AstroVed Menu
AstroVed
search
search

கன்னி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025 | August Matha Kanni Rasi Palan 2025

dateAugust 1, 2025

கன்னி ஆகஸ்ட் 2025 பொதுப்பலன்கள்:

இந்த மாதம் நீங்கள் சிறந்த வளர்ச்சியைக் காண்பீர்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் புதிய அனுபவங்கள் மற்றும் மாற்றங்களை சந்திப்பீர்கள்.இந்த மாதம் உங்கள் உறவில் அனுகூலமான பாதிப்புகளை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடனான உறவு சிறப்பாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தைரியத்துடன் எளிதாக சமாளிப்பீர்கள். உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். என்றாலும் நீங்கள் இந்த மாதம் பட்ஜெட் அமைத்து வரவு செலவுகளை மேற்கொள்வது நல்லது. இது உங்களின் எதிர்கால நிதிநிலைக்கு பாதுகாப்பாக அமையும். இந்த மாதம் தொழிலில் நீங்கள் திட்டமிட்டு செயபடுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமை வெளிப்படும்.உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் இந்த மாதம் சில மன அழுத்தங்களுக்கு ஆளாகலாம். மாணவர்கள் கவனமுடன் கல்வி பயில்வார்கள். ஆராய்ச்சி மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

காதல் / குடும்ப உறவு  

இந்த மாதம் உங்கள் உறவு நிலை சிறப்பாக இருக்கும். காதலர்கள், வாழ்க்கைத் துணைவர்கள், பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் எனஅனைவருடனும் அனுகூலமான உறவு இருக்கும். ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு மேம்படும். நீங்கள் பேச வேண்டிய நேரத்தில் துணிச்சலுடன் பேசாமல் இருக்கும் காரணத்தால் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். பெற்றோருடனான உறவில் நம்பிக்கை மற்றும் விசுவாசம் மேம்படும். உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுப்படும். நட்பும் மேம்படும். அக்கம் பக்கத்தினர் மீது நம்பிக்கை வலுப்படும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சந்திரன் பூஜை

நிதிநிலை  

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் கணிசமான பணத்தை சேமிப்பீர்கள். முதலீடுகளை மேற்கொள்ள இந்த மாதம் சாதகமாக இருக்கும். நிதி சார்ந்த ஆபத்துகளை நீங்கள் துணிவாக எடுக்கலாம். என்றாலும் மிக விரைவாகச் செயல்படாமல் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு பெரிய நிதி முடிவையும் எடுப்பதற்கு முன் யோசித்து செயல்பட வேண்டும். மேலும் உங்கள் லாபங்களை அதிகரிக்கவும், ஒட்டுமொத்தமாக உங்கள் ஆபத்தை குறைக்கவும் விரும்பினால் ஒரு நிபுணரின் ஆலோசனை பெறவும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை

உத்தியோகம்

நீங்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் திறமை மற்றும் புத்திசாலித்தனம் வெளிப்படும். அலுவலகப் பணிகளை நீங்கள் ஆர்வமுடன் மேற்கொள்வீர்கள். மத்திய அல்லது மாநில அரசு  ஊழியர்கள் குறிப்பாக தற்காலிகமாகப் பணியாற்றுபவர்கள் நிரந்தர வேலை பெறலாம். உங்களுக்கு பொறுப்புகள் கூடும். வேலைப் பளு அதிகரிக்கும். உங்கள்  வேலைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு பிரகாசிக்க இது ஒரு சரியான தருணம். தனியார் துறை ஊழியர்கள் பணி அழுத்தங்களை அனுபவிக்கலாம், என்றாலும் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியும்.  உங்கள் அமைதியான மற்றும் கவனமான நடத்தை இந்த நேரத்தில் ஒரு நன்மையைப் பராமரிக்க உதவும். ஆசிரியர் தொழில் புரிபவர்கள் தங்கள் திட்டங்களை செயலாக்கப்படுத்தவும் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காணவும் இந்த மாதம் அனுகூலமாக இருக்கக் காண்பார்கள். பொறியாளர்கள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பு/மேம்பாட்டு வல்லுநர்கள் உற்சாகமான  அனுபவத்தை எதிர்பார்க்கலாம் - உங்கள்  திறன்கள் முழுமையாக வெளிப்படும். நிதி மற்றும் பங்கு தரகர்கள் தங்கள் முடிவெடுப்பதிலும் செயல்பாட்டிலும் நேர்மையாகவும்  ஒழுக்கமாகவும்  இருக்க வேண்டும். விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா நிபுணர்களாகவோ அல்லது முகவர்களாகவோ பணி புரியும் நபர்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம், இருப்பினும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை

தொழில்  

இந்த மாதம் உங்கள் திட்டங்களை செயல்படுத்த எண்ணுவீர்கள். அதற்கான புதிய உக்திகளை வகுப்பீர்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். உங்களின் உள்ளுணர்வுத் திறன் மேம்படும். சந்தை நிலவரம் அறிந்து அதற்கேற்ப உங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்வீர்கள். இது  மற்றவர்களுக்குப் புரியாத சாத்தியக்கூறுகளை அடையாளம் காண உங்களை அனுமதிக்கும். இந்த மாதம் கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். வெற்றியை அளிக்கும். ஃப்ரீலான்ஸர்களுக்கு, உங்கள் திறன்கள் மற்றும் பணி பாணியை நிரூபிப்பது, சிக்கல்களைத் தீர்க்கும். மாதத்தின் நடுப்பகுதியில், உங்கள் தகவல் தொடர்பில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த உங்கள் தரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். அதன் மூலம்  அவர்களுடன்  வலுவான, தரமான இணைப்புகளை உருவாக்குவதற்கு இயலும்

ஆரோக்கியம்  

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக மன  ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உணர்ச்சிவசப்படாதீர்கள். தீவிர உடற்பயிற்சி, தியானம் அல்லது கலை நிகழ்ச்சிகளை கண்டு களிப்பது  போன்றவை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம். எனவே உங்கள் உணவில் கவனம் தேவை. சத்தான உணவுகளை உட்கொள்ளவும். துரித உணவு வகைகளை தவிர்க்கவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : கேது பூஜை

மாணவர்கள்  

இந்த மாதம் நீங்கள் படிப்பிற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். நேரம் கிடைப்பது சவாலாக இருக்கும் என்றாலும் அதனை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். மனதை ஒருமுகப்படுத்து படிப்பது சற்று சிரமமாக இருக்கலாம்.  கவனச்சிதறல்கள் இருப்பதால்,   சிக்கலான பாடங்களில் முழு தேர்ச்சி பெற போராடக்கூடும். கல்லூரி மற்றும் முதுகலை மாணவர்களுக்கு, இந்த மாதம் ஆராய்ச்சி அல்லது முழுமையான பகுப்பாய்வு மற்றும் விமர்சனத்திற்கான உறுதியான பின்னணியை உருவாக்க சிறந்த நேரமாக இருக்காது, நீங்கள் கவனச்சிதறல்களுடன் போராடலாம். ஆராய்ச்சி அறிஞர்களைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் மாதத்தில்  சமாளிப்பது சற்று கடினமாக இருக்கலாம், ஏனெனில் நீங்கள் தகவல்களைத் தேடுவதில் தடைகளை  சந்திக்க நேரிடும். உங்கள் அறிவுசார் ஆர்வம் அல்லது சகிப்புத்தன்மை சற்று குறையக்கூடும்.

கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை

  சுப தேதிகள்  :  1,4,5,7,9,10,11,13,14,16,17,19,20,22,25,27,28,29,30,31

 அசுப தேதிகள்  :  2,3,6,8,12,15,18,21,23,24,26.


banner

Leave a Reply