ஜோதிடத்தில் பல சாஸ்திரங்கள் இருப்பது போல கௌளி சாஸ்திரம் என்ற ஒரு சாஸ்திரத்தையும் மக்கள் தெரிந்து கொண்டு பயன்படுத்தினார்கள். கௌளி சாஸ்திரம் என்பது பல்லி குறித்த சாஸ்திரம் ஆகும். இது சகாதேவனால் இயற்றப்பட்ட சாஸ்திரம் என்று நம்பப்படுகின்றது.
பல்லி நம் உடல் மீது விழும் போது அது நம் உடலில் விழும் இடத்தைப் பொறுத்து நல்ல பலன்கள் மற்றும் தீய பலன்கள் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.
இந்த பதிவில் ஆண்களுக்கு பல்லி விழும் பலன் பற்றிக் காண்போம்

உச்சந்தலை – மரண பயம். அருகில் உள்ள கோவில் குளத்திற்கு சென்று கால் கழுவி, இறைவனை வழிபட்டு வரவும்.
தலையில் ஏதேனும் ஒரு பகுதி –குடும்பத்தில் பிரச்சினை வரலாம். அடுத்த சில நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்.
முகத்தில் – எதிர்பாராத செல்வம் வந்தடையும். தனவரவு மேம்படும்
இடது கண் – விரைவில் நல்ல செய்தி ஒன்று தேடி வரும்.
வலது கண் – முயற்சிகளில் தோல்வி. உடனே குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
முன் நெற்றி– மனைவி அல்லது துணையை விட்டு பிரிந்து செல்லும் சூழ்நிலை உருவாகும்
இடது காது –விரைவில் அதிக பணம் வந்து சேரும் வாய்ப்புகள் அதிகம்.
மேல் உதடு – வீட்டில் சண்டை சச்சரவுகளை எதிர் கொள்ள மெரும்.
கீழ் உதடு – பொருளாதாரத் தடைகள் நீங்கி பணம் பெருகும்
இரண்டு உதடுகள் -மரண செய்தி வந்து சேரும்
வாய் – ஆரோக்கிய பாதிப்பு. உடல் நலனில் கவனம் தேவை.
இடது பக்க முதுகு – விரைவில் நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது
மணிக்கட்டு – வீட்டை அழகுபடுத்தக்கூடிய, பராமரிக்கக்கூடிய வேலைகளில் ஈடுபட உள்ளீர்கள் என்று பொருள்.
கைகள் – பெரியளவில் பண பரிவார்தனை செய்வீர்கள். அதன் மூலம் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது
விரல் – பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வாய்ப்புள்ளது
இடது கை – அவமானம்
வலது கை – பிரச்னைகள் ஏற்படும்
மீசை -தீர்க்க முடியாத பிரச்னைகள் ஏற்படலாம்
பாதம் – நன்மை உண்டாகும்.
பின்னங் கால் – பயணம் அல்லது சுற்றுலா சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
கால் விரல்கள் – ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
January 7, 2026
December 31, 2025
December 30, 2025