Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
Jothidam | தமிழ் ஜோதிடம் | Tamil Jothidam | AstroVed Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தமிழ் ஜோதிடம் - Tamil Jothidam

Tamil Jothidam

பிறந்த தேதி

பிறந்த நேரம்

பிறந்த நாடு

பிறந்த இடம்

Resolve the simple captcha below:
2 + 5 =

மனிதனை நெறிப்படுத்த இறைவனே குருவாகி ஏற்படுத்திய சாஸ்திரங்கள் பலவற்றில் மிக உயரிய உன்னத சாஸ்திரம் ஜோதிட சாஸ்திரம் ஆகும். ஜ்யோதிஷம் என்ற வட மொழிச் சொல்லில் இருந்து தான் ஜோதிடம் என்ற சொல் உருவாகியது. இந்திய ஜோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் மற்றும் தமிழ் நாட்டில் தமிழ் ஜோதிடம் என்ற பெயரில் அறியப்படுகிறது. ஜோதிடத்தில் பொதுவாக சூரியனை வைத்துப் பலன் சொல்லும் முறையும், சந்திரனை வைத்துப் பலன் சொல்லும் முறையும் உள்ளது. மேல் நாட்டு முறையில் சூரியனை வைத்து பலன் சொல்லுவார்கள். தமிழ் ஜோதிடத்தில் சந்திரனின் நிலையை முதன்மையாக வைத்து ஜாதகம் கணிப்பார்கள். குழந்தை பிறக்கும் நேரத்தினைக் கொண்டு அந்த நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. குழந்தை பிறந்த ஊரின் தீர்காம்சம், அட்சாம்சம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்படுகின்றன. ஜோதிடத்தில் பஞ்சாங்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும். இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணைக் கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன.

கிழக்காசிய ஜோதிடம்

jothidam

சீன ஜோதிடத்தில் மொத்தம் ஐந்து மூலகங்கள் உள்ளன. மரம், நெருப்பு, உலோகம், நீர் மற்றும் பூமி ஆகிய இவை அனைத்தும் தனியே அன்றி யின்-யான் சக்திகளுடன் சேர்த்தே குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு மூலகமும் ஒவ்வொரு குறிகளின் தன்மைகளை ஆளும் சக்தி கொண்டவையாக கருதப்படுகின்றன. யின் மற்றும் யான் எனப்படுபவை இந்த உலகத்தை ஆளும் இரு வேறு நேர் எதிர் சக்திகள் என சீனத் தத்துவம் கூறுகின்றது. இரவு-பகல், ஆண்மை-பெண்மை என்று இவ்வாறான நேர் எதிர் யின்-யான் சக்திகளே போட்டி போட்டுக் கொண்டு இந்த உலகத்தை இயக்குவதாக சீன சோதிடம் கூறுகின்றது. இவ்விரு சக்திகளின் ஆளுமை ஒரு மனிதனின் நடவடிக்கைகளை மாற்ற வல்லது என சீன சோதிடம் குறிப்பிடுகின்றது.

சீன சோதிடம்

சீன சோதிடம் என்பது 12 விலங்குகளை அடிப்படையாக கொண்டு, சீன வருடங்கள் அல்லது பிறப்புகளின்படி கணிக்கப்படும் ஒரு ஜோதிட முறை ஆகும். இதில் ஒவ்வொரு வருடமும் ஒரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வாறு 12 வருடங்கள், 5 மூலகங்கள் மற்றும் யின்-யான் எனப்படும் சீனத் தத்துவம் ஆகியவை சேர்த்து 60 வருடங்கள் கொண்ட ஒரு சக்கர வடிவில் சீன சோதிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் பிறந்த வருடம், மாதம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கொண்டு அவர்களின் எதிர்காலம் கணிக்கப்படுகின்றது.

பஞ்சபட்சி சாஸ்திரம்

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஐந்து பட்சிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள சாஸ்திரமாகும். வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியவை பஞ்ச பட்சிகள் ஆகும். ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பட்சி நிர்ணயிக்கப்படுகிறது.

ஐந்து பட்சிகளும் ஒவ்வொரு நாளும் ஐந்து விதமான தொழில்களை செய்கின்றன. அவை அரசு, ஊண், நடை, துயில், சாவு ஆகும். ஒருவருடைய பட்சி அரசு ஊண் செய்யும் காலத்தில் அவர் எந்தச் செயலில் ஈட்டுபட்டாலும் சிறந்த பலன் கிடைக்கும். நடையில் மத்திம பலன் கிடைக்கும். துயில், சாவில் ஈடுபடும் போது எந்தச் செயலிலும் வெற்றி கிட்டாது.

இந்த ஐவகை தொழில்களும் வளர்பிறை தேய்பிறைக்கு தக்கவாறு மாறுபடும். இந்த சாஸ்திரத்தை நன்கு கற்றுணர்ந்து பயன்படுத்த வேண்டும்.

வேத ஜோதிடம்

நமது இந்திய தேசத்தின் வடமொழி இலக்கிய வரலாற்றைக் காணும் பொழுது முதலிடத்தில் இருப்பவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்கள் ஆகும். இதில் ஆழமான தத்துவங்கள், மிக உயர்ந்த வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கியுள்ளன. இந்த வேதங்களுக்கு உறுப்புகளாக சிக்க்ஷா(மருத்துவம்) வியாகரணம் (கல்வி பயிற்சி) சந்தஸ் (சங்கீதம்) நிருத்தம் (நாட்டியம்) ஜ்யோதிஷம் (ஜோதிடம்) கல்பம் (அழியா நிலை) ஆகிய ஆறு ஆகும். இவற்றுள் ஜோதிடம் வேதத்தின் கண்களாகப் போற்றப்படுகிறது. வேதத்தின் ஆறு அங்கங்களில் ஜோதிடம் ஒன்றாக இருப்பதும். ஏனைய ஐந்து அங்கங்களில் ஜோதிடம் இரண்டறக் கலந்திருப்பதும் வேத காலத்தில் ஜோதிடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

astrospeak

பிரசன்ன ஜோதிடம்

பிரசன்னம் என்பது ஜோதிடத்தில் ஓர் அங்கமாகும். ஒரு குறிப்பிட்ட விஷயம் சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விக்கு, ஜனன கால ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல், வாடிக்கையாளர் கேள்வி கேட்ட நேரத்தின்போது வான்மண்டலத்தில் உண்டான கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே ‘பிரசன்னம்’ ஆகும்.

பொதுவாக ஜனன கால ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நேரத்தின் போது வான்மண்டலத்தில் உள்ள நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிதம் செய்யப்படுவது ஆகும். இந்த ஜனன கால ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலமாக, அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய நல்ல, தீய பலன்களைப் பற்றியும், மதி என்கிற தசாபுத்திகள் மூலமாக அந்த நல்ல தீய பலன்கள் எப்போது நடைபெறும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். பிரசன்ன ஜோதிடத்தின் மூலம் ஒருவர் ஜோதிடம் பார்க்கும் நேரத்தில் உள்ள கிரக நிலையை வைத்து அவரது வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்பங்கள் பற்றி இந்த பிரசன்ன ஜோதிடம் மூலம் அறியலாம்.

எண் கணித ஜோதிடம்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பது தமிழ் மொழி. என் கணிதம் நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. சமஸ்கிருத மொழியில் ஆரம்ப காலத்தில் இருந்தே எண் கணித முறை காணப்படுகிறது. இதனை கடபயாதி ஸம்க்ஞை என்பர். எண்களுக்கும் கோள்களுக்கும் சம்பந்தம் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் “கீரோ”என்னும் மேல் நாட்டறிஞர் எண்களுக்குரிய கோள்களை அமைத்தார். இதற்கு நியூமராலாஜி என்று பெயரிட்டார்.

  • சூரியன்
  • சந்திரன்
  • குரு
  • யுரேனஸ்
  • புதன்
  • சுக்கிரன்
  • நெப்டியூன்
  • சனி
  • செவ்வாய்

நமது நாட்டில் தற்போது பலரும் இம்முறையையே பின்பற்றுகிறார்கள். குறிப்பாக எண் கணிதத்தின் நிபுணராகக் கருதப்படும் பண்டிட் சேதுராமன் அவர்கள் இந்த முறையையே சிறந்த முறையாகக் கொண்டு எண் கணிதத்தைப் பற்றி நூலை எழுதியுள்ளார். பெயர் எண், விதி எண், உயிர் எண் என மூன்று எண்களைக் கொண்டு நியூமரலாஜி பலன்களைக் காண இயலும். சில கணித எண் ஆய்வாளர்கள் பெயர் எண் கணக்கிடும் போது பெயரில் உள்ள இனிசியலை சேர்த்துக் கொள்ளாமல் பெயருக்கு மட்டும் கணக்கிட வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்கள்.

கைரேகை ஜோதிடம்

ஜோதிடம், கைரேகை, எண்ணியல் ஆகிய மூன்று கலைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஜோதிடம், எண்ணியல் கலைகளை ஒப்பிடும் போது கைரேகை கலையை அதிக அளவில் நம்பலாம். கைரேகைகள் நமது மனதின் செயற்பாட்டுக்கு ஏற்ப அமைகின்றன. மனம் என்பதே நமது உடம்பின் பல்வேறு சுரப்பிகளின் நரம்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த செயற்பாட்டின் விளைவே ஆகும். இவற்றின் மாறுதல்களில் உடம்பில் பல்வேறு மாறுதல்கள் தோன்றுவது போல கைகளிலும் ரேகைகளாகப் பதிவாகின்றன. அதனால் இந்தக் கலை மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து வளர்ந்து வந்திருக்கிறது எனலாம். கை ரேகையை காகிதத்தில் பதிய வைத்துப் பார்ப்பது தான் சரியான வழி. முதலில் ரப்பர் திண்டில் கொஞ்சமாக அச்சு மையைத் தடவி, ஓர் உருளையை அதன் மேல் மேலும் கீழுமாக உருட்டினால் உருளையில் சமாக மை பதியும். பின்பு அந்த உருளை மீது கையை மெதுவாக வைத்து உருட்டினால் ஒரே விதமாகக் கையில் அச்சு பதியும். இந்த முறையில் மெல்லிய ரேகைகளும் நன்றாகப் பதிந்து விடும். பலவிதமான ரேகைகளைப் பரிசீலனை செய்தால் தான் ரேகைகள் காட்டும் பலன்களை ஓர் அளவுக்காவது கூற முடியும். ஒரு ரேகை காட்டும் குறிப்பைக் கொண்டு அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வரக் கூடாது.