புத்தாண்டு ராசிபலன்: 2025
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் காணப்படலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கலாம். பங்குச் சந்தை மூலம் ஆதாயம் பெறலாம். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கப் பெறுவீர்கள். திருமணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணி புரிவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கலாம். செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும். மேஷ ராசி மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஓரு சிலருக்கு கல்வி உதவித்தொகையுடன் வெளி நாட்டில் படிக்க வாய்ப்பு கிட்டும். உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் தொழில் மூலம் கணிசமான லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டும். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிட்டும். காதலர்கள் தங்கள் காதல் உறவை திருமண உறவாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். உங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். அதன் மூலம் உங்கள் சமூக அந்தஸ்து உயரும். ஆன்மீக பயணம் கணவன் மனைவி உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தலாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பாகச் செயல்படுவார்கள். உடல் மற்றும் மன நலப் பிரச்சினைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்கள் நிதிநிலையில் ஏற்றம் காணப்படலாம். உங்கள் வாழ்வில் நீங்கள் சாதகமான மாற்றங்களைக் காண்பீர்கள். காதலர்கள் சிறு சிறு இடையூறுகளை சந்திக்கலாம். குடும்பத்தில் வாக்கு வாதங்களைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.தொழில் செய்பவர்கள் தங்கள் வரவு செலவுகளைக் கவனமாகக் கையாள வேண்டும். கூட்டுத் தொழில் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.இந்த வருடம் நீங்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் அதனை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.
கடகம்
கடக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் கூடி வரும். தொழில் வல்லுனர்களுக்கு இந்த ஆண்டு சாதகமாக உள்ளது. பங்கு வர்த்தகம் மூலம் தொடர் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிட்டும். பிப்ரவரியில், வீட்டை புதுப்பித்தல் அல்லது வீட்டிற்கு வண்ணம் அடித்தல் தொடர்பான செலவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். ஏப்ரலில் உங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இந்த ஆண்டு ஒரு சில மாணவர்களுக்கு வெளி நாட்டில் படிக்கும் வாய்ப்பு கிட்டும். இந்த ஆண்டு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் சிறு சிறு ஆரோக்கியப் பிரச்சினைகளை சந்திக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே! வியாபாரம் செய்பவர்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்த ஆண்டு சாதகமாக இருக்கும். தனியார் துறை ஊழியர்களுக்கு வேலை உயர்வுகள் உண்டாகும். திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண உறவுகளில் அதிக நெருக்கத்தைக் காணலாம். காதலர்கள் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும், எனவே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். அறிவியல் துறையில் முதுகலை பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறு பிரச்சனைகள் வரலாம் என்றாலும், ஒட்டுமொத்த ஆரோக்கியம் நன்றாக இருக்கலாம்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கக் காண்பீர்கள். உங்களின் சமூக அந்தஸ்து உயரக் காணலாம். உறவினர்களுடன் சுமுக உறவை மேற்கொள்வீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை இருந்தபோதிலும், சிறப்பாகச் செயல்படலாம் மற்றும் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்கலாம்.அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறலாம், இதனால் ஊதியம் அதிகரிக்கலாம். மார்ச் மாதத்தில், பகுதி நேர வேலை கூடுதல் வருமானத்தை அளிக்கும், உங்கள் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். ஏப்ரல் மாதத்தில், செலவுகளை நிர்வகிப்பது சேமிப்பை அதிகரிக்க உதவும். பள்ளி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு, நல்ல மதிப்பெண்கள் பெறவும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு, நீங்கள் பெரிய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்பில்லை.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை உயர்வைக் காணலாம். உங்கள் சமூக அந்தஸ்து உயரலாம். நீங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணக்கமான உறவைக் கொண்டிருக்கலாம். திருமணத்தில் தடைகள் மற்றும் தாமதங்களை எதிர்கொள்பவர்கள் பொருத்தமான துணையை கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு, உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கலாம். மற்றும் உங்கள் சமூக வட்டத்தை விரிவுபடுத்தலாம். பணியிடத்தில் உங்கள் திறமையான செயல்பாடு உங்கள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படலாம். சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. வீட்டைப் பராமரிக்க அதிக செலவு செய்யலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம். உங்கள் உடல்நிலை பொதுவாக நன்றாக இருக்கலாம். இருப்பினும், காய்ச்சல், தலைவலி மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே! இந்த ஆண்டில் நீங்கள் சொத்துக்கள், வண்டி வாகனங்கள் வாங்க சாதகமான நேரத்தைக் காணலாம். திருமணம் அல்லது குழந்தை பிறப்பில் தாமதம் எதிர் கொள்பவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடனான உங்கள் உறவு மேம்படும், மேலும் நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவைப் பேணலாம். அண்டை வீட்டாருடன் சிறுசிறு பிரச்சனைகள் வந்து போகலாம். பணியிடத்தில் அதிக பணிச்சுமைகள் இருந்த போதிலும் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். இடைநிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம், என்றாலும் தங்கள் முயற்சிகளின் மூலம் வெற்றியை அடைய முடியும்,. இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாக இருக்கலாம். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரலாம். பணியிடத்தில் அதிக பணிகள் இருந்தாலும் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு முதல் காலாண்டிற்குப் பிறகு கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கலாம். இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் நீங்கள் வாகனம் வாங்கலாம். இந்த ஆண்டின் பிறபகுதியில் உங்கள் நிதிநிலை மேம்படலாம். தொழிலில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். காதலர்க்ளுகு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலம் அன்பை மேம்படுத்தலாம். பங்கு வர்த்தகம் மற்றும் அந்நியச் செலாவணி முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்கள் பொருளாதார சூழ்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வைப் பெறலாம். தனியார் துறை ஊழியர்கள் தங்கள் வேலை அதிகரிப்பால் பயனடையலாம்.திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை வரம் வேண்டும் திருமணமான தம்பதிகளுக்கு குழந்தைப்பேறு கிட்டும். பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகள் லாபகரமாக இருக்கும். நிலம் மற்றும் அசையும் சொத்துகளில் முதலீடு செய்வது எதிர்காலத் தேவைகளுக்கு நல்ல தேர்வாக இருக்கும். மாணவர்களின் கல்விக்கு இந்த ஆண்டு சாதகமாக இருக்கும். இளம் மாணவர்கள் மேம்பட்ட புரிந்துகொள்ளும் திறன்களைக் காட்டலாம். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வில் சிறந்து விளங்கலாம் மற்றும் சிறந்த மதிப்பெண்களைப் பெறலாம். உயர்கல்வி மாணவர்கள் கவனச்சிதறல்கள் போன்ற தடைகளைக் கடந்து கல்வியில் வெற்றி பெறலாம். இந்த ஆண்டு உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் காணப்படலாம். தங்கத்தில் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் கணிசமான லாபத்தை அளிக்கும். உங்கள் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான உறவை நீங்கள் அனுபவிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு இந்த ஆண்டு வேலை கிட்டும். அரசுத் துறைகளில் மேற்பார்வையாளராகப் பணிபுரிபவர்கள் கூடுதல் பொறுப்புகளைச் சுமக்க நேரிடும். தனியார் துறை ஊழியர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களின் மதிப்பு உயர்வதைக் காணலாம். தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் சிறு கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடலாம். ஏற்றுமதித் தொழில் மூலம் லாபம் கிட்டும். சில்லறை விற்பனைக் கடை உரிமையாளர்கள் புதிய கிளைகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம்.வெளிநாட்டில் தகவல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். நடைபயிற்சி மற்றும் தியானம் போன்ற செயல்களில் ஈடுபடுவது உங்கள் மன மற்றும் உடல் நலனை மேம்படுத்தும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்கள் நிதிநிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் சமூக அந்தஸ்து உயரும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில், உங்கள் துணையுடனான பந்தம் வலுவடையும். கூட்டு முயற்சிகளில் மிகச் சிறந்த வெற்றி மற்றும் நல்ல ஆதாயம் கிட்டும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்கள் பணிகளை கவனமாக திட்டமிட்டு காலக்கெடுவுக்குள் முடிக்கலாம். குழந்தை பிறப்பதில் தாமதம் உள்ளவர்களுக்கு, இந்த ஆண்டு சந்ததி பாக்கியத்திற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் சுமூகமான உறவைப் பேணுவீர்கள். சிலர் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் செலவு செய்யலாம், இது உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Leave a Reply