மேஷம் : ராகு கேதுவின் பெயர்ச்சியால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். தொழில், வேலைகளில் செழிப்பு, முன்னேற்றம் உண்டாகும். ராகு கும்ப ராசிக்கு மாறுவதால் பொருளாதார சூழல் மேம்படும். பண வரவு அதிகரிக்கும். உங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் குடும்பத்தினர் ஆதரவு தருவார்கள். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது முக்கியம். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். தடைபட்ட அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பதோடு அதில் வெற்றியும் காண்பீர்கள்.
ரிஷபம்: சில சவால்களை சந்திக்க வேண்டி வரலாம். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். வருமானத்தை பெருக்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். தாய் மற்றும் தாய் வழி உறவுகளுடன் கவனமாக இருக்க வேண்டும். தாயின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் உடல் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டும். உறவினர்களிடம் எல்லை வகுத்துப் பழக வேண்டும்.
மிதுனம்: சுபமான செய்திகளை கேட்பீர்கள். வீட்டில் திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். குறைவான உழைப்பைக் கொடுத்து அதற்கு இரட்டிப்பான பலன்களைப் பெறும் யோகம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடி வரும். புதிய வண்டி, புதிய வாகன யோகம் உண்டு.ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு இருக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் கவனமாக கையாள வேண்டும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
கடகம் : உங்கள் ஆன்மீக சிந்தனை வளரும். இறை வழிபாடு மற்றும் சித்தர் வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடன் அதிகம் வாங்கக் கூடாது. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இந்த காலக்கட்டத்தில் தடைபட்ட காரியங்களை மீண்டும் முயற்சிக்காதீர்கள் குறிப்பாக வாகன விஷயத்தில். வாகனத்தில் மிகுந்த கவனம் தேவை. வண்டியில் சாகசம் செய்வதற்கு ஆர்வம் காட்டும் நபர்கள், முடிந்தவரை வண்டியை தொடாமல் இருப்பது நல்லது.
சிம்மம்- கணவன் - மனைவிக்குள் பிரச்னையாகி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். நீங்கள் தொழில் ரீதியாக முன்னேற்றத்தை அடைய முடியும். உத்தியோகத்திற்கு ஏற்ற சூழல், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் உங்களின் சம்பளம் அதிகரிக்கும். பிற்பகுதியில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். வழக்கு தொடர்பான விஷயத்தில் வெற்றியை பெறலாம். உறவு மேம்படும். யாருக்கும் வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். எந்த விஷயமானாலும் யோசித்து செயல்படுங்கள். அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி: கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வீடு மனை வண்டி வாகன விஷயங்களில் கவனம் தேவை.நிலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்ளலாம்.நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண கடின முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வேலை மாற்றம் மற்றும் இட மாற்றம் ஏற்படலாம். வீட்டில் முதலீடு போடலாம். சொந்த வீட்டிற்கு குடிபோகலாம். தாயாரின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கலாம்.
துலாம்: இது உங்களுக்கு அற்புதமான காலக்கட்டம் ஆகும். எல்லா விதத்திலும் ஏற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். குடும்ப உறவில் சில கருத்து வேறுபாடுகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் கூடும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் எல்லா இடத்திலும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
விருச்சிகம்: இந்த பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு நற்பலன்களை அளிக்கும். குடும்பத்தில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடக்கும் பண வரவு உண்டாகும். கடன்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள். புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்து தொடர்பான பிரச்னைகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனம் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் வாகனம் வாங்குவீர்கள்.
தனுசு: இது ஏற்றம் தரும் காலமாக இருக்கும். உங்கள் செயலில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் புதிய முயற்சிகளில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். கடின உழைப்பிற்கான பாராட்டும், பலனும் கிடைத்து மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி அடையும். நிதிநிலையில் நீங்கள் எதிர்பார்த்த வகையில் முன்னேற்றம் இருக்கும்.
மகரம்: இந்த பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும். குறிப்பாக உத்தியோகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல விதத்தில் அதிர்ஷ்டமான சூழல் ஏற்படும். பணபலம் உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. குடும்ப உறவு வலுப்படும்.
கும்பம்: காதலர்களுக்கு நிறைய முன்னேற்றமான சூழல் இருக்கும். வெளியூர்களுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் நட்பு வட்டாரத்துடன் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் இருக்கும். ஏழில் இருக்கும் கேது தவறான துணையை தேடும் வாய்பை தரலாம். கவனம் தேவை. கணவன் மனைவி விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
மீனம்: உங்கள் ராசியில் இருந்து ராகு விலகுகிறார். இனி உங்களுக்கு பல்வேறு சாதகமான பலன்கள் இருக்கும். என்றாலும் ஜென்ம சனி என்பதால் கவனம் தேவை. புதிய தொழில் மற்றும் வேலை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். புதிய முதலீடு விஷயத்தில் கவனம் தேவை. உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற சாதக பலன்கள் உண்டாகும்.

Leave a Reply