AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
குரு பெயர்ச்சி தினத்தில் குரு பகவானை எப்படி வழிபட வேண்டும்?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

குரு பெயர்ச்சி தினத்தில் குரு பகவானை எப்படி வழிபட வேண்டும்?

குரு என்பவர் நவகிரகங்களில் ராஜகிரகமாக கருதப்படுகிறார். இவருக்கு பிருகஸ்பதி என்ற பெயரும் உண்டு. இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார்.  இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவக்கிரக அந்தஸ்து பெற்றார். இவர் இடம் பெயர்வதே குருப் பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்தில் இடம் பெயர்கின்றன என்றாலும் ஜோதிடத்தில் குருபெயர்ச்சி முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இவர் ஒரு ராசியில் இருந்து மற்றோரு ராசிக்கு மாறுவதற்கு ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறார். மே ஒன்றாம் தேதி குரு பெயர்ச்சி தினம் என்பதால் அன்றைய தினம் குரு பகவானை எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

குருபெயர்ச்சியும் குருபகவான் வழிபாடும்:

குரு பகவான் தனகாரகன் என்றும் புத்திரகாரகன் என்றும் அழைக்கப்படுகிறார். பொதுவாக குரு பகவானை வியாழன் அன்று வழிபடலாம். அன்று விரதம் இருந்து அவரை வழிபடுவதன் மூலம் எல்லா நன்மைகளும் கிட்டும். குறிப்பாக குழந்தைப் பேறு கிட்டும். மேலும் குருபெயர்ச்சி நாளன்று அவரை வழிபடுவதன் மூலம் அவரின் பரிபூரண அனுகிரகம் நமக்கு கிட்டும்.

குருபெயர்ச்சி நாளன்று காலை எழுந்து நீராடி, வீட்டை தூய்மை செய்துகொண்டு, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். குருபகவானுக்கு பிடித்த நிறம் மஞ்சள் ஆகும். அன்று மஞ்சள் ஆடை அணிவது உசிதம். பிறகு கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் இருக்கும் குருவை வணங்க வேண்டும்.

பால், தயிர், தேன், நெய், போன்றவற்றைக் கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்யலாம்.

குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடலாம்.

அவருக்கு உகந்த மஞ்சள் நிற மாலை, மற்றும் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடலாம்.

குரு பகவானுக்குரிய மந்திரங்களை ஜபித்து, தீபம் ஏற்றி, நைவேத்தியம் செலுத்தி வழிபடலாம்.

“குரு ஸ்தோத்திரம்”, “விஷ்ணு சஹஸ்ரநாமம்” போன்ற குரு பகவானுக்குரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.

JOIN NOW

 

குருபகவான் மந்திரம்:

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;

குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு காயத்ரி மந்திரம்

‘ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே

க்ருணி ஹஸ்தாய தீமஹி

தந்நோ குருஹ் ப்ரசோதயாத்’

ஆலயங்களில் நவக்கிரக வழிபாடு செய்யும் பொழுது, குருவுக்கு உரிய குரு காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி குருவை வழிபட்டால்  மற்ற கிரக தோ‌ஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர்பதவி கிடைக்கும்.மேலும்இந்த காயத்ரி மந்திரத்தை சொல்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். அஞ்ஞானம் அகலும். அரசுப் பதவிகள் கிடைக்கும். வறுமை நீங்கும். மெய்ஞானம் உண்டாகும். சேமிப்பு வளரும். உடல் வலிமையும், மன வலிமையும் ஏற்படும்.

  • விரதம் அன்று அனுஷ்டிக்க வேண்டியவை:
  • ஏழை, எளியவர்களுக்கு உணவு, உடை, பணம் போன்றவற்றை தானம் செய்யலாம்.
  • விரதம் இருந்து ஒரு வேளை சாத்வீக உணவுகளை உண்ண வேண்டும்.
  • அசைவம் தவிர்க்க வேண்டும்.
  • மது அருந்துதல் கூடாது.

JOIN NOW