Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

குருப்பெயர்ச்சி 2025: செல்வம்,மற்றும் யோகம் பெறும் 5 ராசிகள் எது தெரியுமா?

February 3, 2025 | Total Views : 15,282
Zoom In Zoom Out Print

குருப்பெயர்ச்சி 2025: குரு பகவான் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். குருப்பெயர்ச்சியால் இந்தப் புத்தாண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது, தொழிலில் முன்னேற்றம் ஏற்படப் போகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்காலம்..

இந்த ஆண்டில் மூன்று முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. அவற்றுள் ஒன்றாக குருபெயர்ச்சி அமைகிறது. குருபகவான் வருடம் ஒரு முறை பெயர்ச்சி ஆகிறார். அந்த வகையில் இந்த ஆண்டின்  தொடக்கத்தில் குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாவார். தனகாரகன், புத்திரகாரகன் என்று அழைக்கப்படும் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

குருப்பெயர்ச்சி 2025 to 2026

இந்த குருப்பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு யோகமான நற்பலன்கள் கிட்டும். அந்த வகையில், இந்த ஆண்டு எந்நெந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் சேரும், அவரின் பார்வையால் யாருக்கெல்லாம் முன்னேற்றம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம். குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் சஞ்சரிப்பார். வரும் 2025 புத்தாண்டில் குரு பகவான் மிதுன ராசிக்கும், அதிசாரமாக கடக ராசிக்கும் பெயர்ச்சியாகி மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புகிறார். மே 14 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், அக்டோபர் 18 ஆம் தேதி கடக ராசிக்கும் மாறுகிறார். நவம்பர் 11 ஆம் தேதி கடக ராசியில் இருந்து குரு வக்கிர பெயர்ச்சியாகிறார். டிசம்பர் 5 ஆம் தேதி வக்கிரப் பெயர்ச்சியில் உள்ள குரு மீண்டும் மிதுன ராசிக்குள் நுழைகிறார். அதைத்தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுன ராசியில் மீண்டும் நேர்முகமாக பெயர்ச்சியாக தொடங்குகிறார்.

குரு தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை செழிப்பாக இருக்க வைப்பார். குருபார்க்க  கோடி நன்மை என்று கூறுவார்கள். குருவின் சிறப்புப் பார்வை  5, 7, 9 ஆகிய இடங்களில் இருக்கும். குரு பகவான் மிகச் சிறப்பான பலன்களை தரக்கூடியவர். ராசிக்கு இரண்டாம் இடத்திலும், 11 ஆம் இடத்தில் அமர்ந்திருந்தாலும் அற்புதமான பலன்களை குரு பகவான் தருவார். அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டில் குரு பகவான் நற்பலன்களை அள்ளித் தரப் போகிறார் என்பது குறித்து  பார்க்கலாம்.

குருப்பெயர்ச்சி 2025 ரிஷபம் : (Guru Peyarchi 2025 ‎Rishabam)

இதுவரை உங்கள் ராசியில் சஞ்சரித்த குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்திற்கு, மிதுன ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு அதிக நற்பலன்களை அளிக்கும். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் திடீர் பண வரவு அளிக்கக் கூடும். அது உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும்.    உங்கள் உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில் சிறப்பாக நடக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொட்ட காரியங்களில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து  காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள்.  பொன், பொருள் என அனைத்து செல்வங்களும் சேரும். ஆடம்பரமான வாழ்க்கை இருக்கும்.

குருப்பெயர்ச்சி 2025 சிம்மம் : (Guru Peyarchi 2025 ‎‎Simmam)

இது வரை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரித்து வந்த குருபகவான் இந்த பெயர்ச்சியில் லாப ஸ்தானம் எனப்படும் 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருக்கிறார்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். வீட்டில் சுப நிகழ்வு ஏற்படும். பொருளாதாரம் உயரும். வருமானம் உயரும். மதிப்பு மரியாதை கூடும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். . புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆனாலும், உங்களுக்கு இந்த வருடம்  அஷ்டம சனி தொடங்குவதால் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. புதிய முதலீடு, சேமிப்பு செய்வதை கவனமாகச் செய்ய வேண்டும்.

குருப்பெயர்ச்சி 2025 துலாம்: (Guru Peyarchi 2025 ‎‎Thulam)

துலாம் : குருவின் ஐந்தாம் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால்  உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிட்டும். உங்களுக்கு தாராளமான பணப்புழக்கம் ஏற்படப்போகிறது. குபேர யோகம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும். ராசிக்கு 9 ஆம் இடத்தில் குருவின் பெயர்ச்சி நடைபெறுவதால் அற்புதமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரம் உயரும். வேலைகளில் முன்னேற்றம் காண்பீர்கள்.  வீடு வாகன யோகம் ஏற்படும். நினைத்த விஷயங்கள் கைகூடும். பூர்வீகம் சார்ந்த விஷயங்கள் நன்மை தரும். மாணவர்களுக்கு போட்டி தேர்வு, விளையாட்டு தொடர்பான விஷயங்களில் வெற்றி உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நண்பர்கள் உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மனக் கஷ்டங்கள் நீங்கி நிம்மதியுடன் வாழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

குருப்பெயர்ச்சி 2025 தனுசு : (Guru Peyarchi 2025 ‎‎‎‎‎Dhanusu)

தனுசு ராசிக்காரர்களின் ராசி அதிபதியான குரு பகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கவுள்ளார். இந்த ஆண்டில் நடைபெறும் குருப் பெயர்ச்சியால் பல நன்மைகள் கிடைக்கவுள்ளது. கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம், அன்பு, ஆதரவு, இணக்கம் உண்டாகும். தொழில், வியாபரத்தில் பங்குதாரர்களின் உதவியால் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அலுவலகங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களுக்கான பொறுப்புகள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து வெற்றி காண்பீர்கள்.

குருப்பெயர்ச்சி 2025 கும்பம்: (Guru Peyarchi 2025 ‎‎‎‎‎Kumbam )

கும்பம்:  இந்த பெயர்ச்சி உங்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். ​ வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை ஏற்படும். வசதி வாய்ப்புகள் அதிகமாகும். நினைத்த விஷயங்கள் நடக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சுய ஜாதகத்தில் தசா புத்தி நன்றாக இருந்தால், இந்த குரு பெயர்ச்சி பலன்களை பரிபூரணமாக நீங்கள் அனுபவிக்க முடியும். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உங்களுக்குத் தேவையான மற்றும் விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும்  இந்த குருப்பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்துக்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தைப் பேறு கிட்டும். காதலர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். தொழில்கள், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். என்றாலும் ஏழரைச் சனி நடப்பதால் புதிய தொழில், முதலீடு போன்றவற்றில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

banner

Leave a Reply

Submit Comment