AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு | Veerapandiya Kattabomman History in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வீரபாண்டிய கட்டபொம்மன்

முன்னுரை:

வீரபாண்டிய கட்டபொம்மன் 18 ஆம் நூற்றாண்டில் பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த ஒரு பாளையக்காரர் ஆவார். இவரது இயற்பெயர் வீர பாண்டியன். இவர் ஜனவரி 3, 1760 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்ந்தார். இவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் தாய் ஆறுமுகத்தம்மாள். இவர் தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட பாளையக்காரர்  ஆவார். இவர் தெலுங்கு மொழி  பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர். பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர். பின்பு முகமதியர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னன், வீர பாண்டிய கட்ட பொம்மு முன்னோர்களின் வீரத்தைப் போற்றி  பாஞ்சாலங்குறிச்சியை பரிசாக வழங்கினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் இளமைப் பருவம்

வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் செல்வாக்காகவே வளர்ந்தார். இவர் தந்தை மேல் உள்ள பாசம் மற்றும் ஈர்ப்பினால் தனது இளம் வயதில் தனது தந்தையான ஜெகவீர கட்டபொம்மனுக்கு உதவியாக இருந்து வந்தார். பிறகு கட்டபொம்மன் வாலிப வயதினை அடைந்த பின்பு வீரசக்கம்மாள் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு புத்திர பாக்கியம் அமையவில்லை. இவரது சந்ததி இவருடன் முடிந்துவிட்டது. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசராக அரியணை ஏறுதல்

பலகாரராக தனது தந்தையின் பதவியை அவர் 30 வயதை எட்டியபோது, ​​கிராமத்தின் 47வது பலகாரராக ஆனார்.தனது aஅதாவது 30 ஆம் வயதில் தனது தந்தையின் பாளையக்காரர் என்ற அரியாசனத்தில் அமர்ந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருக்கு இரு சகோதரர்கள் இருந்தும் அவர் அரியணை ஏற  அவர் மக்களிடத்தில் பெற்றிருந்த நன்மதிப்பும் அவரது வீரமும் தான் காரணம். 

பலகாரர்கள், தென்னிந்தியாவின் சில பகுதிகளில் விஜயநகரப் பேரரசின் காலத்திலிருந்து இராணுவத் தலைவர்களாகவும் நிர்வாக ஆளுநர்களாகவும் நியமிக்கப்பட்ட நிலப்பிரபுக்கள். அவர்களுக்கு ஒரு பாளையம் அல்லது கிராமங்களின் குழு பொறுப்பு வழங்கப்பட்டது, எனவே பாளையக்காரர் அல்லது அதன் ஆங்கிலமயமாக்கப்பட்ட பதிப்பு பாலிகர் என்று அழைக்கப்பட்டது.  பலகாரர்கள் விவசாயிகளிடமிருந்து வரிகளை வசூலித்தனர், காலப்போக்கில், அவர்கள் கிட்டத்தட்ட சுதந்திரமான தலைவர்களாக செயல்பட்டனர். கிழக்கிந்திய கம்பெனி இப்பகுதியை கைப்பற்றத் தொடங்கியபோது, ​​​​யார் வரி வசூலிக்க வேண்டும் என்ற கேள்வியில் அவர்கள் பலகாரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். பாலிகர்களை கட்டுப்படுத்தவும், வரி வசூலிக்கும் உரிமைகள் மற்றும் கட்டுப்பாட்டு பிரதேசத்தை பாதுகாக்கவும் நிறுவனம் விரும்பியது.கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு தலைவணங்க மறுத்து அவர்களுக்கு எதிராக போர் தொடுத்தார். இது பெரும்பாலும் 1799 ஆம் ஆண்டின் முதல் பாலிகர் போர் என்று அழைக்கப்படுகிறது. 

ஜாக்சன் துரை

வீரபாண்டிய கட்டபொம்மனிடம் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஜாக்சன் துரை வரிப்பணத்தினை வசூலிக்க வந்தான்.

வரி, வட்டி, திறை, கிஸ்தி…
யாரை கேட்கிறாய் வரி …
எதற்கு கேட்கிறாய் வரி…
வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..
உனக்கேன் கட்ட வேண்டும் வரி.

எங்களோடு வயலுக்கு வந்தாயா?
நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா?
அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? மாமனா? மச்சானா?
மானங்கெட்டவனே …!

என்று வீரபாண்டிய கட்டபொம்மன் துணிச்சலாக தனது வீரத்தினை ஜாக்சன் துரையிடம் வெளிப்படுத்தி வரியினை கட்ட முடியாது என்று துணிச்சலாக கூறி அவனை வெளியே அனுப்பினார்

நிலுவையில் உள்ள வாடகை வசூல் தொடர்பாக ஆங்கிலேயர்களுடன் நடந்த சந்திப்பு

பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியாமல் இருந்தார். இதனடிப்படையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி  ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குப் பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 – 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையைத் தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார்.

இறுதியில் செப்டம்பர், 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டிய கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர், 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.

கட்டபொம்மன் சிறைபிடிப்பு :

ஆங்கிலேயர்களால் அவரது ராஜ்ஜியம் கவரப்பட்டது.போரில் தனது ராஜ்ஜியத்தை இழந்த கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னரிடம் அடைக்கலம் கேட்டார். ஆனால் ஆங்கிலேயர்களுக்காக பயந்த மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்துவிட்டார். அதோடு அவரையும் ஆங்கிலேயர்கள் சிறை பிடித்து சென்றனர்.

கட்டபொம்மன் தூக்கிலிடப்படல்

கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுடன் ஒத்துப்போக மறுத்த ஒரு கேலிக்கூத்து விசாரணை நடந்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு 1799 அக்டோபர் 16 அன்று கயத்தாறு என்ற இடத்தில் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டார். அவரது கூட்டாளி சுப்பிரமணிய பிள்ளையும் தூக்கிலிடப்பட்டார், அதன் பிறகு அவரது தலை பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு ஸ்பைக்கில் கட்டப்பட்டது. மற்றொரு கூட்டாளி சௌந்தர பாண்டியன் சுவரில் தலையை அடித்துக் கொன்றார். கட்டபொம்மனின் சகோதரர் ஊமைதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 1800 இல் மற்றொரு பாலிகர் கிளர்ச்சி ஒரு வருடம் முழுவதும் நீடித்தது.

வீரபாண்டிய கட்டபொம்மனை சிறப்பித்தல்

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை போற்றும் விதமாகவும், நினைவு கூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

1974 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுச் சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வீரபாண்டிய கட்டபொம்மன் படம்

வீரபாண்டிய கட்டபொம்மனை சிறப்பிக்கும் வகையில், 1959 ஆம் ஆண்டில் நடிகர் சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்த திரைப்படம் வெளியிடப்பட்டது.