Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

தனுசு ஜூலை மாத ராசி பலன் 2023 | July Matha Dhanusu Rasi Palan 2023

June 14, 2023 | Total Views : 941
Zoom In Zoom Out Print

தனுசு ஜூலை மாத பொதுப்பலன் 2023:

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் ஒரு நல்ல காலம் இருக்கும். பிறர் இந்த காலகட்டத்தில் உங்களது  ஈகோ மோதல்களை தூண்டலாம். குழந்தைகளைப் பற்றிய கவலையைக் காணலாம். ஆன்மீகம் மற்றும் மதத்தின் மீது அதிக நாட்டம் இருக்கலாம். தந்தை மற்றும் குருக்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

காதல் / குடும்ப உறவு :

உறவு விஷயங்களில் மகிழ்ச்சியையும் தாம்பத்திய சுகத்தையும் பெறலாம். வாழ்க்கைத் துணைக்கு ஈகோ இருந்தாலும், நீங்கள்  அனுசரித்தும் விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்வீர்கள். இந்த மாதம் வாழ்க்கைத் துணை மூலம் ஆன்மீக / மத நன்மைகளைக் காணலாம். மாதத்தின் பிற்பகுதியில் காதல் மற்றும் உறவு விஷயங்களில் சிறந்த முடிவுகள் இருக்கும். குடும்ப வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : புதன் பூஜை

நிதிநிலை :

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பண நிலை நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதன் மூலம் வருமானத்தை அனுபவிக்க வாய்ப்புகள் உள்ளன. தொழில் மூலம் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். அதுவும் இந்த மாதத்தில் மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.  மாதம் முழுவதும் சிறந்த பொருளாதார வசதிகளை அனுபவிக்கலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம் :

ஜூலை மாதத்தில் தொழில் திடீர் மாற்றங்களுக்கு உள்ளாகலாம் மற்றும் அது உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். பணியிடத்தில் நீண்டகால சாதனைகளுக்கு பதவி உயர்வு மற்றும் அங்கீகாரம் எதிர்பார்க்கப்படுகிறது. போனஸ் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இந்த மாதத்தில் அதிகம். இந்த மாதத்தில் வேலையின் காரணமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். மாதத்திற்கான பிற்பகுதி தொழிலில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.

தொழில் :

வியாபாரம் செய்யும் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் நல்ல காலம் இருக்கும். வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் முதலீட்டின் மூலம் வணிகத்தில் பங்குதாரர்களிடமிருந்து உதவி கிடைக்கும். நீங்கள்  இந்த மாதத்தில் வணிக நிர்வாகக் கொள்கைகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரலாம்.  கடன் சுமை குறையலாம்.

 

தொழில் வல்லுனர்கள்:

தனுசு ராசிக்காரர்களும் இந்த மாதத்தில் அவரவர் செய்யும் தொழில்களில் சுகமான காலத்தை அனுபவிக்கலாம்.  வருமான வரவு உங்களுக்கு  மிகவும் நன்றாக இருக்கும். தொழில் சம்பந்தமாக உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் ஒத்துழைப்புகள் மற்றும் புதிய வணிக ஒப்பந்தங்கள் இருக்கலாம். சொந்த தொழிலில் ஆவணப் பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும்.

தொழிலில் சிறந்து விளங்க : புதன் பூஜை

ஆரோக்கியம் :

எலும்புகள் மற்றும் நரம்புகள் தொடர்பான சில பிரச்சினைகள் தவிர, தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அவற்றின் தீவிரம் மிகவும் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் ஏற்படலாம். முந்தைய உடல்நலக் குறைவு நடப்பு மாதத்தில் முன்னேற்றம் அடையும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை

மாணவர்கள் :

தனுசு ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் நல்ல காலம் இருக்கும். தேர்வுகளில் அதிர்ஷ்டம்  அவர்களுக்கு சாதகமாக இருப்பதை அவர்கள் காணலாம்.  இந்த மாதத்தில் ஆசிரியர்கள் மற்றும் குருக்களின் நல்லாசி கிட்டலாம். இக்காலகட்டத்தில் மாணவர்கள் அறிவுத்திறனும் ஞானமும் விரிவடைவதைக் காணலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : ராகு பூஜை

சுப தேதிகள்: 6, 7, 8, 9, 13, 14, 15, 16, 17, 23, 24, 25 & 26.

அசுப தேதிகள் : 1, 2, 3, 18, 19, 20, 27, 28, 29, 30 & 31.

banner

Leave a Reply

Submit Comment