x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

மிதுனம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019

ராகு கேது பெயர்ச்சி 2019

in English
in Tamil
in Hindi

ராகு உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!

ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மிதுனத்திற்குப் பன்னிரண்டாவது வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, உங்களுக்கு நன்மையையும் தீமையும் கலந்த பலன்கள் காத்திருக்கின்றன எனலாம். இதுவரை இருந்த குழப்பம் விலகி, உங்கள் எண்ணங்களில் ஒரு தெளிவு ஏற்படும். உங்களில் சிலர், இந்தக் காலகட்டத்தில், வெளிநாடுகள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இருப்பினும், தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்கு எழலாம். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்; எனவே எச்சரிக்கை தேவை. சில முதலீடுகளைச் செய்யவேண்டும் என்ற ஆவலும், எண்ணமும் கூட, உங்கள் மனதில் எழலாம். இந்த நேரத்தில் இது உங்களுக்குப் புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், கானல் நீர் போல, இது உங்களுக்கு ஏமாற்றத்தையே தரக் கூடும். உங்களில் சிலருக்கு, வெளிநாட்டு நண்பர்கள், அறிமுகங்கள் மூலம் சில அன்பளிப்புகள் வந்து சேரலாம். நாம் பிறருக்கு ஏதாவது கொடுத்தால், அல்லது தானம் செய்தால், அது போல ஏதாவது ஒன்றை அவர்கள் நமக்குத் திருப்பி அளிப்பார்கள், இதன் மூலம் நமக்கு ஆதாயம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது உங்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களில் சிலர், சில ரகசிய அல்லது மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகலாம். ஆனால் இது, உங்கள் சமூக அந்தஸ்து, பொது வாழ்க்கையில் நீங்கள் ஈட்டியுள்ள நற்பெயர் போன்றவற்றை பாதித்து விடும். எனவே, இந்தக் காலகட்டத்தில் முடிந்தவரை வெளிப்படையாக இருப்பதே சாலச் சிறந்தது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால்கள், கணுக்கால்கள் போன்றவற்றில் பிரச்சினை, ஏற்பட வாய்ப்புள்ளதால் சிறிது கவனமாக இருப்பது நல்லது.

கேது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!

கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மிதுனத்திற்கு ஆறாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்காது எனலாம். உங்களில் சிலர், சிறு உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம், இதனை நீங்கள் மற்றவர்களுக்குத் தெரிவிக்க விரும்பாமலும் இருக்கலாம். எனவே, மற்றவர்களின் உதவியின்றி, நீங்களே இந்தச் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிப்பீர்கள். தவிர, சிலரது ஆரோக்கியம் கவலை தரும் வகையிலும் இருக்கக் கூடும். இதன் காரணத்தை, மருத்துவ நிபுணர்கள் கூட, துல்லியமாகக் கண்டறிய இயலாமல் போகலாம். எனினும், உங்கள் தொப்புள், குடல், வயிறு போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் கூட, உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் சில தொந்தரவுகள், சச்சரவுகள் போன்றவை எழக்கூடும். பணியிடத்தில், வழக்கமான அமைதி இல்லாமல் போகலாம். எனவே மற்றவர்களுடன் சுமுகமாக, அனுசரித்து நடப்பதே புத்திசாலித்தனம். வாழ்க்கைப் பாதையில் கூட, உங்கள் முன்னேற்றத்திற்குத் தடைகள் மற்றும் தாமதங்கள் எழலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் மனதில் சில சந்தேக எண்ணங்களும் தலைதூக்கக் கூடும். இது வெளிப்பட்டால், இது நாள் வரை நீங்கள் பாடுபட்டு சம்பாதித்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்படலாம். மற்றவர்கள் பார்வையில் நீங்கள் தாழ்ந்து விடவும் நேரிடலாம். ஒட்டுமொத்தமாக, இந்தக் காலக் கட்டங்களில் பொருள் இன்பங்களைத் தேடுவதை விட ஆன்மீகத் துறையில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடும்.

எங்கள் நிபுணர் ஜோதிடருடன் பேசுங்கள்

இந்த ஜோதிட ஆலோசனை ராகு கேது போக்குவரத்து உங்களை தனிப்பட்ட மட்டத்தில் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், எப்போது செயல்பட வேண்டும், எப்போது காத்திருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க உதவுகிறது.

ராகு – கேது போக்குவரத்து 2019 அறிக்கை

உங்கள் சந்திரன் அடையாளத்தின் அடிப்படையில் ராகு மற்றும் கேது போக்குவரத்து 2019 உங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கையை ஆர்டர் செய்யவும்.

ராகு – கேது போக்குவரத்து 2019 க்கான தீர்வுகள்

ராகு கேது டிரான்ஸிட் ரெமிடியல் ஹோமா (ஃபயர் லேப்) பாம்பு கிரகங்களை சமாதானப்படுத்தலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற உதவும்.