Ashta Aishwarya Program: 9-Month Program to Manifest Eight Types of Wealth Join Now
வைகாசி விசாகமும் முருகர் வழிபாடும்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வைகாசி விசாகமும் முருகர் வழிபாடும்

Posted DateMay 3, 2024

வைகாசி மாதத்தில் பெளர்ணமி திதியும், விசாகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளை வைகாசி விசாகம் என்கிறோம். இது ஆண்டு தோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. வைகாசி விசாகம் முருகன் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகிறது. விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு.இந்நாளில், தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

வைகாசி விசாக சிறப்புகள் :-

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு பொறிகள் தோன்றி ஆறு குழந்தைகளாக ஆகின. இவர்களை வளர்க்கும் பொறுப்பு கார்த்திகை பெண்களுக்கு வழங்கப்பட்டது. பார்வதி தேவி இந்த ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைத்த போது ஆறுமுகம் கொண்ட ஒரு குழந்தையாக மாறியது  எனவே தான் முருகன், ஆறுமுகன் என்றும் கந்தன் என்றும் அழைக்கப்படுகிறார். முருகு என்றால் அழகு. மயிலை தனது வாகனமாகக் கொண்டவர். மயிலை வாகனமாக கொண்டவன் என்பது விசாகன் என்ற சொல்லுக்கு பொருளாகும். இதனால் வைகாசி விசாகத்தன்று முருகனுடன் சேர்த்து வேலையும், மயிலையும் வணங்குவது மிக சிறப்பானதாகும். அதே சமயம் 6 முனிவர்களின் சாபங்களை போக்கி, முருகன் அருள் செய்த தினமும் இதே வைகாசி விசாகம் தான்.

JOIN NOW

வைகாசி விசாக வழிபாடு  :-

வைகாசி விசாகம் என்பது முருக பக்தர்களுக்கு மிகவும் புனிதமான நாள். இந்நாளில் முறையாக வழிபட்டால், நிச்சயம் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முதல் தமிழக் கடவுளான முருகன். அவதரித்த நாள் வைகாசி விசாகம். வைகாசி விசாக தினத்தில் திணை மாவு தீபம் ஏற்றி சிறு பருப்பு பாயாசம் வைத்து வீட்டில் நாம் எளிய முறையில் வழிபடுவதன் மூலம் குடும்ப வாரிசு வேண்டுவோரின் ஆசைகள் நிறைவேறும். திருமணத் தடைகள் நீங்கும். கடன் நோய், எதிரிகள் தொல்லை விலகும்.  செல்வ வளர்ச்சி, வெற்றி, மற்றும் மகிழ்ச்சி கிட்டும். இந்த நாளில் பால்குடங்கள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

காலையில் எழுந்து  குளித்து முடித்து, பூஜைகள் செய்து, ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் விரதம் இருக்கலாம். காலையில் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. காலையில் செல்ல முடியாவிட்டால் மாலையில் செல்லலாம். அபிஷேகத்திற்கு பால் வழங்கலாம். வீட்டில் முருகன் விக்கிரகம் வைத்து இருப்பவர்கள், அல்லது வேல் வைத்து  இருப்பவர்கள் முருகனுக்கு வேலுக்கு, பால் அபிஷகம் செய்யலாம். படம் வைத்து இருப்பவர்கள் பால் நெய்வேத்தியம் செய்யலாம். மாலையில் நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். கோடையில் வெப்பத்தை தணிக்கும் பொருட்களான குடை, விசிறி, நீர்மோர் பானகம் தண்ணீர் போன்றவற்றை தானமாக வழங்கலாம். குறிப்பாக அன்னதானம் செய்யலாம்.. இதனை நாம் கடைபிடித்தால் பல மடங்கு பலன்கள் கிட்டும்.  சஷ்டிகவசம். திருப்புகழ். ஸ்கந்த குரு கவசம் போன்றவற்றை பாராயணம் செய்யலாம். தீப தூப ஆராதனை செய்து வழிபடலாம்.

JOIN NOW

 வைகாசி விசாக வழிபாட்டுப் பலன்கள் :-

முருகப் பெருமானின் அவதார நட்சத்திரம் விசாகம் ஆகும்.விசாகம் என்றால் மயில் மீது பறந்து வந்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் அருளாளன். எவ்வகையான துன்பம் என்றாலும் இந்த விசாகத் திருநாளில் முருகனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். இத்தனை சிறப்பு பெற்ற வைகாசி விசாக திருநாளில் விரதம் இருப்பது நல்லது. கணவன் மனைவி பிரச்சினை தீரவும் அன்னியோன்யம் கூடவும் இந்த வழிபாடு உதவும். தொழிலில் வளர்ச்சி பெறவும் இந்த நாளில் விரதம் இருக்கலாம். மேலும் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து, முருகனை வழிபட்டால், தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீரும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். கல்வி, வேலை, வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் கிடைக்கும். நோய்கள் தீரும், செல்வம் மற்றும் செழிப்பு பெருகும்