Medha Dakshinamurthy Homa On Jupiter Transit Day - Remove Obstacles & Gain Wisdom With Guru's Grace JOIN NOW
Kanni Rasi Guru Peyarchi Palangal 2020-2021, கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள்
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 - 2022

குரு பெயர்ச்​சி 2020 - 2021 - தனுசுவில் அமரும் குருபகவான்

தமிழ்
கன்னி பொதுப்பலன்கள்

கிரகங்களிலேயே பூரண சுபர் மற்றும் சாத்வீக கோளான குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது கன்னி ராசிக்கு உத்தியோக ஸ்தானமான ஆறாம் வீடாக அமைவதால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தையும், பதவி உயர்வையும், தன நிலையில் ஏற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இந்த குருவின் பெயர்ச்சி அமையப்போகிறது. ஆறாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக ஜீவனஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விரைய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தனஸ்தானத்தையும் பார்வையிடப் போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது கன்னி ராசியைச் சார்ந்தவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றத்தையும், தன நிலையில் உயர்வையும் ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது.

உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளுடனான உறவு வலுப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறவுகளுக்கு இடையேயான உறவு நிலை சிறப்பாக இருக்கும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டுப் பெரியவர்களிடம் கருத்து மோதல்கள் வரலாம். வாக்கில் கவனம் தேவை.

குடும்ப உறவு நிலை மேம்பட செவ்வாய் பூஜை

அதிக பணிகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நடைப்பயிற்சி செய்வதன் மூலமும் தியானம் செய்வதன் மூலமும் உங்கள் உடல் மற்றும் மன நலனைப் பாதுகாக்க முடியும்.

மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

உங்கள் காதல் உறவில் சில போரட்டங்களைச் சந்திக்க வேண்டியது வரலாம். உங்கள் காதலை, உங்கள் துணை ஏற்றுக் கொள்வதில் சில தாமதங்கள் ஏற்படலாம். திருமணமான தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல் பட வேண்டும். விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் நடந்து கொள்வதன் மூலம் காதல் உறவில் இருப்பவர்களும், திருமண தம்பதிகளும் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

காதல் மற்றும் திருமண உறவுகள் மேம்பட குரு பூஜை

இந்த குருப்பெயர்ச்சியில் உங்கள் பொருளாதாரம் நம்பிக்கை தரும் வகையில் இருக்கும். தன நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் லாபம் அதிகரிக்கும். வீடு பராமரித்தல் போன்ற வகையில் செலவுகள் ஏற்படும். பயணத்திற்காகவும் நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரும்.

நிதி நிலையில் ஏற்றம் காண சனி பூஜை

உத்தியோகத்தில் வளர்ச்சி காணப்படும். மேலதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கும் என்ற காரணத்தால் மனதில் பதட்ட நிலை இருக்கும்; என்றாலும் நீங்கள் தைரியமாகச் செயல்படுவீர்கள். நீங்கள் கடினமாக உழைப்பதன் மூலம் பணியிடத்தில் பெயரும் புகழும் பெறுவீர்கள். புதிய தொழிலை மேற்கொள்வதற்கு இந்த குருப் பெயர்ச்சி சாதகமாக உள்ளது. பயணங்கள் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகம் மற்றும் தொழில் மேன்மைக்கு துர்கா பூஜை

இந்த குருப்பெயர்ச்சி, பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பான பலன்களைத் தருவதாக அமைகிறது. படிப்பில் நல்ல முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் விடாமுயற்சியுடன் கல்வி பயின்று வெற்றி காண்பார்கள். ஆராய்ச்சிக் கல்வி படிக்கும் மாணவர்கள் பேராசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டு பின்பற்றுவதன் மூலம் முன்னேற்றம் காண்பார்கள்.

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை

கன்னி வீட்டில் செய்யக்கூடிய பரிகாரம்

முதியோர்களுக்கு வஸ்திர தானம் செய்வது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும்

வியாழக்கிழமைகளில் பசுவிற்கு உணவு அளிக்கலாம்

ஏழைக் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்யலாம்

எங்கள் தலை சிறந்த ஜோதிட நிபுணர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்

எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், குருபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.

குருபெயர்ச்சி 2020-2021 பலன்கள்

உங்களின் ராசிக்கான குருபெயர்ச்சி 2020 பலன்களை அறியவும், குருபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்

குருபெயர்ச்சி 2020-2021 – பரிகாரம்

குரு ஹோமம் செய்வதன் மூலம், குருவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்