AstroVed Menu
AstroVed
search
search

2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி | 2023 New Year Rasi Palangal Simmam

dateJuly 12, 2022

2023 புத்தாண்டு சிம்ம ராசி பொதுப்பலன் 

இது உங்களுக்கு வரவேற்கத்தக்க சரியான ஆண்டாக இருக்கும். உங்களின் திறமைகள் உங்கள் தொழிலில் உங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்  தரலாம். இந்த ஆண்டு உங்களின் தொழில் சார்ந்த லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் துணையுடன் காதல் பயணத்தைத் திட்டமிடலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை நீக்குவீர்கள். நீங்கள் சமூக சேவை செய்யலாம், இது உங்களுக்கு ஆத்ம திருப்தி அளிக்கும். வெளிநாட்டு மொழியைக் கற்கும் வாய்ப்பைப் பெறலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், நீங்கள் சுறுசுறுப்பாக உணரலாம்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

காதல் / குடும்ப உறவு 

உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்கலாம். திருமணத்திற்கான உங்கள் ஆசையை  உங்கள் காதலியால் ஏற்றுக்கொள்ளப்படலாம். நலம் விரும்பிகளின் சம்மதத்துடன் நீங்கள் ஒன்று சேரலாம். தம்பதிகள் தங்கள் இல்லற வாழ்வில் வளமான காலகட்டத்தை அனுபவிக்க முடியும். நீங்கள் ஏதேனும் தவறு செய்தால், உங்கள் ஈகோவை விட்டுவிட்டு, உங்களை மன்னிக்கும்படி உங்கள் துணையிடம் கேளுங்கள்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : பிருகஸ்பதி பூஜை

நிதிநிலை:

இந்த ஆண்டு, உங்கள் நிதி கணிசமாக மேம்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உங்கள் நிதித் தேவைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்ய முடியும். ஆன்மிகப் பணிகளுக்காகவும், புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வதற்கும் பணம் செலவழிப்பீர்கள். உறவினர்களின் வேண்டுகோளின் பேரில் நீங்கள் அவர்களுக்கு நிதி உதவி வழங்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை 

உத்தியோகம்:

இது உங்கள் தொழிலில் முன்னேற்றமான நேரமாக இருக்கலாம். வேலையில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள் மற்றும் உங்கள் பணிகளில் சிறந்து விளங்க இந்த நேரத்தைப் பயன்படுத்துவீர்கள். வேலை சம்பந்தமான பயணங்கள் இருக்கும். உங்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மூத்தவர்களின் ஆதரவைப் பெறலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் பணிகளை முடிக்க முடியும். உங்கள் பணி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம். தகவல் பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவீர்கள்.

உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை 

ஆரோக்கியம் :

இந்த ஆண்டு, உங்கள் வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களை நல்ல உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கும். அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நீங்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.  காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் ஆற்றலை அதிகரிக்க உலர் பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : வைத்தியநாத பூஜை 

மாணவர்கள் :

இந்த ஆண்டு, நீங்கள் கல்வி சாரா செயல்களில் உங்கள் செயல்திறனை மேம்படுத்த முடியும். உங்கள் கல்வி நிறுவனத்தின் சார்பாக சில விளையாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். உங்கள் செயல்திறனுக்காக நீங்கள் பாராட்டு மற்றும் அங்கீகாரத்தைப் பெறலாம். நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று மகிழ்வடையலாம். சில சவால்களை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் ஆறுதல் கூறலாம் 
கல்வியில் சிறந்து விளங்க : சரஸ்வதி பூஜை 

சுப மாதங்கள் : ஜனவரி, மார்ச், மே, ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர்
அசுப மாதங்கள் : பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் நவம்பர் 

பரிகாரம் :

  • உங்கள் வீட்டின் கூரையில் தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
  • தூங்கும் போது உங்கள் அருகில் ஒரு கிளாஸ் தண்ணீரை வைத்து, காலையில் அந்த தண்ணீரை பூச்செடியில் ஊற்றவும்.
  • வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை தாமரை மலர்களால் வழிபடவும்.
  • பிச்சைக்காரர்களுக்கு தொண்டு செய்யுங்கள்.

banner

Leave a Reply