2023 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி | 2023 New Year Rasi Palangal Dhanusu

2023 புத்தாண்டு தனுசு ராசி பொதுப்பலன்:
இந்த ஆண்டு உங்கள் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். திறமையை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். வேலையில் உங்கள் உற்பத்தித்திறன் வெற்றிக்கு வழிவகுக்கும். நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அது மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் ஒரு சுபநிகழ்ச்சி நடைபெறலாம். அரசாங்க அதிகாரிகளால் உங்கள் பணிக்காக வெகுமதி பெற வாய்ப்பு உள்ளது. உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கலாம். குழந்தைப்பேறு கூடும். நீங்கள் பிறருக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் உங்கள் சமூக வட்டத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கலாம். உங்கள் செயல்களால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். மேலும் அவர்கள் உங்களைப் போற்றலாம். உங்கள் அறிவை மேம்படுத்த கலை அல்லது அறிவியலைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் உங்களுக்கு நன்றாக இருக்கலாம்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
காதல்/ குடும்ப உறவு
நீங்கள் நல்ல நேரத்தை அனுபவிக்கலாம். உங்கள் துணை தேவைப்படும் நேரங்களில் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கலாம். தாம்பத்திய வாழ்வில் சிறுசிறு பிரச்சனைகளில் சற்று பொறுமை இழக்க நேரலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகள் நல்லிணக்கத்தை அனுபவிக்கலாம், வீட்டு கடமைகளில் பிஸியாக இருப்பீர்கள். திருமணத்திருக்கு காத்திருப்பவர்கள் இந்த ஆண்டு நல்ல செய்தி கேட்கலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை
நிதிநிலை:
இந்த ஆண்டு நிதி நிலையில் கலவையான பலன்கள் கிட்டும் காலமாக இருக்கலாம். உங்கள் செலவுகளை கவனமாக திட்டமிடுங்கள். உங்கள் முதலீடுகள் மூலம் சில நிதி நன்மைகளைப் பெறலாம். உங்கள் முக்கிய செலவு வீட்டுத் தேவைகளுக்காக ஆடம்பரமான பொருட்களை வாங்குவதாக இருக்கலாம். நண்பர்களுக்கு செலவு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை
உத்தியோகம்:
இந்த ஆண்டு அனைத்து பணிகளிலும் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் பிரச்சனைகளை உண்டாக்கும் எந்த ஈகோவையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் அதிகாரிகளிடமிருந்து கூடுதல் பணிகளைப் பெறலாம். அதனை முடிக்க கூடுதல் நேரம் எடுக்கும். உங்கள் எல்லா வேலைகளையும் கவனமாகவும் சரியாகவும் முடிக்கவும். உங்களுக்கு உதவியாக இருக்கும் சக ஊழியர்களுடன் நட்பாக இருங்கள். உங்கள் வாழ்க்கையில், உங்கள் நல்ல செயல்பாட்டிற்காக நீங்கள் வெகுமதி பெறலாம்.
உத்தியோகத்தில் மேன்மை பெற : சூரியன் பூஜை
ஆரோக்கியம் :
இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியம் இயல்பாக இருக்கும். அதிக வேலை காரணமாக மன அழுத்தம் மற்றும் அதன் காரணமாக நீங்கள் சோர்வாக உணரலாம். கடுமையான டயட்டைப் பின்பற்றுவது நல்லது. தியானத்தை தவறாமல் பயிற்சி செய்வது, மன அமைதியை மேம்படுத்த உதவியாக இருக்கும். உடல்நலப் பரிசோதனை தேவைப்படலாம்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : வைத்தியநாத பூஜை
மாணவர்கள் :
நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் உயர் படிப்பு குறித்த உங்கள் முன் கூட்டிய திட்டமிடல் சிறப்பாக இருக்கும். பிறரை கேட்டு முடிவுகளை எடுப்பதை விட உங்கள் உள்ளுணர்வு கூறுவதை பின்பற்றுங்கள். நீங்கள் பொறுமையுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படல் வேண்டும். உங்களில் ஒரு சிலர் அரசாங்கத்திடம் இருந்து பாராட்டு அல்லது விருது பெறலாம்.
கல்வியில் சிறந்து விளங்க : சரஸ்வதி பூஜை
சுப மாதங்கள் : பிப்ரவரி, மே, ஜூன், செப்டம்பர் மற்றும் நவம்பர்
அசுப மாதங்கள் : மார்ச் , ஜூலை, அக்டோபர் மற்றும் டிசம்பர்
