பெரும் நன்மைகளைச் செய்பவரும், மங்களங்களை அளிப்பவரும், கடக ராசிக்கு 6 மற்றும் 9 ஆம் வீடுகளுக்கு அதிபதியாக விளங்குபவருமான குரு பகவான் (வியாழன் கிரகம்), இந்த 2022 ஆம் ஆண்டு, கும்பம் மற்றும் மீன ராசிகளில் சஞ்சரிக்கிறார். கடக ராசி அன்பர்களே! ஏப்ரல் 12, 2022 வரை உங்கள் 8 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் குரு, அதற்குப் பின்னர் உங்கள் 9 ஆம் வீட்டிற்குப் பெயர்ச்சி ஆகிறார். கடக ராசிக்கு மிகவும் சாதகமான குரு கிரகத்தின் இந்தப் பெயர்ச்சி, வெகுமதிகள், செல்வம், வெளிநாட்டுப் பயணம், நல்லதிர்ஷ்டம் ஆகியவற்றை ஏப்ரல் 12 க்குப் பிறகு உங்களுக்கு வழங்கக் கூடும். 2022 இல், கும்பம், மீனம் என இந்த இரு ராசிகளில் நடைபெறும் குருவின் சஞ்சாரம், செல்வம் ஈட்டவும், வேலை, கல்வி போன்றவற்றிற்காக வெளிநாடு செல்லவும் உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடும். அதிர்ஷ்டக் காற்றும் உங்கள் பக்கம் வீச, உங்களுக்கு புதிய தொடர்புகளும், நண்பர்களும், கடின உழைப்பின் மூலம் வெற்றியும் கிடைக்கக்கூடும். சிலர் இந்த ஆண்டு, தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்வார்கள் அல்லது இலக்குகளை எட்டுவார்கள். இவ்வாறு, இந்த 2022 இல், கடக ராசி அன்பர்கள் பலர், பலவித சந்தோஷமான, கொண்டாடத்தகுந்த தருணங்களை அனுபவிக்கும் வாய்ப்புள்ளது.
2022 இல் நீங்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றி, தொழில், வேலை முதலியவற்றில் கணிசமான வளர்ச்சி அடையக்கூடும். சிலருக்கு வெளிநாடுகளில் நல்ல வருமானத்துடன் பணி புரியும் வாய்ப்பு கிடைக்கலாம். வாணிபத்திலும், சுய தொழிலிலும் வெற்றி, ஆதாயம், புகழ் கிடைக்கக்கூடும். பொழுதுபோக்கு, விளையாட்டுத் தொழில்கள் வெற்றியும், புகழும் அளிக்கும் அதே நேரம், கணினி, மென்பொருள் தொடர்பான பணிகள் லாபம் தரக்கூடும். புதிதாகத் தொடங்கப்படும் வெப் டிஸைனர் எனப்படும் வலை வடிவமைப்பாளர் தொழிலில் அங்கீகாரம் கிடைக்கக்கூடும். சமூக ஊடகத்துறையும், இந்த ஆண்டு, கடக ராசி அன்பர்களுக்கு விரைந்த வெற்றி, புகழ், செல்வம் அளிக்கக்கூடும். படைப்பு மற்றும் கலைத் துறைகளில், 2022 மத்திய காலத்திற்குப் பின் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு, வேலை வாய்ப்பு அல்லது பதவி உயர்வு மூலம் அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்கவும் கூடும்.
திருமண வயதில் உள்ளவர்கள் சிலருக்குக் காதல் மலரும் அல்லது அவர்களுக்கு ஏற்ற துணை கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் உள்ளம் கவர்ந்தவருடன், பல இனிமையான, சுகமான தருணங்களை நீங்கள் அனுபவிக்கக்கூடும். தொலைதுரத் தொடர்புகளில் உள்ளவர்களை நேரில் சந்தித்து, மகிழும் வாய்ப்பும் சிலருக்கு உள்ளது. விருப்பமானவர்களுடன் சிலருக்கு, இந்த ஆண்டு திருமணமும் நடைபெறலாம். காதல் திருமணங்கள் மகிழ்ச்சியும், வளமும் அளிக்கக்கூடும். ஆனால், கும்ப ராசியில் குரு பெயர்ச்சி, காதல் உறவுகளில் சிறு பதட்டங்களை உருவாக்கலாம்; எனினும் ஏப்ரல் 12 க்கு பின் நிகழும் மீனராசியில் குரு பெயர்ச்சி, மகிழ்ச்சி தரக் கூடும். தவிர, இந்த 2022 இல், பெற்றோர், உறவுகள், உடன் பிறந்தோர், குடும்பத்தினர் ஆகியவர்களுடன் உங்கள் உறவு சுமுகமாகவும், இனிமையாகவும் இருக்கும்.
தம்பதிகளுக்கு இடையே நல்லுறவு நீடிக்க பால திரிபுர சுந்தரி பூஜை
கடக ராசி அன்பர்களின் மணவாழ்க்கை வளமும், சந்தோஷமும் நிறைந்து காணப்படும் எனலாம். பிரிந்து போன கணவர் மனைவி இடையே சமாதானம் ஏற்பட்டு, ஒரு புதிய நெருக்கத்துடனும், வேட்கையுடனும் அமையும் அவர்கள் புதிய வாழ்க்கை, அன்பு, நம்பிக்கை, புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை இவற்றின் அடிப்படையில் தொடரக்கூடும். உங்கள் துணை அல்லது துணைவர் உங்களிடம் அன்புடனும், பரிவுடனும், ஆதரவாகவும் நடந்து கொள்ளலாம். கும்ப ராசியில் குரு சஞ்சாரம் செய்யும் பொழுது மணவாழ்க்கையில் சில பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. ஆனால், மீனத்தில் அவர் பெயர்ச்சி ஆவது, உங்கள் மண வாழ்க்கையில் காதலை மீண்டும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
விவசாயம், சொத்து வாங்கல்-விற்றல், எற்றுமதி-இறக்குமதி, பருத்தி, ஜவுளி, போக்குவரத்து, நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற தொழில்கள் நன்றாக நடக்கும் எனலாம். பல்பொருள் அங்காடி அல்லது வணிக வளாகத்தில் கடையும் சிறப்பாகச் செயல்படலாம். திரைப்படக் கொட்டகை நடத்துவதும் லாபம் தரக்கூடும். அதுபோல, இந்த 2022 இல், உணவு, உணவு விடுதி, பயணம் தொடர்பான தொழில்களும் கணிசமான லாபம் தரலாம். எனவே, இந்த ஆண்டு முழுவதும் பணவரத்தும், தாராளமான பணப் புழக்கமும், செல்வச் செழிப்பும் நிறைந்து, உங்களுக்கு இது, ஒரு வளமான ஆண்டாகத் திகழும் வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகம் இருந்தாலும், உங்களால் அதிகப் பணத்தை சேமிக்கவும் முடியும்.
உயர்கல்வி அல்லது ஆராய்ச்சிக் கல்வி கற்கும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைக்கலாம்; வெளிநாட்டில் பயில்வதற்கும் வாய்ப்பு கிட்டலாம். இந்த ஆண்டு, பல கடக ராசி மாணவர்கள் பரிட்சைகள், நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. சிலருக்குக் கல்லூரி, பல்கலைக்கழகம் போன்றவற்றில் நல்ல வேலைவாய்ப்பும், வேறு சிலருக்கு உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு மூலம் நல்ல வேலையும் கிடைக்கக்கூடும். சிலர் பள்ளியில் சிறப்புடன் பயின்று, புகழ் அடையக்கூடும். தேர்வுகளிலும் அதிர்ஷ்டம் உங்களுக்குத் துணை புரியலாம். எனவே, கல்வியில் நல்ல வெற்றி கிடைக்கும் ஆண்டாக 2022 அமையக்கூடும்.
கடக ராசி அன்பர்கள், இந்த ஆண்டு முழுவதும், சிறந்த பலம், உடலாற்றல் ஆகியவற்றுடன், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் எனலாம். எனினும் சிலருக்கு, முட்டி, எலும்பு, கால் போன்றவற்றில் வலி தோன்றலாம் என்றாலும், இவை விரைவில் குணமாகி விடக்கூடும். நீண்ட நாள் நோய்களிலிருந்து கூட, சிலர், இப்பொழுது குணமடையலாம். தவிர, சிலர் தடகள விளையாட்டு போன்றவற்றில் வெற்றியடையக் கூடும்.
திங்கட்கிழமைகளில் வெள்ளை ஆடை அணிந்து, வாசனைப் பொருட்கள் பூசிக்கொள்ளவும்
திங்கட்கிழமைகளில் எழைகளுக்கு அரிசி, பருப்பு, பயிறு வகைகள், பால் போன்றவை தானம் செய்யவும்
வியாழக்கிழமைகளில் விஷ்ணு அல்லது சிவ ஆலயங்களுக்குச் சென்று ஆரத்தி வழிபாடு செய்யவும்
ஹனுமான் சாலிஸா பக்திப் பாடலை தினமும் பாராயணம் செய்யவும்
திங்கட்கிழமைகளில் சிலலிங்கத்திற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து, தினமும் ‘ஓம்’ மந்திரம் ஓதவும்
வெள்ளி மோதரம் அணியவும் அல்லது வெள்ளிக் குடுவையிலிருந்து நீர் அருந்தவும்.
எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், குருபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.
உங்களின் ராசிக்கான குருபெயர்ச்சி 2020 பலன்களை அறியவும், குருபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்
குரு ஹோமம் செய்வதன் மூலம், குருவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்