AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் மே மாத ராசி பலன் 2023 | May Matha Viruchigam Rasi Palan 2023

dateApril 21, 2023

விருச்சிகம் மே மாத பொதுப்பலன்கள் 2023

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த மே மாதத்தில் தங்கள் உடல்நலம் குன்றியும்  குறைந்த தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் வீட்டிலும் வேலையிலும் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆன்மீகம் மற்றும் மத / தர்ம நடைமுறையைப் பின்பற்றுவதில் ஆர்வமாக இருப்பீர்கள்.  மோசமான சூழ்நிலையை கையாளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் மனரீதியாக வலுவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

காதல் / குடும்ப உறவு

விருச்சிக ராசிக்காரர்களுக்கு உறவில் கலவையான பலன்கள் உண்டாகும். மாதத்தின் தொடக்கத்தில் பரஸ்பர புரிதல் இருந்தபோதிலும், மாதத்தின் நடுப்பகுதியில் தவறான புரிதல்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உறவில் ஏற்படும் ஏமாற்றங்கள் குறைந்த சுயமரியாதை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், இந்த மாத இறுதியில் தம்பதியினர் தவறான புரிதலை தீர்க்கலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை:

இந்த மாதம் ஒட்டுமொத்த நிதிநிலை நன்றாக இருக்கும். கடன்கள் உங்களின் ஆற்றலையும் நம்பிக்கையையும் குறைக்கலாம். எதிர்பாராத வருமானம் வரக்கூடும். இந்த காலகட்டத்தில் மருத்துவமனை செலவும் ஏற்படலாம். இந்த மாதத்தில் தாய் மற்றும் வீடு தொடர்பான செலவுகள் கூடும். பங்குச் சந்தையில் ஊக வணிகம் மற்றும் வர்த்தகம் மூலம் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம்:

இந்த மாதம் பணியிடத்தில் சில பிரச்சனைகள் தவிர உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் நன்றாக இருக்கும். பணியிடத்தில் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தவோ அல்லது அதிகாரத்தைத் திணிக்கவோ  முயற்சிக்கக் கூடாது. பணியிடத்தில் யோசனைகளை செயல்களாக மாற்ற கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மாதம் முதலாளி பணியிடத்தில் தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கலாம்.

தொழில் :

இந்த மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் துடிப்பும் துல்லியமான திட்டமிடலும் தேவைப்படலாம். செயல்பாடுகளை இயக்கவும் வணிகத்தை நிலைப்படுத்தவும் அதிக பணம் / பணப்புழக்கம் தேவை. தொழிலில் புதிய  பங்குதாரர்களுடன் பழகும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் வியாபாரத்தில் பெண் ஊழியர்களால் இந்த மாதத்தில் பிரச்சனைகள் / கவலைகள் ஏற்படலாம். இருந்தாலும் வருமான நிலை நன்றாக இருக்கும்.

தொழில் வல்லுனர்கள் :

விருச்சிக ராசியைச் சேர்ந்த தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதத்தில் தொழிலில் நல்ல நேரம் இருக்கும். தொழிலில் தைரியத்தையும் துடிப்பையும் வெளிப்படுத்துவீர்கள், தொழிலில் சக ஊழியர்களுக்கு வழிகாட்டுவீர்கள். சொந்தத் தொழிலில் உள்ள ஒரு தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கலாம். சில சமயங்களில் தொழிலில் சோர்வு மற்றும் தளர்வு போன்ற உணர்வு ஏற்படும்.

தொழிலில் சிறந்து விளங்க : சூரியன் பூஜை

ஆரோக்கியம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் ஆரோக்கியம் மிகவும் கவலையளிக்கும். இக்காலத்தில்  மிகவும் கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும். ஆன்மீகம் மற்றும் தியானத்தில் நேரத்தை செலவிடுவதன் மூலம் இழந்த உந்துதலை திரும்பப் பெற இது ஒரு உகந்த நேரம். இது ஒரு புதிய ஆற்றல் மற்றும் நேர்மறை அதிர்வுகளை மீட்டெடுக்க  உதவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட: அங்காரகன் பூஜை

மாணவர்கள் :

மாணவர்களுக்கு இந்த மாதம்  கல்வி விஷயங்களில் கலவையான பலன்கள் கிட்டும் காலமாக  இருக்கும். இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு உடல் நலம் குறைவதோடு, காயங்களும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதத்தில் உயர்கல்வி பெற நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

கல்வியில் சிறந்து விளங்க : முருகர் பூஜை

சுப தேதிகள் : 1, 2, 3, 11, 12, 13, 14, 17, 18, 19, 20, 21, 27, 28, 29, 30 & 31.

அசுப தேதிகள்  : 4, 5, 6, 7, 8, 22 & 23.


banner

Leave a Reply