Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | varavirukkum Kumbam Rasi Sani Peyarchi Palangal 2020-2023
Navaratri
AstroVed Menu
AstroVed
AstroVed
search
TA language
  • தமிழ் - TA
  • English - EN
  • हिंदी - HI
உள் நுழைக
close
  • முகப்பு
  • நிகழ்ச்சிகள்
  • ராசி பலன்
    • நேற்றைய ராசி பலன்
    • இன்றைய ராசி பலன்
    • நாளைய ராசி பலன்
    • வார ராசி பலன்
    • மாத ராசி பலன்
    • வருட ராசி பலன்
  • காலண்டர்
  • பூஜை & ஹோமம்
    • புரோகிதர் சேவைகள்
    • கணபதி ஹோமம்
    • கருப்ப சுவாமி ஹோமம்
    • கிரகப்பிரவேசம்
    • ஆயுஷ் ஹோமம்
    • கஜ பூஜை
    • சுமங்கலி பூஜை
    • கோ பூஜை
  • பெயர்ச்சி
    • குரு பெயர்ச்சி
    • சனி பெயர்ச்சி
    • ராகு கேது பெயர்ச்சி
  • ஜோதிடம்
    • இலவச ஜோதிடம்
    • சோழி பிரசன்னம்
    • கைரேகை ஜோதிடம்
    • ராசி கால்குலேட்டர்
    • திருமண பொருத்தம்
    • தமிழ் பஞ்சாங்கம்
    • ஜாதக கட்டம்
    • ஜாதகம் பொருத்தம்
    • தமிழ் ஜோதிடம்
    • 27 நட்சத்திரங்கள்
    • 9 நவகிரகங்கள்
  • வலைப்பதிவுகள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
தொடர்ந்து ஷாப்பிங் செய்யவும்
கட்டணம் செலுத்த தொடரவும்
x
loading
Aquarius

சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 கும்பம்

சனி பெயர்ச்சி 2020 - மகர ராசியில் அமரும் சனி பகவான்

தமிழ்
கும்பம் பொதுப்பலன்கள்
General

கும்ப ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 2ம் வீட்டில் நடக்கும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நிகழும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார். உங்கள் ராசியையும் 12ஆம் வீட்டையும் சனி ஆட்சி செய்கிறது. நீங்கள் ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கிறீர்கள். கும்ப ராசிக்காரர்கள் இயல்பாகவே ஒழுக்கம், உடையவர்கள். யதார்த்தமாக செயல்படுபவர்கள் மற்றும் கவனம் செலுத்துபவர்கள். மனச்சோர்வு, பற்றின்மை, மற்றும் தடைகள் போன்ற சிரமங்களை நீங்கள் சமீபத்தில் சந்தித்திருந்தாலும், ஒரு நல்ல செய்தி உங்களைத் தேடி வரலாம். இந்த பெயர்ச்சி, குறிப்பாக நிதி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு சார்ந்த நிவாரண உணர்வைத் தரக்கூடும். நினைவில் கொள்ளுங்கள், சவால்கள் இன்னும் எழலாம். இருப்பினும், கவனம் மற்றும் ஒழுக்கம் போன்ற உங்களின் இயல்பான குணங்கள் அவற்றை திறம்பட வழிநடத்த உதவும். உங்களுக்கு அமைதி மற்றும் மன வலிமையைக் கொண்டுவரும் செயல்களை மேற்கொள்ளுங்கள். இவை பிரார்த்தனை, தியானம், இயற்கையை ரசிப்பதில் நேரத்தை செலவிடுதல் அல்லது உங்கள் மனம் விரும்பும் எந்தவொரு செயலாகவும் இருக்கலாம். ஆதரவளிக்கும் இந்த செயல்களில் ஈடுபட்டு உங்கள் சாவல்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.

கும்பம் குடும்பமும் அன்பும்
Family

உறவில் உங்கள் தகவல் தொடர்பு திறன் மேம்பட்டு இருக்கும். உங்கள் குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், நீங்கள் எப்போதும் சந்திக்க முடியாத அளவுக்கு அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாம். சமரசம் செய்துகொள்ளவும் நெகிழ்வாக இருக்கவும் முயலுங்கள். மேலும், உரையாடலின் போது உங்கள் வார்த்தைகளை கவனத்தில் கொள்ளுங்கள். தவறான புரிதல்கள் அல்லது எதிர்மறைகளைத் தவிர்க்க உங்கள் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுப்பது நல்லது. உடன்பிறந்த உறவுகள் இப்போது சுமுகமாக இருக்காது. ஒற்றையர், புதிய உறவுகளைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள். தவறான நோக்கங்களைக் கொண்ட ஒருவரை நீங்கள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. நெருங்கி பழகுவதற்கு முன் யோசித்து ஆராய்ந்து செயல்படுங்கள்.

கும்பம் ஆரோக்கியம்
Health

உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். அதே நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள நீங்கள் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள். நாள்பட்ட நோயை நிர்வகிக்க நன்கு சமநிலையான உணவுத் திட்டத்தைப் பின்பற்றவும். விறுவிறுப்பான நடைபயிற்சி, யோகா அல்லது தியானம் போன்றவற்றை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த நடவடிக்கைகள் உங்கள் நல்வாழ்வை கணிசமாக மேம்படுத்தும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள் மற்றும் பாதுகாப்பான வேகத்தை பராமரிக்கவும். பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவில் கவனம் செலுத்துங்கள். இவை உங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றலை வழங்க முடியும். முதுகு மற்றும் முழங்கால் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். மன அழுத்தத்தைத் தவிருங்கள் நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்படலாம். எனவே, முறையான ஒய்வு மற்றும் தூக்கம் மேற்கொள்ளவும்.

கும்பம் பணம் / நிதிநிலைமை
Finances

உங்களுக்குத் தேவைப்படும்போது பணம் வரக்கூடும், ஆனால் சேமிப்பதற்கான திட்டத்தை வைத்திருப்பது அவசியம். குறிப்பாக ஆடம்பரச் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் சேமிப்பு இலக்குகளை பாதிக்கும். சிலருக்கு எதிர்கால லாபத்திற்கான சாத்தியமுள்ள முதலீட்டு யோசனைகள் இருக்கலாம். இருப்பினும், முதலீடு செய்வதற்கு முன் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் நீங்கள் விதிமுறைகளை முழுமையாகப் புரிந்துகொண்டால் மட்டுமே தொடரவும். வியாபார ஒப்பந்தங்கள் நம்பிக்கை தரும் வகையில் தோன்றும். வணிக விரிவாக்கத்திற்கான கடன்களை பரிசீலிப்பவர்கள் அல்லது நிதி தேவைகளுக்காக சொத்துக்களை விற்பவர்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும். பொதுவான பரிந்துரையாக, விரைவான பலன் தரும் திட்டங்கள் அல்லது அபாயகரமான வர்த்தகம் போன்ற குறுக்குவழிகளைத் தவிர்க்கவும்.

கும்பம் வேலை / தொழில்
Career

நீங்கள் ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கிறீர்கள், உங்கள் உத்தியோக வாழ்க்கையில் நீங்கள் சவால்களை சந்திக்க நேரிடும். இவை அதிகரித்த பணிச்சுமை காரணமாக இருக்கலாம். இவற்றை நிர்வகிப்பதற்கும் காரியங்களைச் செய்வதற்கும் தெளிவாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். நினைவில் கொள்ளுங்கள், சனியின் தாக்கம் இன்னும் இருப்பதால், உங்கள் பணிச்சூழலில் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரையும் நம்பாமல் எச்சரிக்கையாக இருப்பது புத்திசாலித்தனம். உங்கள் கடின உழைப்பு பலனளிக்கக்கூடும், மேலும் நீங்கள் சில நேர்மறையான முடிவுகளை எதிர்பார்க்கலாம். நீங்கள் ஒரு தொழில் மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதற்கான நடவடிக்கையை இப்போதே தொடங்கலாம், ஆனால் அதே நேரத்தில், புதிய நிறுவனம், உங்கள் பதவி மற்றும் பொறுப்புகள் மற்றும் நிர்வாக எதிர்பார்ப்புகள் பற்றிய அனைத்து சாத்தியமான ஆராய்ச்சிகளையும் செய்யுங்கள். இவற்றைச் செய்வதன் மூலம், நீங்கள் நல்ல நிலையில் இருக்க முடியும் மற்றும் உங்கள் உத்தியோகம் சார்ந்த சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.

கும்பம் கல்வி
Education

மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள். கவனச் சிதறல் குறைந்த மதிப்பெண்களுக்கு வழிவகுக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு, உங்கள் கனவுகள் நனவாகும். நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும் மற்றும் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். தெளிவான இலக்குகளையும் ஆய்வுத் திட்டத்தையும் அமைக்கவும். அமைதியான மற்றும் கவனச்சிதறல் இல்லாத படிப்பு இடத்தைக் கண்டறியவும். பெரிய பணிகளை சமாளிக்கக்கூடிய சிறு சிறு பகுதிகளாக பிரித்து செய்யவும். உங்கள் இலக்கை அடைந்து வெற்றி காண்பீர்கள். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன், நீங்கள் எந்த தடைகளையும் சமாளிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். முன்னேற்றம் தானாகக் கிட்டும்.

கும்பம் வீட்டில் செய்யக்கூடிய பரிகாரம்
Remedies

முடிந்தால் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அபிஷேகத்திற்காக நல்லெண்ணெய் வழங்கவும்.

தினமும் கணபதி மற்றும் அனுமனை வழிபடவும்.

முதியோர் இல்லங்களுக்கு ஆதரவு அல்லது நன்கொடைகளை வழங்கவும்.

சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்க்கவும்.

நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு மற்றும் தண்ணீரைக் கொடுங்கள்.

முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்யுங்கள்.

VEDIC NEW YEAR HOMA
எங்கள் தலை சிறந்த ஜோதிட நிபுணர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்

எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், சனிபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.

மேலும் வாசிக்க

சனிபெயர்ச்சி 2020-2023 பலன்கள்

உங்களின் ராசிக்கான சனிபெயர்ச்சி 2020-2023 பலன்களை அறியவும், சனிபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்

சனிபெயர்ச்சி 2020-2023 – பரிகாரம்

சனி ஹோமம் செய்வதன் மூலம், சனி அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்

மேலும் வாசிக்க

சனி பெயர்ச்சி பலன்கள் 2020

மேஷம்மேஷம்
ரிஷபம்ரிஷபம்
மிதுனம்மிதுனம்
கடகம்கடகம்
சிம்மம்சிம்மம்
கன்னிகன்னி
துலாம்துலாம்
விருச்சிகம்விருச்சிகம்
தனுசுதனுசு
மகரம்மகரம்
கும்பம்கும்பம்
மீனம்மீனம்

ஆஸ்ட்ரோவேத் பற்றி மேலும் தகவல்கள்

  • நிறுவன தகவல்கள்
  • பயனாளர் வழிகாட்டி
  • குழும நிறுவனங்கள்
  • Download Our App

    Play Store App Store

நிறுவன தகவல்கள்

  • எங்களைப் பற்றி
  • ஆலோசனைக் குழு
  • பொறுப்பு துறப்பு
  • தனியுரிமைக் கொள்கை
  • பாதுகாப்புக் கொள்கை
  • வேலை வாய்ப்பு
  • புரோகிதர் சேவைகள்

Download Our App

Play Store App Store

பயனாளர் வழிகாட்டி

  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • வேத ஜோதிடம்
  • பிறந்த நட்சத்திரம்
  • தொழில்நுட்ப பிரச்சினை

Make Money with Us

  • Become an Affiliate
குழும நிறுவனங்கள்

உதவிக்கு

சேவை மையம்
+91 9677391108
+91 44 43419898 (20 Lines)
"இலவச அழைப்பு எண் (இந்தியா)"
1800 102 9098
ஸ்கைப் (அமெரிக்கா)
+1 412-927 3625
"வாட்ஸ்ஆப்"
+91 9677391109
உதவி மின்னஞ்சல்
[email protected]
  • மாற்றுக் கட்டண முறை
  • ரத்து செய்தல்
  • வேலை வாய்ப்பு
  • தொடர்புக்கு
  • உங்கள் கருத்து
  • வரைபடம்

பின் தொடர

  • AstroVed - 25 Years of Excellent Service
  • AstroVed PodBean Badge
  • AstroVed - ISO Certified
  • Secured By SECTIGO
© 2001 - 2025 வாக் சவுண்ட்ஸ் இங்க் . - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.