x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

கடகம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019

ராகு கேது பெயர்ச்சி 2019

in English
in Tamil
in Hindi

ராகு உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!

ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கடகத்திற்குப் பதினொன்றாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு நன்மை தரும் மாற்றமாக அமையும் எனலாம். இந்தக் காலகட்டத்தில் பல்வேறு வகையிலும் உங்களுக்கு லாபங்கள் மற்றும் ஆதாயங்கள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக பொருள் சார்ந்த ஆதாயங்களை நீங்கள் அதிகம் எதிர்பார்க்கலாம். மூத்த உடன்பிறப்புகளுடன் நீங்கள் இணக்கமான உறவைப் பராமரிப்பீர்கள். அதிக நண்பர்களும் உங்களுக்குக் கிடைப்பார்கள். இதனால் உங்கள் சமூக வட்டமும் வளரும். உங்களில் சிலர் அதிக அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து கூட உதவி பெறலாம். சில புதியவர்களுடன் நட்பு ஏற்படுவதற்கும், வெளிநாட்டு நண்பர்களின் அறிமுகம் கிடைப்பதற்கும் கூட நல்ல வாய்ப்புகள் உள்ளன. அதிகார வர்கத்தில் இருப்பவர்கள், மற்றும் அரசாங்கத்தின் மூலம் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில முக்கிய விஷயங்கள், இப்பொழுது உங்களுக்குக் கை கூடி வரும். நீங்கள் ஏதேனும் போட்டிகளில் பங்கேற்றால், பரிசுகள் மற்றும் விருதுகளைப் பெறுவதற்கான சரியான தருணமாகவும் இந்த காலக் கட்டம் விளங்கும். எனவே, இந்தப் பெயர்ச்சியின் பயனாக, உங்கள் வாழ்க்கை பொருள் வளங்கள், செழுமை, வெற்றி ஆகியவற்றால் நிறைந்து காணப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் ஆசைகள் யாவும் கூட நிறைவேறலாம். இவ்வாறு, லௌகீக இன்பங்களைப் பொறுத்தவரை, உங்களுக்குப் பெரும் நன்மைகள் விளைவிக்கும் காலமாக இது அமையக்கூடும்.

கேது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்!

கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான கடகத்திற்கு ஐந்தாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு, ஓரளவு சவால்கள் நிறைந்த காலமாக அமையக்கூடும். உங்கள் கடந்த கால செயல்களின் பலன்களை நீங்கள் இப்பொழுது அனுபவிப்பீர்கள். திருமணமான தம்பதியர் குழந்தை பாக்கியத்தை இப்பொழுது எதிர் பார்க்க இயலாது. அதே நேரம், குழந்தைகளுடனான உறவும், சுமுகமாக இல்லாமல், கவலை அளிக்கும் விதமாக இருக்கலாம். இந்தக் காலக் கட்டத்தில், உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அதிக அன்பையும், பரிவையும் காட்ட முயலுங்கள்; இது, அவர்களுடனான உறவை இணக்கமாகப் பராமரிப்பதற்குத் தேவையான ஒன்றாகும். தவிர, உங்கள் செயல்பாடு புத்திசாலித்தனமாக இல்லை என்ற எண்ணமும், இப்பொழுது உங்களை அலைக்கழிக்கலாம். மேலும், அதிர்ஷ்டம் மற்றும் ஊக வணிகம் போன்றவற்றின் மூலம் நீங்கள் ஆதாயம் பெறுவதும், இப்பொழுது இயலாத ஒன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக இதயம் மற்றும் முதுகெலும்பு குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அதே சமயம், அதிக இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு போன்ற கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கை தேவை. மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகவும் இது இருக்கும். கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம், அவர்கள் கல்வியில் சிறக்க முடியும். ஆனால், இந்த நேரத்தில் உங்கள் கற்பனைத் திறன், சுற்றுலா செல்லும் ஆர்வம் போன்றவை குறைந்தே காணப்படும்.

எங்கள் நிபுணர் ஜோதிடருடன் பேசுங்கள்

இந்த ஜோதிட ஆலோசனை ராகு கேது போக்குவரத்து உங்களை தனிப்பட்ட மட்டத்தில் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், எப்போது செயல்பட வேண்டும், எப்போது காத்திருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க உதவுகிறது.

ராகு – கேது போக்குவரத்து 2019 அறிக்கை

உங்கள் சந்திரன் அடையாளத்தின் அடிப்படையில் ராகு மற்றும் கேது போக்குவரத்து 2019 உங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கையை ஆர்டர் செய்யவும்.

ராகு – கேது போக்குவரத்து 2019 க்கான தீர்வுகள்

ராகு கேது டிரான்ஸிட் ரெமிடியல் ஹோமா (ஃபயர் லேப்) பாம்பு கிரகங்களை சமாதானப்படுத்தலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற உதவும்.