மிதுனம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025 | August Matha Mithunam Rasi Palan 2025

மிதுனம் ஆகஸ்ட் 2025 பொதுப்பலன்கள்:
இந்த மாதம் உங்களுக்கு வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். உங்கள் வசீகரிக்கும் திறன் அதிகரிக்கும். இதனால் உறவுகளில் நல்லிணக்கம் இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அக்கம் பக்கத்தினருடனான உறவு வலுப்படும். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். என்றாலும் நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பணத்தை விவேகத்துடன் கையாள வேண்டும். தேவையற்ற செலவுகளை மேற்கொள்ளாதீர்கள். தொழிலைப் பொறுத்தவரை நிதானம் தேவை. இந்த மாதத்தில் ஆரோக்கியம் சீராக இருக்கலாம். சில நேரங்களில், குறைந்த ஆற்றல் நிலை இருக்கலாம். இந்த மாதம் கல்வி சிறப்பாக இருக்கும். படைப்பாற்றல் மற்றும் கற்றல் மீதான ஆர்வம் அதிகரிக்கும். திறந்த மனதுடனும், புதிவற்றை கற்கும் ஆர்வத்துடனும் செயல்பட வேண்டும். ஒட்டுமொத்தமாக, ஆகஸ்ட் உங்களுக்கு ஒரு சிறந்த மாதம், உறுதியாகவும், நெகிழ்வாகவும், ஆர்வமாகவும் இருங்கள், ஏனென்றால் இது நிறைய உற்சாகமான மற்றும் அர்த்தமுள்ள முன்னேற்றங்களைக் கொண்ட ஒரு மாதம். இந்த மாதம் பிரகாசமான தருணங்கள் நிறைந்ததாக இருக்கலாம்!
காதல்/ குடும்ப உறவு
நீங்கள் பிறரை உங்கள் பால் கவர்வீர்கள். காதலர்கள் தங்கள் உறவில் மகிழ்ச்சி இருக்கக் காண்பார்கள். கணவன் மனைவி உறவில் நல்ல புரிந்துணர்வு காணப்படும். அதன் காரணமாக அன்னியோன்யம் அதிகரிக்கும். இருவரும் ஒன்றாக நேரத்தை கழிப்பது மற்றும் பொழுதுபோக்குகளை அனுபவிப்பது தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதை உணரலாம். பெற்றோர் மற்றும் பெரியவர்களைப் பொறுத்தவரை, இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அவர்கள் அர்த்தமுள்ள இதயப்பூர்வமான உரையாடல் மூலம் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். உங்கள் அண்டை வீட்டார் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சூரியன் பூஜை
நிதிநிலை
உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் ஸ்திரமாக இருக்கும். அதிகப்படியான தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். திடீர் செலவுகள் இந்த மாத மத்தியில் எழலாம். எனவே பண விஷயங்களில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. அவசர தேவைக்கு பணத்தை ஒதுக்கி வைப்பது நல்லது. அவசர நேரத்தில் அந்தப் பணம் கை கொடுக்கும். உங்கள் வருமானத்தை அதிக ஆபத்துள்ள முதலீடுகள் அல்லது திடீர் கொள்முதல்களுக்கு ஒதுக்குவதற்குப் பதிலாக, நல்ல பட்ஜெட் அமைத்து அதன்படி செயல்படுங்கள். . உத்தியோக ரீதியாக நீங்கள் எதிர்பார்க்கும் பணம் உங்களுக்கு உடனடியாக கிடைக்காமல் போகலாம்; எப்படியிருந்தாலும், எச்சரிக்கையாக இருப்பது நீண்ட காலத்திற்கு பலனளிக்கும்.
உங்கள் நிதிநிலை மேம்பட :பிருகஸ்பதி பூஜை
உத்தியோகம்
உத்தியோகத்தில் அதிக அளவு முன்னேற்றம் காண வாய்ப்பில்லை என்றாலும் நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றியை அடைவதற்கான பாதையை அமைத்துக் கொள்ள முயல்வீர்கள். உங்கள் தகவல் தொடர்புத் திறன் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பின்னடைவுகள் மற்றும் தோல்விகள் இருந்தாலும் அதில் இருந்து கற்றுக் கொள்வீர்கள். தனியார் துறையில் உள்ள ஊழியர்கள் வேலை பளு அதிகரிக்கக் காணலாம். பொதுத்துறை ஊழியர்கள் பணியிடத்தில் தாமதங்களை சந்திக்கலாம். வெளிநாடு சார்ந்த முயற்சிகளை பொறுமையுடன் மேற்கொள்ள வேண்டும். ஒன்றிற்கு இரண்டு முறை ஆராய வேண்டும். மென்பொருள் வணிகத்தில் உள்ளவர்கள் சிக்கல்கள் அல்லது பிழைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மருத்துவர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் ஒரு பலனளிக்கும் மாதமாக இருக்கலாம்
உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை
தொழில்
இந்த மாதம் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாதீர்கள். இருக்கும் தொழிலை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள. வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து நடந்து கொள்ளுங்கள். கூட்டுத் தொழிலை இந்த மாதம் தவிர்க்கவும். வாய்ப்புகளைத் தேடி உங்கள் நேரத்தை வீணடிக்காமல் இருக்கும் தொழிலை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் இருந்தால் அதனை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுங்கள்.
ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்க நிலை இருக்கலாம். அதிக பணிகள் காரணமாக நீங்கள் சோர்வை உணரலாம். முறையான ஓய்வை மேற்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். அதிக நீர் பருகுதல், ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான தூக்கம் ஆகியவை இப்போது அவசியம். மன ரீதியாகவும் நீங்கள் சோர்வாக உணரலாம். ஒரு நாட்குறிப்பில் எழுதுவது அல்லது நடை பயிற்சி மனதை அமைதிப்படுத்தவும் எண்ணங்களைத் தெளிவுபடுத்தவும் உதவும். இந்த நேரத்தில் தீவிரமான உடற்பயிற்சியை விட யோகா அல்லது நடனம் போன்ற லேசான பயிற்சிகள் அதிக நன்மை பயக்கும்..
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சந்திரன் பூஜை
மாணவர்கள்
இந்த மாதம் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கல்வி சாரா கலைகளில் ஆர்வம் செலுத்தலாம். குழுவாகப் படிக்கும் போது உங்களால் எளிதாக படித்து முடிக்க இயலும் என்றாலும் கவனச் சிதறல் காரணமாக படித்து முடிப்பதில் தாமதம் இருக்கலாம். கல்லூரி மாணவர்களுக்கும் கவனச் சிதறல் பிரச்சினை இருக்கலாம். என்றாலும் உத்திகளைப் பயன்படுத்தி படிப்பதன் மூலம் அவர்கள் சிறப்பாக செயல்படலாம். முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தெளிவாகவும் சிறப்பாகவும் செயல்படுவார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க : கேது பூஜை
சுப தேதிகள் : 1,4,5,6,8,10,12,13,14,15,17,18,19,20,22,23,25,27,28,29,30,31
அசுப தேதிகள் : 2,3,7,9,11,16,17,21,24,26
