Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
Kanni Rasi Sani Peyarchi Palangal 2025-2027, கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
Virgo

மீன ராசியில்
சனிப் பெயர்ச்சி 2025

கன்னி ராசி

உற்சாகமூட்டும் புதுப்பிப்புகள் பெற உங்கள் விவரங்களை இப்போது உள்ளிடவும்

சனி பெயர்ச்சி 2025 பலன்கள்

கன்னி ராசி
கன்னி பொதுப்பலன்
General

கன்னி ராசி அன்பர்களே! மீன ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 7ஆம் வீட்டில் நிகழும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நடக்கும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார். சனி உங்கள் சந்திரன் ராசியிலிருந்து 5 ஆம் வீட்டையும் 6 ஆம் வீட்டையும் ஆட்சி செய்கிறார். உண்மை, ஒழுக்கம் மற்றும் நியாயம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சனி, இந்த காலக்கட்டத்தில் உங்கள் 7 வது வீட்டை (உறவுகள் மற்றும் கூட்டாண்மைகள்) பாதிக்கும் வகையில் உள்ளது. இந்த பெயர்ச்சி பொறுப்பு, கடின உழைப்பு மற்றும் வெற்றிக்கான விதிகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. பிரார்த்தனை அல்லது ஆன்மீக பயிற்சி உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், கடினமான காலங்களில் உங்களை வழிநடத்தவும் முடியும்.

கன்னி உத்தியோகம்
Career

உத்தியோக வளர்ச்சியில் தடைகள் மற்றும் தாமதங்களை எதிர்பார்க்கலாம். நேர்மறையாக இருங்கள், மனதைத் தளர விடாதீர்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். எனவே குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் பணிகளை முடிக்க இயலுமா என்பதை உறுதிப்படுத்தவும். சில சக ஊழியர்கள் அல்லது நெருங்கிய கூட்டாளிகள் நம்பத்தகாதவர்களாக இருக்கலாம். தொழில் முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். தவறான புரிதல்களைத் தவிர்க்க விதிமுறைகளையும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் தெளிவாக அறிந்து செயல்படவும். தவறான புரிதலைத் தவிர்க்க வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தொடர்பு கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் குறுக்குவழிகள் பலனைத் தர வாய்ப்பில்லை. விடாமுயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே வெகுமதியைப் பெற்றுத் தர முடியும்.

கன்னி காதல் / குடும்ப உறவு
Love

ஒற்றையர்களுக்கு இந்தக் காலகட்டம் தாங்கள் விரும்பும் ஒருவரிடம் உணர்வுகளை வெளிப்படுத்தவும், பிணைப்பை வலுப்படுத்தவும் சாதகமாக இருக்கும். உங்களை ஊக்குவிக்கும். அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்குவதற்கு வெளிப்படையான தொடர்பு இன்றியமையாதது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெற்றோரின் ஆதரவு தாமதமாகலாம். ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்கள் உறவை வலுப்படுத்தத் நீங்கள் சுதந்திரமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். எதற்கும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுங்கள். யாரையும் எதற்கும் கட்டாயப்படுத்தாதீர்கள்; மாறாக, மன அமைதி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். சில நேரங்களில் விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். விரக்தியடைவதற்குப் பதிலாக, சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளுங்கள். அது உங்கள் உறவுகளுக்கு மதிப்பு சேர்க்கும் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.

கன்னி திருமண வாழ்க்கை
Family

இந்த பெயர்ச்சி தம்பதிகளிடையே சிறந்த தொடர்பு மற்றும் புரிதலுக்கு வழிவகுக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் பாசம் மற்றும் ஆதரவை நீங்கள் எதிர்பார்க்கலாம். பரஸ்பரம் நீங்களும் அன்பையும் ஆதரவையும் வழங்கலாம். ஒருவருக்கொருவர் நெருக்கமான தொடர்பை வளர்க்கலாம். சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதன் மூலம் உறவில் சமரசத்தைக் காணலாம். உறவில் மன அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரலாம். சவாலான காலங்களில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கவும். இது சவால்களை எளிதாக்கும் மற்றும் பிணைப்புகளை வலுப்படுத்தும்.

கன்னி நிதிநிலை
Finances

நீங்கள் சம்பாதிக்கும் திறனுக்கு பெயர் பெற்றவர். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் திறமையுடன் சம்பாதிப்பீர்கள். நிலையான வருமான ஓட்டத்தை எதிர்பார்க்கலாம். இது எதிர்காலத்தை திட்டமிட சிறந்த நேரமாகும். புத்திசாலித்தனமாக செயல்படுங்கள் மற்றும் உங்கள் வருமானத்தில் சிலவற்றை எதிர்பாராத செலவுகள் அல்லது அவசர தேவைகளுக்கு ஒதுக்குங்கள்; நிதி விஷயங்களில் முனைப்புடன் இருப்பது உங்களுக்கு மன அமைதியைத் தரும். உங்கள் மனைவியின் நல்வாழ்வு அல்லது உங்கள் சொந்த நலனுக்காக நீங்கள் அதிக முதலீடு செய்யலாம். ஆனால் உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஊக வணிகம் மற்றும் சரக்கு வர்த்தகம் நேர்மறையான முடிவுகளைத் தரலாம், ஆனால் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் எச்சரிக்கையாக இருக்கவும். உண்மையான தேவைகளாக கருதப்படாத சில விஷயங்களுக்காக செலவு செய்வதை நீங்கள் தவிர்க்க வேண்டியிருக்கலாம்; நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் உங்கள் எதிர்காலத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

கன்னி மாணவர்கள்
Education

நீங்கள் கடினமாக உழைப்பதன் மூலம் சாதனைகளைப் படைக்கலாம். உங்கள் கவனத்திறன் மற்றும் அர்ப்பணிப்பு உங்களை வெற்றிப் படியில் ஏற வைக்கும். நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பட்சத்தில் வெற்றிக்கான சாதகமான வாய்ப்பு உள்ளது. கவனத் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் மூலம் வெற்றியை அடைய முடியும். உங்களில் சிலர் நீங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் பிரகாசிக்கக்கூடிய திறனைக் கொண்டிருக்கலாம். நீங்கள் ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டிருந்தால், நல்ல முடிவுகளையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கலாம். உங்கள் அர்ப்பணிப்பு உங்கள் துறையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகத் தெரிகிறது. உங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள், மற்றவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள். ஒத்துழைப்பு இன்னும் பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும்.

கன்னி ஆரோக்கியம்
Health

உங்கள் ஆரோக்கியம் மிக முக்கியமானது. எனவே அதனை நன்கு பேணிக் காக்க வேண்டும். முறையான தூக்கம் மேற்கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சினையைத் தவிர்க்கலாம். ஏதேனும் உடல்நல உபாதைகள் இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள். நோய் சிறியதாக இருக்கும் போதே அதாவது ஆரம்ப காலத்திலேயே கண்டு அறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நோய் பெரிதாகாமல் காத்துக் கொள்ளலாம். மருத்துவ சிகிச்சைகள் விரைவான மீட்புக்கு வழிவகுக்கும். ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சீரான உணவைப் பராமரிக்கவும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஆல்கஹால் தவிர்க்கவும், இது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.. உங்கள் முழங்கால்கள் மற்றும் எலும்புகளுக்கு கவனம் செலுத்துங்கள். வலுவான எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு உங்கள் உணவில் பச்சை இலை காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள். மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடற்பயிற்சி, மற்றும் விறுவிறுப்பான நடைபயிற்சி கூட கலோரிகளை எரிக்கவும் நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் உதவும். தயவு செய்து நோய்அறிகுறிகளுக்கு கவனம் செலுத்தி, அவற்றை ஆரம்பத்திலேயே கவனிக்கவும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த கவனமுடன் செயல்படுங்கள்.

கன்னி பரிகாரம்
Remedies

சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும்.

சனிக்கிழமைகளில் ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு போர்வைகள் மற்றும் துணிகளை தானம் செய்யுங்கள்.

சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்க்கவும்.

நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு மற்றும் தண்ணீரைக் கொடுங்கள்.

முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்யுங்கள்.

VEDIC NEW YEAR HOMA
எங்கள் தலை சிறந்த ஜோதிட நிபுணர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்

எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், சனிபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.

சனிபெயர்ச்சி 2025 – 2027 பலன்கள்

உங்களின் ராசிக்கான சனிபெயர்ச்சி 2025 – 2027 பலன்களை அறியவும், சனிபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்

சனிபெயர்ச்சி 2025 – 2027 பரிகாரம்

சனி ஹோமம் செய்வதன் மூலம், சனிவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்