கன்னி ராசிக்காரர்களுக்கு, உங்கள் ராசியில் இருந்து ஆறாம் வீடான கும்பத்தில் ராகுவின் பெயர்ச்சியும், 12-ஆம் இடமான சிம்ம ராசியில் கேதுவின் பெயர்ச்சியும் நிகழும். இந்த பெயர்ச்சி மே 18, 2025 முதல் நடைபெறும். மேலும் ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களும் டிசம்பர் 5, 2026 வரை அந்தந்த ராசிகளில் இருக்கும். இது 18 மாத கால சஞ்சாரம் ஆகும். .
இந்த பெயர்ச்சி உங்களுக்கு அளிக்கும் பலன்களை பார்க்கலாமா?
பொதுப்பலன்
இந்த பெயர்ச்சி குறிப்பிடத்தக்க தொழில்முறை வளர்ச்சிக்கு வழி வகுக்கலாம். உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இடமாற்றம் இருக்கலாம். உங்கள் அனைத்து விருப்பங்களையும் கவனமாக பரிசீலிக்கவும். உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுப்பதைத் தவிர்க்கவும். வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு, அதற்கான சாதகமான நேரம் இது. கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிந்துணர்வு காரணமாக உறவில் நெருக்கம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.
உத்தியோகம்
இந்த பெயர்ச்சி காலத்தில் உங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றமும் வளர்ச்சியும் இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவீர்கள். உங்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு, அதற்கான சாதகமான நேரம் இது. வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றியும் லாபமும் கிடைக்கும்.
காதல் / குடும்ப வாழ்க்கை
காதலர்கள் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் உறவு திருமண உறவாக மாறலாம். குடும்ப உறுப்பினர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் எழலாம். இடமாற்றம் இருக்கலாம். குடும்ப விஷயங்களில் எந்தவொரு முடிவையும் உணர்ச்சி வசப்படாமல் எடுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவ நீங்கள் பொறுமை காக்க வேண்டும். வெளிப்படையாகப் பேச வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிந்துணர்வு காரணமாக உறவில் நெருக்கம் அதிகரிக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு தொடர்பான மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். சில தம்பதிகள் கனவு இலக்கை நோக்கி பயணத்தைத் தொடங்கலாம். இது அவர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
நிதிநிலை
நிலையான வருமானம் மற்றும் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம். முதலீடுகளுக்கு இது ஒரு சிறந்த நேரம். எனவே இந்த சாதகமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்பு உள்ளது. பங்குச் சந்தை மற்றும் ஊக வணிகங்கள் மூலம் கூட லாபகரமான வருமானத்தைக் காணலாம்.
மாணவர்கள்
இந்த பெயர்ச்சி மாணவர்களுக்கு மிகவும் சாதகமான காலகட்டத்தை குறிக்கிறது. உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். முறையான தூக்கம் மற்றும் போதுமான ஒய்வு அவசியம்.
பரிகாரங்கள்:-
1. விநாயகப் பெருமானையும் (கேதுவின் அதிபதி ) மற்றும் துர்க்கை (ராகுவின் அதிபதி ) ஆகியோரையும் தினமும் வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுங்கள்.
2. சனிக்கிழமைகளில் கருப்பு நாய்களுக்கு உணவளிக்கவும்.
3. சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு போர்வைகளை தானமாக வழங்கவும், அனாதை இல்லங்களுக்கு இனிப்புகள் மற்றும் பழங்களை வழங்கவும்.
4. 'ஓம் ராஹவே நமஹ' என்று 18 முறையும், "ஓம் கேதுவே நமஹ" என்று 7 முறையும் ஒரு நாளில் ஜெபிக்கவும்
5. அருகில் உள்ள சிவன் கோவிலில் அபிஷேகத்திற்கு பால் வழங்கி அருள் பெறவும்.

Leave a Reply