Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Rishaba Rasi Sani Peyarchi Palangal 2022-2025, ரிஷப ராசி சனி பெயர்ச்சி பலன்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கும்ப ராசியில்
சனிப் பெயர்ச்சி 2023

ரிஷப ராசி

சனி பெயர்ச்சி 2024 பலன்கள்

ரிஷப ராசி
ரிஷப பொதுப்பலன்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த சனி பெயர்ச்சியில், உங்கள் ராசிக்கு பத்தாம் ராசியாகிய கும்ப ராசியில் சனி பிரவேசிக்கப் போகிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கான இந்த பெயர்ச்சி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறும் இந்த பெயர்ச்சி 2025 மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கும். அதாவது இந்த பெயர்ச்சி 26 மாத காலம் வரை நீடிக்கும். சனி உங்கள் ராசிக்கு 9 மற்றும் 10ஆம் வீட்டை ஆட்சி செய்கிறார்.

நீங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் இலக்குகளை நிர்ணயித்து அவற்றை சரி வர நிறைவேற்ற திட்டமிட வேண்டும். சனி உங்கள் ராசிக்கு 10 வது வீட்டில் பெயர்ச்சி அடைகின்றது. இது உங்கள் தொழில் வாழ்க்கையை மட்டுமல்ல, கர்மாவின் பங்கையும் குறிக்கிறது. நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். ஆனால் உங்கள் கடமைகளை நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும். தைரியமாக செயல்பட வேண்டும். உங்கள் சக்திக்கு உட்பட்டு இல்லாத எதற்கும் ஆசைப்படாதீர்கள், அதன் பின்னே ஓடாதீர்கள்” என்பது சனியின் சித்தாந்தம்.

ரிஷப உத்தியோகம்

ரிஷப ராசி அன்பர்களே! உங்கள் தொழில் வாழ்க்கையில் சில தடைகள் இருந்தபோதிலும் முன்னேற்றம் காணலாம். சனி தனது பலன்களை வழங்குவதில் தாமதப்படுத்துவார். நீங்கள் கொஞ்சம் கடினமாக உணர்வீர்கள். சனி நீதி வழங்குவதில் பெயர் பெற்றவர். உங்கள் மன உறுதியைக் குறைக்கும் சில விஷயங்கள் இருக்கலாம். சனி உங்கள் கடின உழைப்பை எதிர்பார்க்கிறார். எனவே குறுக்கு வழிகளை எதிலும் மேற்கொள்ளதீர்கள். சோதனை நேரங்ககளில் உங்களுக்குள் மறைந்து இருக்கும் சிறந்தவை வெளிப்படும். உங்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகளில் கவனம் செலுத்துங்கள். பொறுப்புடன் இருங்கள் மற்றும் பொறுமையாக இருங்கள்.

ரிஷப காதல் / குடும்ப உறவு

இளம் வயது ரிஷப ராசி அன்பர்கள் குறுகிய கால காதல் விவகாரங்களில் ஈடுபடலாம். இருப்பினும், சிலருக்கு இந்த ஆண்டு சரியான துணை கிடைக்காமல் போகலாம். மேலும் திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த ஆண்டின் இறுதியில் திருமண ஏற்பாடுகள் மற்றும் திட்டங்களில் வெற்றி காணலாம். திருமணமான தம்பதியர்கள் 2022 இல் தற்காலிகப் பிரிவினையால் பாதிக்கப்படுவீர்கள். உங்களின் வேலை மற்றும் இலக்குகளுக்கான நேர அர்ப்பணிப்பு காரணமாக நீங்கள் காதலுக்கு முக்கியத்துவம் அளிக்க இயலாமல் போகலாம். சிலருக்கு காதல் தோன்றிய வேகத்தில் மறையும். ஒரு சிலர் தங்கள் காதல் உறவில் ஏமாற்றங்களை சந்திக்க நேரும்.

ரிஷப திருமண வாழ்க்கை

திருமணத்தில் தாமதங்களை எதிர்கொள்பவர்கள் இந்த ஆண்டு தங்களின் சிறந்த ஆத்ம துணையை கண்டு கொள்வார்கள். திருமணமான தம்பதிகள் இடையே சில சமயங்களில் குடும்ப அமைதியை பாதிக்கும் சில சச்சரவுகள் இருக்கலாம். சிறிது அனுசரித்து செல்வதன் மூலம் உறவு மேம்படும். உடன்பிறந்தவர்கள் மற்றும் அன்பானவர்கள் உங்கள் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளுக்கு எதிராக இருக்கலாம். 'விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை' என்பதை நினைவில் கொள்ளவும். இது உங்கள் உறவுகளை மேம்படுத்தும்.

ரிஷப நிதிநிலை

இந்த ஆண்டு, சிறந்த நிதி அம்சங்கள் மற்றும் செல்வத்தில் திடீர் அதிகரிப்பு ஆகியவை காணப்படுகின்றது. உங்கள் ராசியிலிருந்து விரைய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் போக காரகர் ராகு சஞ்சாரம் காரணமாக நீங்கள் அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். எனவே உங்கள் செலவுகளைக் கண்காணிக்க வேண்டும். நீங்கள் இப்போது சில கடன்களை எடுக்க முடிவு செய்யலாம் ஆனால் அவை சில நிதி மாற்றங்களைக் கொண்டிருக்கலாம் என்பதால் கவனமாக இருக்கவும். முதலீடுகளைச் செய்யும்போதும், ஊகச் செயல்பாடுகளைச் செய்யும்போதும் கவனமாக இருங்கள். விதிமுறைகளில் திருப்தி அடைந்தால், நீங்கள் தொடரலாம்.

ரிஷப மாணவர்கள்

உங்கள் படிப்பில் உங்கள் படைப்பாற்றலையும் புத்திசாலித்தனத்தையும் காட்டலாம். உங்கள் முயற்சிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்படலாம். சில முரண்பாடுகள் உங்கள் முன்னேற்றத்தைக் தடுக்கலாம். உயரத்தை அடைவதில் கவனம் செலுத்துங்கள். கவலைப்படாதீர்கள். ஒரு சிலர் தங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் திறன்களை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளுக்காக வெளிநாடு செல்லலாம்.

ரிஷப ஆரோக்கியம்

உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும், அது உங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு புத்துயிர் அளிக்கும் உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானத்திற்காக நேரத்தை செலவிடுங்கள். சரிவிகித உணவை கடைப்பிடித்து சரியான நேரத்தில் சாப்பிட முயற்சி செய்யுங்கள். வயது முதிர்ச்சியடையும் போது, ​​மாற்றங்கள் ஒரே நாளில் நடக்காது என்பதை பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

ரிஷப பரிகாரம்

சனிக்கிழமைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அன்னதானம் செய்யவும்

சனிக்கிழமைகளில் சனி பகவான் மற்றும் ஆஞ்சநேயரை வணங்கி அனுமான் சாலீஸாவை கேளுங்கள் அல்லது ஜெபியுங்கள்

சனிக்கிழமைகளில் அசைவம் மற்றும் மதுவை தவிர்க்கவும்

VEDIC NEW YEAR HOMA
எங்கள் தலை சிறந்த ஜோதிட நிபுணர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்

எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், சனிபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.

சனிபெயர்ச்சி 2023 – 2024 பலன்கள்

உங்களின் ராசிக்கான சனிபெயர்ச்சி 2023 பலன்களை அறியவும், சனிபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்

சனிபெயர்ச்சி 2023 – 2024 பரிகாரம்

சனி ஹோமம் செய்வதன் மூலம், சனிவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்