உங்கள் ராசியில் இருந்து பத்தாம் வீடான கும்பத்தில் ராகுவின் பெயர்ச்சியும், நான்காம் இடமான சிம்ம ராசியில் கேதுவின் பெயர்ச்சியும் நிகழும். இந்த பெயர்ச்சி மே 18, 2025 முதல் நடைபெறும். மேலும் ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களும் டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கும். இது 18 மாத கால சஞ்சாரம் ஆகும்.
இந்த பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்க்கலாமா?
பொதுப்பலன்
இந்த பெயர்ச்சிக் காலக்கட்டத்தில் சில சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரும். உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பண விரயம் ஏற்படலாம். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாகனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ஆவணங்களில் கவனம் தேவை. அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. நிலத்தில் முதலீடு செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றும் வாய்வழி தொடர்பான ஒப்பந்தங்களில் ஈடுபட வேண்டாம்.
உத்தியோகம்
உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்கள் கனவுகள் நனவாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிட்டும். தொழிலில் ஏற்றம் இருக்கும். தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். கூட்டாளி மூலம் பன்முக வருமானம் மற்றும் லாபம் கிடைக்கும்.
காதல் / குடும்ப உறவு
தாயுடனான உறவில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களிடம் எல்லை வகுத்துப் பழக வேண்டும். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.
நிதிநிலை
வாழ்க்கைத் துணை மூலம் வருமானம் வரும். தொழில் முயற்சிகள் சீராக இயங்கும் மற்றும் இந்த காலகட்டத்தில் லாபம் ஈட்ட முடியும். தற்போதைய பெயர்ச்சி உங்கள் நிதிக்கு மிகவும் சாதகமான பாதையை குறிக்கிறது, முந்தைய நிதி சிக்கல்களில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.
மாணவர்கள்
இந்தக் காலகட்டம் மாணவர்களுக்குக் கருத்துகளை எளிதில் கிரகித்துக் கொள்ளவும், படிப்பில் சிறந்து விளங்கவும் சிறந்த வாய்ப்பாக அமைகிறது.போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் துறைகளில் வெற்றி காணலாம்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கலாம். கடந்த கால உபாதைகளில் இருந்து நீங்கள் மீள்வீர்கள். என்றாலும் அதிக பணிச்சுமை காரணமாக நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரலாம். யோகா மற்றும் த்யானம் மேற்கொள்வதன் மூலம் அதனை தவிர்க்கலாம். சிறிய உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக நிவர்த்தி செய்து, ஆரம்பத்திலேயே சிகிச்சையளித்தால், விரைவில் குணமடைய உதவுவதோடு, பெரிய மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கவும் உதவும்.
பரிகாரங்கள்:-
1) தினமும் விநாயகர் (கேதுவின் அதிபதி) மற்றும் துர்க்கை (ராகுவின் அதிபதி ) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.
2) காய்கறி உணவைப் பின்பற்றலாம் மற்றும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கலாம் மற்றும் வாரந்தோறும் ஒரு முறை பசுவிற்கு வாழைப்பழம் வழங்கலாம்.
3) சனிக்கிழமைகளில் அனுமனுக்கு உளுந்து வடை சாற்றவும்
4) தினமும் துர்கா மந்திரத்தை ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.

Leave a Reply