Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
AstroVed Menu
AstroVed
search

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி | Varahi 108 Namavali | 108 Varahi Amman Potri in Tamil

July 21, 2022 | Total Views : 130,773
Zoom In Zoom Out Print

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி (Varahi Amman 108 Potri In Tamil):

அன்னை வாராஹி வராஹ (பன்றி) முகமும் அம்பாளின் உடலும் கொண்டவள். இவள் அன்னை ராஜ ராஜேஸ்வரியின் படைத் தலைவியாக இருப்பவள். மேரு சக்கரத்தின் மையத்தில் வாசம் செய்பவள். சஹஸ்ரார சக்கரத்தை அலங்கரிப்பவள்.   

தீய குணங்களை அழிப்பவள்.  தன்னை அண்டி வரும் அடியவர்களுக்கு நினைத்தவுடன் வந்து பாதுகாப்பு அளிப்பவள்.  வாராஹி அம்மன் தீராத நோய்களை தீர்ப்பவள். எந்தவிதமான கஷ்டங்களையும் போக்குபவள். வாராஹி அம்மனை வணங்க திருஷ்டி தோஷங்கள் கிரக தோஷங்கள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம்.

கடன் பிரச்சினை, உறவுகளின் பிரச்சனை திருமணத்தடை, குழந்தைப் பேறு தாமதம், வழக்குகளின் பிரச்சினை என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனமுருக அன்னையை வேண்டி வழிபட்டால் சூரியனைக் கண்ட பனி போல அவை அகலும்.

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

  1. ஓம் வாராஹி போற்றி

  2. ஓம் சக்தியே போற்றி

  3. ஓம் சத்தியமே போற்றி

  4. ஓம் ஸாகாமே போற்றி

  5. ஓம் புத்தியே போற்றி

  6. ஓம் வித்துருவமே போற்றி

  7. ஓம் சித்தாந்தி போற்றி

  8. ஓம் நாதாந்தி போற்றி

  9. ஓம் வேதாந்தி போற்றி

  10. ஓம் சின்மயா போற்றி

  11. ஓம் ஜெகஜோதி போற்றி

  12. ஓம் ஜெகஜனனி போற்றி

  13. ஓம் புஷ்பமே போற்றி

 

  1. ஓம் மதிவதனீ போற்றி

  2. ஓம் மனோநாசினி போற்றி

  3. ஓம் கலை ஞானமே போற்றி

  4. ஓம் சமத்துவமே போற்றி

  5. ஓம் சம்பத்கரிணி போற்றி

  6. ஓம் பனை நீக்கியே போற்றி

  7. ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி

  8. ஓம் தேஜஸ் வினி போற்றி

  9. ஓம் காம நாசீனி போற்றி

  10. ஓம் யகா தேவி போற்றி

  11. ஓம் மோட்ச தேவி போற்றி

  12. ஓம் நானழிப்பாய் போற்றி

  13. ஓம் ஞானவாரினி போற்றி

  14. ஓம் தேனானாய் போற்றி

  15. ஓம் திகட்டா திருப்பாய் போற்றி

  16. ஓம் தேவ கானமே போற்றி

  17. ஓம் கோலாகலமே போற்றி

  18. ஓம் குதிரை வாகனீ போற்றி

 

  1. ஓம் பன்றி முகத்தாய் போற்றி

  2. ஓம் ஆதி வாராஹி போற்றி

  3. ஓம் அனாத இரட்சகி போற்றி

  4. ஓம் ஆதாரமாவாய் போற்றி

  5. ஓம் அகாரழித்தாய் போற்றி

  6. ஓம் தேவிக்குதவினாய் போற்றி

  7. ஓம் தேவர்க்கும் தேவி போற்றி

  8. ஓம் ஜுவாலாமுகி போற்றி

  9. ஓம் மாணிக்கவீணோ போற்றி

  10. ஓம் மரகதமணியே போற்றி

  11. ஓம் மாதங்கி போற்றி

  12. ஓம் சியாமளி போற்றி

  13. ஓம் வாக்வாராஹி போற்றி

  14. ஓம் ஞானக்கேணீ போற்றி

  15. ஓம் புஷ்ப பாணீ போற்றி

  16. ஓம் பஞ்சமியே போற்றி

  17. ஓம் தண்டினியே போற்றி

  18. ஓம் சிவாயளி போற்றி

  19. ஓம் சிவந்தரூபி போற்றி

  20. ஓம் மதனோற்சவமே போற்றி

 

  1. ஓம் ஆத்ம வித்யே போற்றி

  2. ஓம் சமயேஸ்ரபி போற்றி

  3. ஓம் சங்கீதவாணி போற்றி

  4. ஓம் குவளை நிறமே போற்றி

  5. ஓம் உலக்கை தரித்தாய் போற்றி

  6. ஓம் சர்வ ஜனனீ போற்றி

  7. ஓம் மிளாட்பு போற்றி

  8. ஓம் காமாட்சி போற்றி

  9. ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி

  10. ஓம் முக்கால ஞானி போற்றி

  11. ஓம் சர்வ குணாதி போற்றி

  12. ஓம் ஆத்ம வயமே போற்றி

  13. ஓம் ஆனந்தானந்தமே போற்றி

  14. ஓம் நேயமே போற்றி

  15. ஓம் வேத ஞானமே போற்றி

  16. ஓம் அகந்தையழிப்பாய் போற்றி

  17. ஓம் அறிவளிப்பாய் போற்றி

  18. ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி

  19. ஓம் கலையுள்ளமே போற்றி

  20. ஓம் ஆன்ம ஞானமே போற்றி

  21. ஓம் சாட்சியே போற்றி

 

  1. ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி

  2. ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி

  3. ஓம் மரணமழிப்பாய் போற்றி

  4. ஓம் ஹிருதய வாகீனி போற்றி

  5. ஓம் ஹிமாசல தேவி போற்றி

  6. ஓம் நாத நாமக்கிரியே போற்றி

  7. ஓம் உருகும் கோடியே போற்றி

  8. ஓம் உலுக்கும் மோகினி போற்றி

  9. ஓம் உயிரின் உயிரே போற்றி

  10. ஓம் உறவினூற்றே போற்றி

  11. ஓம் உலகமானாய் போற்றி

  12. ஓம் வித்யாதேவி போற்றி

  13. ஓம் சித்த வாகினீ போற்றி

  14. ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி

 

  1. ஓம் இலயமாவாய் போற்றி

  2. ஓம் கல்யாணி போற்றி

  3. ஓம் பரஞ்சோதி போற்றி

  4. ஓம் பரப்பிரஹ்மி போற்றி

  5. ஓம் பிரகாச ஜோதி போற்றி

  6. ஓம் யுவன காந்தீ போற்றி

  7. ஓம் மௌன தவமே போற்றி

  8. ஓம் மேதினி நடத்துவாய் போற்றி

  9. ஓம் நவரத்ன மாளிகா போற்றி

  10. ஓம் துக்க நாசினீ போற்றி

  11. ஓம் குண்டலினீ போற்றி

  12. ஓம் குவலய மேனி போற்றி

 

  1. ஓம் வீணைஒலி யே போற்றி

  2. ஓம் வெற்றி முகமே போற்றி

  3. ஓம் சூதினையழிப்பாய் போற்றி

  4. ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி

  5. ஓம் அண்ட பேரண்டமே போற்றி

  6. ஓம் சகல மறிவாய் போற்றி

  7. ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி

  8. ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி

  9. ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி

  10. ஓம் வாராஹி பதமே போற்றி

banner

Leave a Reply

Submit Comment