AstroVed Menu
AstroVed
search
search

சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023 | August Matha Simmam Rasi Palan 2023

dateJuly 20, 2023

சிம்மம் ஆகஸ்ட் 2023 பொதுப்பலன்கள்:

சொந்த மற்றும் தொழில் வாழ்க்கையில் நீங்கள்  மன அழுத்தத்தை சந்திக்க நேரலாம்.  இந்த மாதம் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். குழந்தைகள் மூலம் ஏமாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த மாதத்தில் குடும்பத்தில் ஈகோ மோதல்கள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள்.

காதல்/ குடும்பு உறவு

இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த உறவு மிதமானதாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உறவில் ஈகோ மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும். முதிர்ச்சியற்ற நடத்தை காரணமாக காதலில் பின்னடைவுகள் ஏற்படலாம். இந்த மாதத்தில் திருமண வாழ்க்கை / உறவில் எதிர்பார்ப்புகளை குறைந்தபட்ச அளவில் வைத்திருக்க வேண்டும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை:

ஆகஸ்டு மாதத்தில் ஒட்டுமொத்தமாக மிதமான நிதி நிலைமை இருக்கலாம். அரசு வரி  மற்றும் சுயநலத்திற்காகச் செலவு செய்யலாம். பெற்றோர் மற்றும் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளும் இருக்கலாம். உத்தியோகம் மற்றும் தொழிலுக்காகவும் செலவுகள் ஏற்படலாம். பங்குச் சந்தையில் வர்த்தகம் மற்றும் ஊக வணிகம் ஆகியவை உங்களுக்கு  சாதகமாக இருக்கும்.

உங்கள் நிதிநிலை மேம்பட :புதன் பூஜை

உத்தியோகம்

இந்த மாதம்  உத்தியோகத்தில்  இடமாற்றங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களுடன்  மாற்றங்களைக் காணலாம். பெண் ஊழியர்களால் இழப்புகள் அல்லது தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். நீங்கள்  பணியிடத்தில் தலைமைத்துவ திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறலாம். இருப்பினும், இந்த மாதத்தில் பணியில் சக பணியாளர்கள் மற்றும் கீழ் பணிபுரிபவர்களுடன் ஈகோ மோதல்கள் ஏற்படலாம்.

தொழில்:

உங்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரத்தில்  இந்த மாதத்தில் போராட்டங்களையும் நஷ்டங்களையும் சந்திக்க நேரலாம். முதலீடுகளின் முதிர்வுக்கான ஆதாயத்தை , விரிவாக்கத்திற்காக வணிகத்தில் மீண்டும் உங்களால் முதலீடு செய்யப்படலாம்.  வியாபாரத்தில் தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தை செயல்படுத்தலாம். இருப்பினும், இந்த காலகட்டத்தில் பணியாளர்களுடன் பிரச்சினைகள் இருக்கலாம். வியாபாரத்தில் பங்குதாரர்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம்.

தொழில் வல்லுனர்கள்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் தொழிலில் அறிவு மற்றும் ஞானத்தை மேம்படுத்தும் வகையில் மிதமான காலகட்டத்தை கடப்பார்கள். தொழிலில் பணவரவு நன்றாக இருக்கும்.  தொழிலில் அதிகாரம் இருக்கலாம். நீங்கள்  தொழிலில் நம்பிக்கையை வெளிப்படுத்துவீர்கள். இந்த மாதத்தில் வாக்குவாதங்கள் மற்றும் ஈகோ மோதல்கள் இருக்கலாம்.

தொழிலில் சிறந்து விளங்க : சுக்கிரன் பூஜை

ஆரோக்கியம் :

உங்களின் உடல்நிலை இந்த மாதத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் உடலில் ஏற்படும் அழுத்தத்தை தவிர்க்கலாம்.  தந்தையின் உடல்நிலை கவலைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம், மற்றும்  தாய்க்கு சிறிய உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

மாணவர்கள்:

சிம்ம ராசி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் கல்வி அம்சங்கள் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வழக்கமான கல்வி விஷயங்களில் சிறந்து விளங்குவதோடு, பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை வளர்ப்பதற்கான தைரியத்தையும் நம்பிக்கையையும் மாணவர்கள்  வளர்த்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்  மற்றும் பெற்றோரின்  ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். கல்வியில் வெளிநாட்டு வாய்ப்புகள் தொடர்பான விஷயங்களும் இந்த மாதத்தில் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

கல்வியில் சிறந்து விளங்க : சனி பூஜை

சுப தேதிகள் : 1, 2, 3, 4, 9, 10, 11, 12, 13, 22, 23, 24, 25, 29, 30 & 31.

அசுப தேதிகள் : 5, 6, 14, 15, 16, 17 & 18.


banner

Leave a Reply