி பெயர்ச்சி ஆகி 29 ஏப்ரல் 2022 முதல் 29 மார்ச் 2025 வரை சஞ்சாரம் செய்கிறார்.இந்த சஞ்சாரம் வரும் காலங்களில் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வியாபாரத்தில் உள்ளவர்கள் சிறந்த லாபமும் ஆதாயமும் பெறுவார்கள். கல்வி மற்றும் விளையாட்டில் வெற்றி கிட்டும். பல வகைகளிலும் உங்களுக்கு சொத்து சேரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் மகிழ்ச்சியும்  இன்பமும் கிட்டும். உங்கள் திருமண வாழ்வில் இன்பம் பொங்கும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் இருக்கும். இனிய செய்திகள் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். 

2022 ஆம் ஆண்டின் மத்திம காலத்தில் உங்கள் ராசியில் வக்கிர கதியில் சஞ்சரிகும் சனி பகவான் உங்கள் வாழ்வில் சில  பிரச்சினைகளை அளிப்பார். உங்கள் ஆரோக்கியம் பாதிக்கும்.  பணியிடத்தில் உங்கள் எதிரிகள் உங்கள் நன்மதிப்பிற்கு பங்கம் விளைவிப்பார்கள். 

சனி பெயர்ச்சி 2022 பரிகார சேவைகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

கும்பம்:

கும்ப    ராசி அன்பர்களே ! உங்கள் ராசியில்  சனி பெயர்ச்சி ஆகி 29 ஏப்ரல் 2022 முதல் 29 மார்ச் 2025 வரை சஞ்சாரம் செய்கிறார். உங்கள் ராசியிலேயே சனி சஞ்சாரம் செய்வதால் உங்கள் செல்வம் மற்றும் புகழ் வாழ்வில் பெருகும். நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்கள் உத்தியோகத்தில் உயர்வு கிட்டும். நீங்கள் பல வகைகளிலும் ஆதாயம் பெறுவீர்கள். பெரும்பாலான கும்ப ராசி அன்பர்கள். உத்தியோகத்தில் அங்கீகாரம், பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவார்கள். சுய வேலை வாய்ப்பில் இருப்பவர்கள். பெயரும் புகழும் பெறுவார்கள். வெற்றிகள் வந்து குவியும். இந்த பெயர்ச்சி காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். அதே சமயத்தில் உங்கள் செலவுகளும் அதிகரிக்கும்.

2022 ஆம் ஆண்டின் மத்திம காலத்தில் உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீடான மகர ராசியில் வக்கிர கதியில் சஞ்சரிகும் சனி பகவான் 2022 ஆம் ஆண்டின் மத்திம காலத்திற்குப் பிறகு வெளிநாட்டு பயணங்கள் மூலமாக மிகப் பெரிய வெற்றியை தருவார். அதே சமயத்தில் உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். சேமிப்பு குறைவாக இருக்கும் காரணத்தால் பண நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரும்.  யோகா, தியானம், ஜோதிடம், ஆன்மிகம் சார்ந்த துறைகளில் வெற்றியும் மகிழ்ச்சியும் தருவார். 

சனி பெயர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு விடை தெரிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அழையுங்கள்

மீனம்:

மீன ராசி அன்பர்களே ! உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டிற்கு   சனி பெயர்ச்சி ஆகி 29 ஏப்ரல் 2022 முதல் 29 மார்ச் 2025 வரை சஞ்சாரம் செய்கிறார்.இங்கு சஞ்சாரம் செய்யும் சனி உங்கள் வாழ்வில் பல புதிய வாய்ப்புகள் மற்றும் வெற்றியை கொண்டு சேர்ப்பார்.அதிலும் படைப்புத் துறை, கலைத் துறையில் இருப்பவர்கள் சிறந்த வெற்றி காண்பார்கள். ஒரு சில மீன ராசி அன்பர்கள் இந்த பெயர்ச்சி காலக் கட்டத்தில் ஜோதிடம், எழுத்து, நூலாசிரியர் போன்ற துறைகளில் புகழ் பெறுவார்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். வெளிநாட்டில் சிறந்த வெற்றி கிட்டும். வெளிநாடு வெளி நகரங்களில் நீங்கள் சிறந்த வெற்றி காண்பீர்கள். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் வெற்றி மந்த நிலையில் இருந்தாலும் அந்த வெற்றி நிலையான நீடித்த வெற்றியாக அமையும். 

2022 ஆம் ஆண்டின் மத்திம காலத்தில் ஒரு சில மாதங்கள் சனி லாபஸ்தானமாகிய உங்கள் ராசியின் பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் நீங்கள் எதிர்பாராத வகையில் பணம் மற்றும் ஆதாயங்களை பல வழியில் இருந்தும் பெறுவீர்கள். உங்கள் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். 

சனி பெயர்ச்சி 2022 பரிகார சேவைகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்


banner

Leave a Reply