AstroVed Menu
AstroVed
search
search

துலாம் அக்டோபர் மாத ராசி பலன் 2025 | October Matha Thulam Rasi Palan 2025

dateSeptember 29, 2025

துலாம் அக்டோபர் பொதுப்பலன்கள் 2025:

இந்த மாதம் உங்கள் அனைத்து உறவுகளிலும் தனிப்பட்ட திருப்தி அதிகரிக்கும். காதல் மற்றும் குடும்ப உறவுகள் நிலையானதாகவும் உற்சாகமாகவும் இருக்கும். சமூக வாழ்க்கையில் நீங்கள் சுவாரஸ்யமான அனுபவங்களை எதிர்நோக்கலாம். எதிர்பாராத செலவுகள் சில நிதி சிக்கல்களை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளதால் பணத்தை கவனமாக செலவிட வேண்டும். வேலைவாய்ப்பில் சில அழுத்தங்கள் தோன்றலாம். இருப்பினும், அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்கள் நல்ல முறையில் செயல்படுவார்கள். மென்பொருள் துறையில் பணியாளர்கள் சில தாமதங்களை எதிர்கொள்ளலாம். ஆனால் நிதி ஆய்வாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். தினசரி கூலி பெறும் பணியாளர்கள் கூட கூடுதல் வருமானத்தை அனுபவிக்க முடியும். வங்கி ஊழியர்கள் மன அழுத்தம் காரணமாக சோர்வடையலாம். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை விஷயங்களில் சவால்களும் வாய்ப்புகளும் ஒரே நேரத்தில் இருக்கும். எனவே விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். மன அழுத்தம் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்க வேண்டியது அவசியம். பள்ளி மற்றும் இளங்கலை மாணவர்கள் சிறப்பாக முன்னேறுவார்கள், ஆனால் முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும்.

காதல்/ குடும்ப உறவு  

அக்டோபர் மாதம் உறவுகளில் ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் காதல் வாழ்க்கை சிறப்பாக முன்னேறும். பாசமும் பரஸ்பர புரிதலும் வாழ்க்கையில் இனிமையை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு வலுவான ஆதரவைக் கொடுக்கலாம்.  மாதத்தின் தொடக்கத்தில் பெற்றோர்களும் பெரியவர்களும் உங்களை ஆசீர்வதிப்பார்கள்.  இது குடும்ப உறவுகளை மேலும் வலுப்படுத்தும். நண்பர்களும் உங்களுக்கு உதவிசெய்வார்கள், இதனால் மனநிறைவு ஏற்படும். மொத்தமாக, சமூக உறவுகள் சாதகமாக இருக்கும், மற்றும் அன்பிற்குரியவர்களிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவை எளிதாகப் பெறலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சந்திரன் பூஜை

நிதிநிலை  

திடீர் பில்கள் அல்லது தாமதமான பணம் செலுத்துதல் உங்கள் நிதி ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும், அதனால் திடீர் கொள்முதல் மற்றும் ஆபத்தான முதலீட்டைத் தவிர்க்கவும், மற்றும் தேவையற்ற கடன் நிலையை உருவாக்காமல் இருக்கவும், முன்கூட்டியே வரவு-செலவுகளை திட்டமிட்டு கண்காணிக்க வேண்டும். இதற்கு ஒரு திட்டமிடப்பட்ட பட்ஜெட் அவசியம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

உத்தியோகம்  

வேலைப்பளு மற்றும் காலக்கெடுவிற்குள்  பணி முடிக்க வேண்டிய கட்டாயம் மன அழுத்தத்தை அதிகரிக்கும். உங்கள் முயற்சி இருந்தாலும், அங்கீகாரம் சில நேரங்களில் தாமதமாகலாம். தவறான புரிதல்கள் அல்லது பணியில் நம்பிக்கையின் குறைவு உந்துதலை பாதிக்கலாம். மேலாளர்கள் மற்றும் சக பணியாளர்களுடன் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தனியார் துறையினர்கள் அதிக பணிகளைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது, அதே சமயம் அரசு துறையினர்கள் பாராட்டு மற்றும் குழுவாக பணிபுரிவதில் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். மென்பொருள் நிபுணர்கள் திட்டங்களில் தாமதங்கள் மற்றும் குழு உறுப்பினர்களுடன் தீர்வு காணப்படாத மோதல்களை எதிர்கொள்ளலாம்.  தினசரி கூலி தொழிலாளர்கள் இந்த மாதம் மிகவும் பிஸியாக இருக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் வாராந்திர கூலி தொழிலாளர்கள் ஊதியத்தை துல்லிய நேரத்தில் எதிர்பார்க்கலாம். நிதி ஆய்வாளர்கள் செழிக்க முடியும், முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் சந்தைகள் சீராக இருக்கலாம். வங்கி ஊழியர்களுக்கு  அதிக வேலைப்பளுவால் பணிகள் சுமையாக இருக்கலாம் மற்றும் தங்களது அமைப்புகளில் சிக்கல்களை சந்திக்கலாம்.

உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை

தொழில்  

இந்த மாதம் தொழில்முனைவோர் பணப்புழக்கத் தொடர்பான சிக்கல்கள் அல்லது ஒப்பந்த ரத்து போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம், குறிப்பாக கூட்டாண்மைகள் சம்பந்தமாக. இருப்பினும், நீங்கள் சுறுசுறுப்பாகவும், திருத்தங்களில் உறுதியாகவும் இருந்தால், காலப்போக்கில் சில மீட்புகளைச் சந்திக்க முடியும். சில துறைகள், புதிய கூட்டாண்மைகள் அல்லது தயாரிப்பு மேம்பாடுகள் மூலம் வளர்ச்சியடைந்து முன்னேறக்கூடும். சட்ட மற்றும் நிர்வாகத்துடனான தடைகள் சில மாற்றங்களை தாமதப்படுத்தலாம்; ஆனால் நீங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால், அவை எதிர்காலத்தில் பலன்களைத் தரும். இந்த மாதம் புதிய மூலதனச் செலவுகள் செய்ய வேண்டாம். மிதமான அளவில் நெட்வொர்க்கிங் செய்வதும், வாடிக்கையாளர்களுடன் உறவுகளை உருவாக்குவதும் முக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியம்

உங்களுக்கு மன அழுத்தம், செரிமான பிரச்சனைகள் மற்றும் லேசான தொற்றுகள் ஏற்படலாம். மோசமான தூக்கம் அல்லது ஒழுங்கற்ற அட்டவணைகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடும். அதிகமாக சாப்பிடாதீர்கள், ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மனரீதியாக உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள், மேலும் உங்கள் மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், நல்ல சமநிலையைப் பராமரிக்கவும். யோகா அல்லது தியானம் போன்றவற்றை மேற்கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

மாணவர்கள்  

மாணவர்கள் தங்களின் நினைவாற்றல் மற்றும் கவனத்தை மையமாக்க முடியும். இதில் ஆசிரியர்களின் ஊக்கம் ஒரு பெரும் உத்வேகமாக செயல்படும். ஆனால், முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர் குழுவினருக்கு கவனச்சிதறல்கள், மன அழுத்தம் அல்லது ஆய்வறிக்கைகளை நேரத்திற்குள் சமர்ப்பிக்க முடியாமை போன்ற சவால்கள் ஏற்படலாம். இது சரியான வழிகாட்டுதல் இல்லாத போது கடுமையான பின்னடைவுகளைக் கொடுக்க வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் முடிவுகளை மேம்படுத்துவதற்கும், உங்கள் திறனைப் பயன்படுத்தி வெற்றியை அடைவதற்கும், தொடர்ந்து முயற்சி செய்து, தகுந்த வழிகாட்டுதலைப் பெறுவது அவசியம்.

கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை

சுப தேதிகள் : 2,3,5,7,9,10,12,14,15,18,19,20,22,24,25,26,27,28,29,30,31

அசுப தேதிகள் :   1,4,6,8,11,13,16,17,21,23


banner

Leave a Reply