x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019

ராகு கேது பெயர்ச்சி 2019

in English
in Tamil
in Hindi

ராகு 2 வது வீட்டிற்குப் பெயர்ச்சி அடைகிறார்.

உங்கள் ராசியிலிருந்து 2 வது வீட்டிற்கு ராகு பெயர்ச்சி அடைகிறார். இதன் மூலம் நீங்கள் சிறந்த பலன்களை காண முடியாது. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடையே தவறான புரிந்துணர்வுகள் பொதுவாக காணப்படும். வீட்டிலுள்ள குடும்ப அங்கத்தினர்களிடையே அசாதாரண மனக் கொந்தளிப்பு உணர்வைக் காணலாம். உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குறிப்பாக 2 வது வீட்டில் ராகு இருக்கும் பொழுது, சொல்லும் வார்த்தைகளைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால் நீண்ட உரையாடல்களைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் பொருளாதாரத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். உங்கள் எதிர்கால தேவைகளுக்கு பணத்தைச் சேமிக்கவும். தெரியாத ஆதாரங்கள் அல்லது வெளிநாட்டு நபர்களிடம் பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டாம். இந்த நேரத்தில் தான் நீங்கள் நிறைய பணத்தை செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள். எதிர்காலத்திற்கான உங்கள் சொந்த நலன் கருதி இப்பொழுது நீங்கள் செலவினங்களைக் குறைக்க "

ராகு உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்வதன் பலன்!

ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான ரிஷப ராசிக்கே பெயர்ச்சி ஆகிறார். இது, உங்கள் முதலாவது வீடாகும். பொதுவாக இது, அணுகுமுறை, நடத்தை என இரண்டிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். பிறரை ஏமாற்றும் விதத்தில் நடந்து கொள்ளவும், நண்பர்கள், சமுதாயம், குடும்பம், தொழில்துறை சகாக்கள் போன்றவர்கள் மத்தியில் பெயர், புகழ் பெறுவதற்காக நேர்மையற்ற முறையில் செயல்படவும் தூண்டும் எண்ணங்களுக்குப் பலியாகாமல் நீங்கள் இருப்பது அவசியம். உங்கள் உடல்நிலை, மனநிலை ஆகியவற்றை நன்கு கவனித்துக் கொள்வதும் நன்மை தரும். ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, உங்களில் சிலர், தலைப் பகுதி அல்லது அதிலுள்ள உறுப்புகள் ஆகியவை குறித்து, சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். எனினும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதிலும், புதிய சூழ்நிலைகளைச் சமாளிப்பதிலும் இப்பொழுது உங்கள் திறமை பளிச்சிடும். மேலும், உலகம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் விழிப்புணர்வை நீங்கள் மேம்படுத்திக் கொண்டால் இந்தப் பெயர்ச்சி காலத்தில் உங்கள் அறிவாற்றல் மேலும் வளரும். ஆனால், உங்களில் சிலருக்கு சற்றே அகங்கார உணர்வு தலை தூக்கும் வாய்ப்புள்ளது. இது உங்கள் பலவீனத்திற்கும், துக்கத்திற்கும் காரணமாக அமையக் கூடும். எனவே எச்சரிக்கை தேவை. மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.

கேது 8 வது வீட்டிற்குப் பெயர்ச்சி அடைகிறார்.

உங்கள் ராசியிலிருந்து 8 வது வீட்டில் கேது சஞ்சாரம் காரணமாக மனக் குழப்பங்கள் ஏற்படும்.உங்கள் பணியில் புதிய சூழ்நிலையை காண்பீர்கள். நீங்கள் வீட்டிலும் மற்றும் பணியிடத்திலும் ஒரு பொறுப்பான நபராக இருப்பீர்கள். ஒருவர் இல்லாத போது அவரைப்பற்றிய தேவையற்ற கலந்துரையாடல்கள் அல்லது சர்ச்சைக்குரிய கருத்துக்களில் ஈடுபடாமல் இருங்கள். உங்கள் ராசியிலிருந்து 8 வது வீட்டில் கேது பெயர்வது மரபுக்கு புறம்பான விஷயங்களில் தத்துவார்த்த அறிவையும் புரிதலையும் வழங்கும். தத்துவார்த்த / ஆன்மீக ஈடுபாடு கொண்ட தனிநபர்களுடன் தொடர்பு கொள்ளும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் எதிர்பாராத வகையில் திடீரென்று நீங்கள் பெறக்கூடிய ஆலோசனைகளும் ஞானமும் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறும். இந்தக் கால கட்டத்தில் நீங்கள் பெறும் மாற்றநகளை எண்ணி நீங்கள் "

கேது உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!

கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான ரிஷபத்திற்கு ஏழாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அவர், அங்கு சஞ்சாரம் செய்யும் இந்தக் கால கட்டம் மகிழ்ச்சியான மற்றும் இணக்கமான உறவைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நேரமாக இருக்கும். குறிப்பாக உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவைப் பேண வேண்டியது அவசியம். நீங்கள் உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபடும் வாய்ய்புள்ளது. ‘நான் செய்வதே சரி’ போன்ற தேவையற்ற விவாதங்கள் செய்து, உங்கள் வலிமையை நிரூபிக்கவும் நீங்கள் முயலக் கூடும். ஆனால் இதற்காக முடிவில் நீங்கள் வருத்தப்பட நேரிடும். எனவே, உங்கள் கணவர் அல்லது மனைவியுடனான பிரச்சினைகளை முடிந்தவரை இணக்கமாகத் தீர்க்க முயற்சி செய்வது பலவகையிலும் நன்மை தரும். இந்த நேரத்தில் அமைதியாகச் செயல்படுவதும் நல்ல பலனளிக்கும். தொழில் துறையில் உள்ள ரிஷப ராசி அன்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை! நீங்களும், உங்கள் தொழில் கூட்டாளியும் மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைகளிலும் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் இருவருக்கும் இடையேயான இணக்கமான நல்லுறவை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளும் தேவையும் உள்ளது. அயல்நாடுகளிலோ அல்லது வெளிநாட்டு வியாபார முயற்சிகளிலோ இப்பொழுது நீங்கள் அதிக நற்பலன்களை எதிர்பார்க்க இயலாது. மேலும், இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் எது சரி, எது தவறு என்பதை நன்கு பகுத்தறிந்து செயல்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

எங்கள் நிபுணர் ஜோதிடருடன் பேசுங்கள்

இந்த ஜோதிட ஆலோசனை ராகு கேது போக்குவரத்து உங்களை தனிப்பட்ட மட்டத்தில் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், எப்போது செயல்பட வேண்டும், எப்போது காத்திருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க உதவுகிறது.

ராகு – கேது போக்குவரத்து 2019 அறிக்கை

உங்கள் சந்திரன் அடையாளத்தின் அடிப்படையில் ராகு மற்றும் கேது போக்குவரத்து 2019 உங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கையை ஆர்டர் செய்யவும்.

ராகு – கேது போக்குவரத்து 2019 க்கான தீர்வுகள்

ராகு கேது டிரான்ஸிட் ரெமிடியல் ஹோமா (ஃபயர் லேப்) பாம்பு கிரகங்களை சமாதானப்படுத்தலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற உதவும்.