AstroVed Menu
AstroVed
search
search
x

சிம்மம் ஜூலை மாத ராசி பலன் 2023 | July Matha Simmam Rasi Palan 2023

dateJune 14, 2023

சிம்மம் ஜூலை மாத பொதுப்பலன் 2023:

சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், முயற்சிகளில் வெற்றியும் கூடும். மாதப் பிற்பகுதியில் செலவுகள் கூடும். இந்த காலகட்டத்தில் ஆன்மீக நாட்டம் மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் அறிவை விரிவுபடுத்தலாம். நீங்கள்  இந்த மாதத்தில் தொலைதூரப் பயணங்களில் ஈடுபடலாம். மொத்தத்தில், இந்த மாதம்  சராசரிக்கு மேல் இருக்கும்.

காதல்/ திருமண உறவு :

திருமண வாழ்க்கையில் தவறான புரிதல்கள் ஏற்படலாம். மனைவி அல்லது துணையுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதன் மூலம் நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடும். காதல் உறவு அடுத்த கட்டத்திற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இந்த மாதத்தில் உண்டு. இருப்பினும், புதிய நபர்களுடனான உறவில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையில் சில ஈகோ மோதல்கள் ஏற்படலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சனி பூஜை

நிதிநிலை :

இந்த மாதத்தில் நிதி விஷயங்களில் நல்ல காலம் இருக்கும். நல்ல பண வரவைக் காணலாம் மற்றும் இந்த காலகட்டத்தில் பரம்பரை சொத்துக்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பங்குச் சந்தையில் முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவையும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்களுக்கு நிதி ஆதாயங்கள் நிச்சயமாக உள்ளது.

உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை

உத்தியோகம் :

சிம்ம ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை இந்த மாதத்தில் சீராக இருக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். இந்த மாதத்தில் சக ஊழியர்களுடன் பணியிடத்தில் அவ்வப்போது மோதல்களை சந்திக்கலாம். உத்தியோக விஷயமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் பண வரவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சுதந்திரமாக செயல்பட முடியும்.

தொழில் :

சிம்ம ராசிக்காரர்களின் வியாபாரம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பின்னடைவுகள் அல்லது பங்குதாரர்களுக்குள் தவறான புரிதல்கள் இருக்கலாம். தொழிலுக்கான முதலீடுகளைப் பெறுவது  கடினமாக இருக்கலாம். வருவாயின் மூலம் பண வரவு இந்த மாதத்தில்  நன்றாக இருக்கும். அதிர்ஷ்டமும் யோகமும் இந்த காலகட்டத்தில் உங்கள் வியாபாரத்தில் செழிக்க உதவும்.

தொழில் வல்லுனர்கள் :

சிம்ம ராசி வல்லுநர்கள் தொழிலில் கண்ணியமான மற்றும் தொழில்முறை சூழலைக் காணலாம். பண வரவும் நன்றாக இருக்கும். நீங்கள் தொழிலில் பிறருக்கு வழிகாட்டுதலை வழங்கலாம்.  சில நேரங்களில் பணியிடத்தில் மன அழுத்தத்தை அனுபவிக்கலாம். இந்த மாதத்தில் தொழிலில் வாடிக்கையாளர் தளம் விரிவடையும் என்பதில் நீங்கள் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் பெண்களின் துணையால் உங்களுக்கு அனுகூலம் உண்டாகும்.

தொழிலில் முன்னேற்றம் காண : அங்காரகன் பூஜை

ஆரோக்கியம் :

சிம்ம ராசிக்காரர்களின் ஆரோக்கியம் இந்த மாதத்தில் மிதமானதாக இருக்கும். உடல் வெப்பநிலை அதிகரிகலாம்.  மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அளவு குறையலாம்.   அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நீர்சத்தை தேவையான அளவில் பராமரிக்க வேண்டும். இந்த மாதம்  தூக்கத்தில் ஓரளவு தொந்தரவுகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் மன அழுத்தத்தையும் கண்காணிக்க வேண்டும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : முருகர் பூஜை

மாணவர்கள் :

சிம்ம ராசி மாணவர்களுக்கு இம்மாதத்தில் கல்வி மிதமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உயர்கல்வி விஷயங்களில் பின்னடைவை எதிர்கொள்ளும் அதே வேளையில் சில பகுதிகளில் வெற்றி இருக்கலாம்.  குருக்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரிய வழிகாட்டுதலைப் பெறுவர். மனக்குழப்பங்கள் இருந்தாலும்  கடின உழைப்பின் மூலம் பாடங்களில்  தெளிவு பெறலாம் மற்றும் இந்த காலகட்டத்தில் வெற்றியை ருசிக்கலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை

சுப தேதிகள் : 1, 4, 5, 6, 7, 13, 14, 15, 16, 17, 25, 26, 27, 28 & 29.

அசுப தேதிகள் : 8, 9, 10, 18, 19, 20, 21 & 22.


banner

Leave a Reply