மிதுன ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026 | Mithuna Rasi Sani Peyarchi Palangal 2023-2026

மிதுன ராசி சனி பெயர்ச்சி 2023 பொதுப் பலன்கள்:
சனி உங்கள் ராசியில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகி அங்கு சஞ்சாரம் செய்யவிருக்கிறார். ஒன்பதாம் வீடு தந்தை, அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீகத்தைக் குறிக்கும். சனி தனது ராசியில், மூலத்திரிகோண ராசியில் சஞ்சாரம் செய்வது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். எட்டாம் வீட்டில் சனியின் சஞ்சார காலத்தில் நீங்கள் தடைகள் எதிர்பாராத பொருளாதார நஷ்டங்கள் மட்றும்மற்றும் பதற்றங்களை சந்தித்து இருப்பீர்கள். அவை அனைத்தும் இப்பொழுது முடிவிற்கு வருகிறது. இந்த சஞ்சார நேரம் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தரும். சனி பெயர்ச்சி 2023 இல் அதிர்ஷ்டம் பெரும்பாலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
சனிப்பெயர்ச்சி 2023-2026 - சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்
உத்தியோகம்:
சனி என்றாலே கடின உழைப்பு மற்றும் பொறுப்புகளை கடமைகளை குறிக்கும். பலன்களை அவர் தாமதமகாத் தான் வழங்குவார். ஆனால் கண்டிப்பாக உரிய பலனை அளிப்பதில் வல்ல்லவர். தடைகள் மற்றும் சவால்கள் உங்கள் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும். என்றாலும் இந்த தடைகளும் தாமதங்களும் கடந்த காலங்களில் இருந்தது போல தீவிரமாக இருக்க வாய்ப்பில்லை. உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். உங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் பலவீனத்தை அடையாளம் கண்டு அதனை வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உத்தியோகத்தில் வெற்றி காண இயலும்.
காதல் / குடும்ப வாழ்க்கை
இளைய உடன் பிறப்புகளுடனான உறவுமுறை சமுகமாக இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் எதிர்பார்க்கும்நேரத்தில் உங்கள் தந்தையின் ஆதரவு கிட்ட வாய்ப்பில்லை. உங்கள் குழந்தைகளின் நடத்தை உங்கள் மனதை பாதிக்கும். நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சில பிரச்சினைகள் தீரும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு இல்லற வாழ்க்கை அமையும்.
திருமண வாழ்க்கை:
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் நெருக்கம் இருக்கும். இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்வீர்கள்.பொறாமை பேராசை போன்ற துர்குணங்களை ஒழித்து விடுங்கள்.
நிதிநிலை:
ஏப்ரல் 2023 வரை பணபுழக்கம் சீராக இருக்கும். அதன் பிறகு நிதிநிலையில் இறக்கம் காணப்படும். நீங்கள் முதலீடுகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு சிலர் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் தொழிலை விரிவுபடுத்த ஒரு சிலர் கடன் வாங்குவீர்கள். நிதி விஷயங்களில் நிபுணர்களின் ஆலோசனைகளை நாடுவது நல்லது.
மாணவர்கள்:
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவார்கள். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். படைப்பாற்றல் பெருகும். அதன் மூலம் பிறரின் கவனத்தைக் கவர்வார்கள்.போட்டித் தேர்வில் பங்கு பெறுபவர்கள் சிறப்பாக தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறுவார்கள். சில சமயங்களில் மாணவர்கள் தங்கள் இலக்குளை அடைவதில் சில தடைகளை சந்திக்க நேரும்.என்றாலும் மனம் தளராமல் முயற்சி மேற்கொண்டால் வெற்றியின் சிகரத்தைத் தொடுவார்கள்.
ஆரோக்கியம்:
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் வாழ்வை அனுபவிக்க இயலும். ஆனால் கிரக நிலைகள் மற்றும் பெயர்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இந்த காலகட்டத்தில் ஒரு சிலருக்கு முட்டி சம்பந்தமான பிரச்சினைகள், சளி அல்லது இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய அளவில் பிரச்சினை என்றாலும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். மனப் பதட்டம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது. உண்ணும் உணவில் கவனம் தேவை. எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
பரிகாரங்கள் :-
- சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்
- ஒவ்வொரு சனிக்கிழமையும் கணபதி, ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுங்கள். ஹனுமார் சாலீஸாவை பாராயணம் செய்யுங்கள்.
- சனிக்கிழமை ஏழை எளியவர்களுக்கு போர்வை மற்றும் ஆடை தானம் செய்யுங்கள்
- அசைவம் மற்றும் மது இவற்றை சனிக்கிழமை தவிருங்கள்
- சனிக்கிழமை நாய், காகம் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் அளியுங்கள்
- மருத்துவமனைக்கு முடிந்த அளவு தொண்டு செய்யுங்கள்
