AstroVed Menu
AstroVed
search
search
x

நேர மேலாண்மை திறன் அளிக்கும் கால பைரவர்

dateJune 23, 2023

பைரவர் சிவபெருமானின் அம்சமாக கருதப்படுகிறார்.  வாரத்தின் ஒவ்வொரு நாளும் பைரவருக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து நன்மைகளைப் பெறலாம்.

பொதுவாக அஷ்டமி திதி  என்பது பைரவர் வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான  நாள். தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறறலாம் என்பது ஐதீகம். அன்று வழிபடுவதன் மூலம் அனைத்து கஷ்டங்களும் நீங்கி சகல விதமான நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

காலத்தை தனது கட்டுக்குள் வைத்திருப்பவர் கால பைரவர்.  காலத்தைத் தாண்டி வெல்லக் கூடிய ஆற்றல் பெற்றவர். கால பைரவரின் திருமேனியில் 9 கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரை வழிபடுவதன் மூலம் நல்ல நேர மேலாண்மைத் திறன் மற்றும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அவர் உங்கள் கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவதன் மூலம் உங்கள் விதியை மாற்றுவார்.

அவரை வணங்குவதன் மூலம்: 

உங்கள் கடன்கள் தீரும்.

நேரத்தை திறமையாகக் கையாளும் திறன் கூடும்

நல்ல அதிர்ஷ்டம் & ஒட்டுமொத்த செழிப்பு கிட்டும்

நிதி நிலைத்தன்மை கிட்டும்

கர்ம வினைகள் அகலும்

புதிய வாய்ப்புகள் கூடும்

முயற்சிகளில் வெற்றி கிட்டும்

கண் திருஷ்டி நீங்கும்

ஏவல் பில்லி சூனியம் அண்டாது

கால பைரவர் சனி பகவானின் குருவாகக் கருதப்படுகிறார். எனவே, சனிக்கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம்  கர்ம கிரகமான சனியின்  பாதகமான பலன்களிலிருந்து விடுபடலாம்.


banner

Leave a Reply