Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Viruchigam Rasi Sani Peyarchi Palangal 2022-2025, தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கும்ப ராசியில்
சனிப் பெயர்ச்சி 2023

விருச்சிக ராசி

சனி பெயர்ச்சி 2024 பலன்கள்

விருச்சிக ராசி
விருச்சிக பொதுப்பலன்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த சனி பெயர்ச்சியில், உங்கள் ராசிக்கு நான்காம் ராசியாகிய கும்ப ராசியில் சனி பிரவேசிக்கப் போகிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கான இந்த பெயர்ச்சி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறும் இந்த பெயர்ச்சி 2025 மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கும். அதாவது இந்த பெயர்ச்சி 26 மாத காலம் வரை நீடிக்கும். சனி உங்கள் ராசியிலிருந்து முறையே 3 ஆம் வீட்டையும் 4 ஆம் வீட்டையும் ஆட்சி செய்கிறார்.

உங்கள் ராசியிலிருந்து 4வது வீட்டில் சனி பெயர்ச்சி நடக்கிறது. சனி உங்கள் 3 மற்றும் 4 ஆம் வீடுகளை ஆட்சி செய்கிறார். 3 ஆம் வீடு முயற்சிகள், தொடர்பு மற்றும் இளைய உடன்பிறப்புகளைக் குறிக்கின்றது. அதே நேரத்தில் 4 ஆம் வீடு தாய், நிலம், வீடு மற்றும் ஆடம்பரமான வசதிகளைக் குறிக்கின்றது. இந்த பெயர்ச்சி சனியின் சொந்த ராசியான கும்பத்தில் நடக்கப் போகிறது. உங்கள் ராசி அதிபதி செவ்வாய்க்கு சனி பகை என்றாலும், சனி தனது கடமைகளை செய்வார். தனது சொந்தமான வீடுகளின் குணாதிசயங்களின் பலன்களை வழங்குவார்.

விருச்சிக உத்தியோகம்

10 ஆம் வீட்டில் சனியின் 7 ஆம் பார்வை உங்கள் தொழில் வாழ்க்கையில் தாக்கத்தை குறிக்கின்றது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். மேலும் வளர்ச்சியில் தாமதம் இந்த நேரத்தில் மிகவும் பொதுவானது. உங்கள் சக ஊழியர்களும், மேலதிகாரிகளும் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். மேலும் உங்கள் தகுதி மற்றும் திறனுக்கு ஏற்றதாகத் தோன்றும் வேலையை மட்டுமே செய்ய ஒப்புக்கொள்ளுங்கள். புதிய பணி மாற்றம் இருக்கலாம். இது ஒரு சில சிக்கலை ஏற்படுத்தக்கூடும்; இருப்பினும் உங்கள் திறமை மூலம் இந்த சூழ்நிலையை எளிதாக சமாளிப்பீர்கள்.

விருச்சிக காதல் / குடும்ப உறவு

தேவை ஏற்படும் போதெல்லாம் அம்மாவின் ஆதரவு இருக்கும். ஆனால் உங்கள் தந்தையின் ஆதரவு தாமதமாகிவிடும். மேலும் உறவில் விரிசல் ஏற்படலாம். உங்கள் உடன்பிறந்தவர்களுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கலாம். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். நிம்மதியான வாழ்க்கை அமையும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இப்பொழுது திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

விருச்சிக திருமண வாழ்க்கை

தம்பதிகளின் உறவு மிகவும் ஆதரவாகவும் சிறப்பாகவும் தெரிகிறது. பரஸ்பர புரிதல் இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் உதவுவீர்கள். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடலாம், மேலும் வாழ்க்கையில் அமைதி ஆட்சி செய்யலாம். இருப்பினும், நீங்கள் சில நேரங்களில் நெகிழ்வாக இருந்தால் நல்லது. கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, ​​அது உங்கள் உறவை சேதப்படுத்தாது.

விருச்சிக நிதிநிலை

இந்த ஆண்டு, உங்கள் நிதிநிலை நன்றாக இருக்கும். உங்கள் வியாபாரத்தில் ஆதாயமும் லாபமும் கூடும். சிலர் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வெற்றியையும் பெறலாம். இந்த முதலீடுகள் எதிர்காலத்திற்கான அடித்தளமாக இருக்கும். எனவே தெளிவான திட்டங்களை வைத்திருங்கள். எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்கக்கூடும். மேலும் ஆடம்பர வசதிகளுக்காக அதிக செலவு செய்யலாம். நில முதலீடுகள் பலன் தரும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் காணலாம்.

விருச்சிக மாணவர்கள்

மாணவர்கள் கல்வியில் பிரகாசிக்கலாம். அவர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த முடியும் மற்றும் அவர்களின் எதிர்காலத்தை அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்க முடியும். ஆராய்ச்சி தொடர்பான ஆய்வுகள் மிகவும் சிறப்பாக செய்ய இயலும். மேலும் முடிவுகள் சிறப்பாக இருக்கலாம். சிலர் உயர்கல்வி படிக்க உதவித்தொகை பெறலாம். போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிப்பவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்வில் தேர்ச்சி பெறலாம்.

விருச்சிக ஆரோக்கியம்

கருப்பை பிரச்சினைகள் ஏற்படலாம். மற்றும் குடல் பிரச்சினைகள் கூட இருக்கலாம். பெரிய மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மேற்கொள்ளவும் இந்த சனிப்பெயர்ச்சி அர்த்த அஷ்டம சனி என்று அழைக்கப்படுவதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயைக் கட்டுப்படுத்த உதவும் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நேரத்திற்கு உணவு சாப்பிடுங்கள். சரியான உணவை எடுத்துக்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

விருச்சிக பரிகாரம்

முதியோர் இல்லம் மற்றும் பிச்சைக்கரர்களுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள்.

சனிக்கிழமைகளில் அகல் விளக்கேற்றி சனி பகவானை வழிபடுங்கள்.

ஏழைகளுக்கு உணவு அளியுங்கள்

VEDIC NEW YEAR HOMA
எங்கள் தலை சிறந்த ஜோதிட நிபுணர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்

எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், சனிபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.

சனிபெயர்ச்சி 2023 – 2024 பலன்கள்

உங்களின் ராசிக்கான சனிபெயர்ச்சி 2023 பலன்களை அறியவும், சனிபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்

சனிபெயர்ச்சி 2023 – 2024 பரிகாரம்

சனி ஹோமம் செய்வதன் மூலம், சனி அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்