AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025 | August Matha Viruchigam Rasi Palan 2025

dateAugust 1, 2025

விருச்சிகம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள் 2025:

இந்த மாதம் நீங்கள் நேர்மறையான  பலன்களைப் பெறுவீர்கள். தொட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் உபரி வருமானம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். தொழில் செய்பவர்கள்  வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கலாம். அதிக செலவுகள் இருக்கும் என்றாலும்  எதிர் கால நலன் கருதி நீங்கள் பணத்தை சேமிக்கவும் செய்வீர்கள். உங்களில் ஒரு சிலர் புதிய  தொழில் தொடங்க நினைக்கலாம். இந்த மாதம் கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கவனத்திறன்  அதிகரிப்பதைக் காண்பார்கள். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்.

காதல்/ குடும்ப உறவு  

காதலர்கள் தங்கள் உறவில் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். திருமணமான தம்பதிகளுக்கு இடையே உறவில் இடைவெளி இருக்கலாம்.  உங்கள்  வாழ்க்கைத் துணை உங்களிடம் இருந்து விலகி செல்வது போல உணரலாம். அனுசரித்து செல்வதன் மூலம் உறவில் நல்லிணக்கத்தைப் பராமரிக்கலாம்.  உறவில் சமரசம் செய்து கொள்ள இயலும். தலைமுறை வேறுபாடுகள் பெரிதாகி வருவதால், பெற்றோருடனான தொடர்புகள் கூட இறுக்கமாக இருக்கலாம். என்றாலும் உங்கள் குடும்பத்தின் பெரியவர்களுடன் நீங்கள் வளர்த்துக் கொண்ட உறவு, அர்த்தமுள்ள உரையாடல்கள் அல்லது வாழ்க்கை அனுபவத்தைப் பற்றிய பகிரப்பட்ட கண்ணோட்டங்கள் மூலம் நீங்கள் சுமுகமான உறவை வளர்க்க இயலும். உங்கள் உடன்பிறப்புகள் உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கலாம்.   உங்கள் அண்டை வீட்டாரும் ஆறுதலான கண்ணியமான உரையாடல்களால் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் ஆச்சரியமான விதமாக அனைவரின் ஆதரவு மற்றும் அரவணைப்பைப் பெறுவீர்கள்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை  

இந்த ஆகஸ்ட் மாதத்தில் நிதி வசதி மிகுதியாக இருக்கும், நீங்கள் கடந்த காலத்தில் எடுத்த ஒரு முதலீடு இறுதியாக பலனளிக்கலாம், அல்லது இரண்டாவது உத்தியோகம் அல்லது  ஃப்ரீலான்ஸ் வேலை வருமானத்தைத் தரத் தொடங்கும். நீங்கள் பட்ஜெட் அமைத்து வரவு செலவுகளை மேற்கொள்வது நல்லது. இது உங்கள் பணத்தை பத்திரப்படுத்த உதவும். அதே நேரத்தில் சிறிய, ஆச்சரியமான பண வரவுகள்  உங்கள் சேமிப்பிற்கு பங்களிக்கும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை

உத்தியோகம்

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த  மாதம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். சக பணியாளர்களுடன் உங்களுக்கு நல்லுறவு காணப்படும். மேலும் உங்கள் இயல்பான வசீகரம் மிகவும் கடினமான சக ஊழியர் அல்லது வாடிக்கையாளரைக் கூட வெல்லும். உங்கள் முயற்சிகளுக்கு பதவி உயர்வு அல்லது அங்கீகாரம் கிடைக்க இந்த மாதம் ஏதுவானதாக உள்ளது. இந்த மாதம் வாய்ப்புகளை உருவாக்க நெட்வொர்க்கிங் ஒரு சிறந்த வழியாகும், மேலும்  எப்போது  வேண்டுமானலும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். உங்கள் உத்தியோகத்தில்  சிந்தனைமிக்க நகர்வுகளைச் செய்யவும் இதுவே நேரம். நீங்கள் புதிதாக வேலை தேடவும், குழுவாக பணியாற்றவும், அல்லது புதிதாக ஏதாவது ஒன்றைத் தொடங்கவும் இது சிறந்த மாதம் ஆகும். பொது மற்றும் அரசு ஊழியர்கள்  வேறு ஒரு பிரிவுக்கு மாறவும் அங்கீகாரம் அல்லது இடமாற்றம் பெறவும் சிறந்த மாதம். தேங்கி நிற்கும் பணிகளை இந்த மாதம் முடித்து அளிப்பீர்கள். மென்பொருள் துறையில் பணிபுரிபவர்கள் குழுவினருடன் ஒத்துழைத்து சிறப்பாக பணியாற்றுவார்கள். சுகாதாரத் துறையினர் அதிக பொறுப்புடன் பணியாற்றுவார்கள்.

உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை

தொழில்  

இந்த மாதம் உங்கள் தொழில் நன்றாக நடக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டுத் தொழில் இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.  மேலும் மாதத்தின் நடுப்பகுதியில், எதிர்பாராத புதிய கூட்டாண்மைகள் உருவாகலாம் .நீங்கள்  ஒரு தொழில்முனைவோராக இருந்தால், உங்கள் பிராண்ட் இந்த மாதம் பிரபலம் ஆகும் மேலும் மேம்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான வழிகளில் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். உங்கள் மென்மையான ஆனால் உறுதியான அணுகுமுறைகள் மூலம் நீங்கள் வாடிக்கையாளர்களின் மரியாதையைப் பெறுவீர்கள். உங்கள் நிலையான பணி நெறிமுறைக்கான அங்கீகாரம் பெறலாம். தொழில் சம்பந்தப்பட்ட உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

ஆரோக்கியம்  

இந்த மாதம்,  உங்கள் உடலும் மனமும்  ஆரோக்கியமாக சமநிலையில் இருக்கும். நீங்கள் ஆரோக்கியத்தைப் பராமரித்தால் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் நன்றாக இருப்பீர்கள். லேசான உடற்பயிற்சிகள், காலை நடைப்பயிற்சி அல்லது யோகா பயிற்சி செய்வது இப்போது உங்களுக்கு சரியானதாக இருக்கும். சுத்தமான உணவு மற்றும் நீரேற்றத்துடன் இருப்பது உங்கள் செரிமானம் மற்றும் சருமத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும்.  இசை கேட்பது அல்லது இயற்கையில் நேரத்தை செலவிடுவது போன்ற அமைதியான தருணங்களைக் காணும்போது மன அழுத்தமின்றி உணருவீர்கள். உங்கள் தூக்கம் மேம்படும், அதனால் நீங்கள் முழுமையாக புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : புதன் பூஜை

மாணவர்கள்  

இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறையலாம். பாடங்கள் புரியாத உணர்வு இருக்கலாம். கல்லூரி மாணவர்கள் சில சிரமங்களை உணரலாம். ஆராய்ச்சி மாணவர்கள் சில தடைகளை எதிர் கொள்ளலாம்.  மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது விரக்தி அதிகரிக்கும். சற்று அமைதியாகவும் ஆறுதலாகவும் இருக்க முயலுங்கள். உங்கள் முன்னேற்றம்  நீங்கள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லாமல் இருக்கலாம். என்றாலும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.  

கல்வியில் சிறந்து விளங்க : சூரியன் பூஜை

  சுபதேதிகள் :1,2,3,5,7,8,9,10,11,13,15,17,19,20,21,22,24,25,26,27,28,29,30,31

 அசுப தேதிகள்  :  4,6,12,14,16,18,23.


banner

Leave a Reply