மகரம் ஆகஸ்ட் 2023 பொதுப்பலன்கள்:
இந்த காலகட்டத்தில் உங்களின் கவனம் குடும்ப விஷயங்களில் தொடர்ந்து இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழையாமை உங்களுக்கு கவலை அளிக்கும். நிதி நெருக்கடிகளும் இருக்கலாம். நீங்கள் வாழ்க்கையில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் சர்ச்சைகள் மற்றும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
காதல்/குடும்ப உறவு
இந்த ஆகஸ்ட் மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு உறவு விவகாரங்கள் சிக்கலாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில் மனைவி அல்லது துணையுடன் வாக்குவாதங்கள் மற்றும் தேவையற்ற தவறான புரிதல்கள் இருக்கலாம். இல்லற சுகம் இல்லாமல் இருக்கலாம். வாழ்க்கையில் தனித்து விடப்பட்டதாக உணரலாம். பொறுமையும் விடாமுயற்சியும் மட்டுமே உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை
நிதிநிலை:
இந்த மாதம் நிதி நிலை சுமாராக இருக்கும். ஆனால் அதிர்ஷ்டமும் காணப்படலாம் மற்றும் பங்குச் சந்தை மூலம் லாபம் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான வருமானம் வராமல் பின்னடைவை ஏற்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் தந்தை மற்றும் மூதாதையர் சொத்துக்கள் மூலம் ஆதாயம் கூடும். எதிர்பாராத விதமான செலவுகள் நிதி விஷயங்களில் தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் பணத்தை சேமிக்க இயலாமையும் உணரப்படும்.
உங்கள் நிதிநிலை மேம்பட : சனி பூஜை
உத்தியோகம்:
உங்கள் உத்தியோக வாழ்க்கையில் ஏமாற்றங்களையும், பின்னடைவையும் சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் பெண்களால் பணியிடத்தில் வாக்குவாதங்கள் மற்றும் பிரச்சினைகள் இருக்கலாம். பணியிடத்தில் சில சங்கடங்களை சந்திக்க நேரலாம். . இந்த உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சக ஊழியர்களும் முதுகில் குத்தலாம், எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தொழில்:
உங்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரம் இந்த மாதத்தில் தேக்க நிலை காணும் மற்றும் வணிக கூட்டாளர்களிடமிருந்து விலகும் நிலை வரலாம். கட்டுப்பாடற்ற செலவுகள் இருக்கலாம். அரசாங்க விதிமுறைகள் கடுமையானதாக இருக்கலாம். உங்கள் செயல்பாட்டில் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் மற்றும் வியாபாரத்தில் மீண்டு வருவதற்கு தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
தொழில் வல்லுனர்கள்:
மகர ராசிக்காரர்களுக்கு மிதமான காலம் இருக்கலாம். ஆவண விஷயங்களில் முன்னெச்சரிக்கை தேவை. சக ஊழியர்களுடனும் வாடிக்கையாளர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். பெண் கூட்டாளிகள் தொழிலில் சாதகமற்றவர்களாக மாறலாம். தொழிலில் செய்யப்படும் முதலீடு எந்த நோக்கத்திற்காகச் செய்யப் பட்டதோ அந்த நோக்கத்திற்காக சரியாகப் பயன்படுத்தப்படாமல் போகலாம்.
தொழிலில் முன்னேற்றம் காண : சுக்கிரன் பூஜை
ஆரோக்கியம் :
மகர ராசிக்காரர்களின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். இதற்கிடையில், உங்களுக்கு இன்னொரு பிரச்சனை வரலாம். இந்த காலகட்டத்தில் பெற்றோரின் உடல்நிலை கவலைக்குரியதாக இருக்கலாம். குறிப்பாக இந்த மாதத்தில் கால் பகுதியில் எலும்பு தொடர்பான காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை
மாணவர்கள்:
மகர ராசி மாணவர்கள் கல்வி விஷயங்களில் தடைகளையும், தாமதங்களையும் சந்திப்பார்கள். பாடங்களில் உள்ள கருத்துகள் மற்றும் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதில் சிரமப்படக்கூடும். இந்த மாதத்தில் ஆசிரியர்களுடனும் குருக்களுடனும் நடந்துகொள்ளும் முறையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். உயர்கல்வியைப் பொறுத்த வரை மாணவர்களுக்கு வெளிநாட்டில் சீட் கிடைப்பதில் சிரமம் இருக்கலாம்.
கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை
சுப தேதிகள் : 5, 6, 7, 8, 12, 13, 14, 15, 22, 23, 24 & 25.
அசுப தேதிகள் : 1, 2, 16, 17, 18, 26, 27, 28, 29 & 30.

Leave a Reply