x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

கும்பம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019

ராகு கேது பெயர்ச்சி 2019

in English
in Tamil
in Hindi

ராகு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!

ராகு பகவான், இப்பொழுது, உங்களது கும்ப ராசிக்கு நான்காம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்கள் வாழ்க்கையில் சில சுவாரஸ்யமான தருணங்களுக்கு வழி வகுக்கக் கூடும். ஆனால் அதே நேரம், சில சங்கடங்களையும் உடன் அழைத்து வரும் என்றும் சொல்லலாம். இப்பொழுது, வாழ்க்கை வசதிகள் மற்றும் லௌகீக இன்பங்கள் சற்று அதிகரிக்கக் கூடும். வளம், செல்வச் செழிப்பு போன்றவற்றுடன் கூடிய நவீன வாழ்க்கை வாழும் வாய்ப்பு, உங்களுக்குக் கிட்டும். பொதுவாக, ஆன்மீக ஈடுபாட்டை விட உலக இன்பங்களை அனுபவிக்கும் நாட்டம் பெருகும். ஆனால் இதன் காரணமாக, உங்கள் மனதில் நிலவும் வழக்கமான அமைதி குலையும். நிலங்கள், வீடுகள் அல்லது சொத்துக்களை வாங்குவது, விற்பது போன்ற ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் குறித்து, நீங்கள் இப்பொழுது, கவனமாக இருப்பது அவசியம். பொதுவாக உங்கள் தாயார் உடல்நிலை பாதிக்கப்படலாம். எனவே, உங்களில் சிலருக்கு தாயாரின் உடல் நிலை பற்றிய கவலை இருக்கும். உங்கள் பாதுகாப்பு என்பதும் இப்போது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும். எனவே வாகனம் ஓட்டும் பொழுது எச்சரிக்கை தேவை. ஹெல்மெட் அணிவது, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது, அதிக வேகத்தைத் தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுவது அவசியம். உங்களில் சிலர், புதிய ஊர்களுக்கு இடம் பெயரும் வாய்ப்பும் உள்ளது. இந்தப் பெயர்ச்சியின் பொழுது, மாணவர்கள், தங்கள் விருப்பப்படி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதற்கான நல்ல வாய்ப்புகளும் உள்ளன.

கேது உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!

கேது பகவான், இப்பொழுது, உங்கள் ராசியான கும்பத்திற்குப் பத்தாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, பாதகங்களை விட, உங்களுக்குச் சாதகங்களே அதிகம் ஏற்படும் எனலாம். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவீர்கள். இதனால் அதிக உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் உங்கள் கடமைகளை நிறைவேற்றுவீர்கள். இருப்பினும், அதே சமயம், பொறுப்புகள் பலவற்றை ஏற்றுக் கொள்வதையும் தவிர்த்து விடுவீர்கள். சம்பளம் பெறும் ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். மதம், ஆன்மீகம் சார்ந்த துறைகளான ஜோதிடம், கைரேகை, வாஸ்து சாஸ்திரம், அல்லது ஃபெங் சூய் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களும் இப்பொழுது சிறப்பாகச் செயல்பட்டு, தொழில் முன்னேற்றம் காணலாம். எனினும், எந்தவொரு முறையற்ற அல்லது ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளிலும் நீங்கள் ஈடுபடாமல், விலகி இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இது உங்களுக்கு நன்மை தரும் என்பதை உறுதியாகக் கூறலாம். இந்தக் காலகட்டத்தில், உங்களில் சிலர், உலக வாழ்க்கையில் விரக்தி அடைந்து, ஆன்மீகப் பாதையை நோக்கித் திரும்பும் வாய்ப்பும் உள்ளது.

எங்கள் நிபுணர் ஜோதிடருடன் பேசுங்கள்

இந்த ஜோதிட ஆலோசனை ராகு கேது போக்குவரத்து உங்களை தனிப்பட்ட மட்டத்தில் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், எப்போது செயல்பட வேண்டும், எப்போது காத்திருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க உதவுகிறது.

ராகு – கேது போக்குவரத்து 2019 அறிக்கை

உங்கள் சந்திரன் அடையாளத்தின் அடிப்படையில் ராகு மற்றும் கேது போக்குவரத்து 2019 உங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கையை ஆர்டர் செய்யவும்.

ராகு – கேது போக்குவரத்து 2019 க்கான தீர்வுகள்

ராகு கேது டிரான்ஸிட் ரெமிடியல் ஹோமா (ஃபயர் லேப்) பாம்பு கிரகங்களை சமாதானப்படுத்தலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற உதவும்.