Rama Navami Ceremonies & Grand Ram Lalla Statue Installation On Ram’s Birthday Powertime JOIN NOW
Mithuna Rasi Sani Peyarchi Palangal 2022-2025, மிதுனம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கும்ப ராசியில்
சனிப் பெயர்ச்சி 2023

மிதுன ராசி

சனி பெயர்ச்சி 2024 பலன்கள்

மிதுன ராசி
மிதுன பொதுப்பலன்

மிதுன ராசி அன்பர்களே! இந்த சனி பெயர்ச்சியில், உங்கள் ராசிக்கு ஒன்பதாம் ராசியாகிய கும்ப ராசியில் சனி பிரவேசிக்கப் போகிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கான இந்த பெயர்ச்சி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறும் இந்த பெயர்ச்சி 2025 மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கும். அதாவது இந்த பெயர்ச்சி 26 மாத காலம் வரை நீடிக்கும். சனி உங்கள் ராசியிலிருந்து முறையே 8 ஆம் வீட்டையும் 9 ஆம் வீட்டையும் ஆட்சி செய்கிறார்.

மிதுன ராசி அன்பர்களே! சனியின் பெயர்ச்சி உங்கள ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் நிகழப் போகிறது, இது உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு, அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீகத்தை குறிக்கும் வீடு. சனி தனது சொந்த ராசியில் நுழைவதால்,அந்த ராசி அதன் மூலத்திரிகோண வீடாகவும் இருப்பதால் இந்த காலக் கட்டத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். முன்னதாக, ராசியில் இருந்து 8-ம் வீட்டில் சனி நின்றதால் எதிர்பார்ப்புகள் நிறைவேராமை, மனச்சோர்வு, தடைகள், எதிர்பாராத நிதி இழப்பு ஆகியவை ஏற்பட்டது.. இப்போது இதற்கெல்லாம் ஒரு முடிவு வரலாம். இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை ஈர்க்க சிறந்த நேரமாக இருக்கும்.

மிதுன உத்தியோகம்

கடின உழைப்பு சனிக்கு பிடிக்கும். தாமதம் ஆனாலும் பலன்களை கண்டிப்பாக வழங்க மறுக்காதவர். எனவே நீங்கள் கடினமாக உழைத்தாலும் இந்த காலக் கட்டத்தில் தடைகள் மற்றும் சவால்கள் உங்கள் முயற்சிகளை பாதிக்கலாம், அது சனியின் வேலை. நல்ல விஷயம் என்னவென்றால், முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது இந்த தடைகள் மிகவும் மோசமாக இல்லை. உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் தெளிவான திட்டங்களை உருவாக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பொறுப்புகளை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் பலவீனங்களை அடையாளம் கண்டு அவற்றை சமாளிக்கவும். இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்யக்கூடும்.

மிதுன காதல் / குடும்ப உறவு

உங்கள் இளைய சகோதரருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், அது உறவில் விரிசலுக்கு வழிவகுக்கும். உங்கள் தேவை நேரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவை உங்கள் தந்தை தாமதப்படுத்தலாம். உங்கள் குழந்தைகளின் நடத்தை உங்கள் மன அமைதியை பாதிக்கலாம். நீங்கள் சரிசெய்ய முயற்சித்தால், இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க முடியும். தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல துணை கிடைக்கும்.

மிதுன திருமண வாழ்க்கை

தாம்பத்திய உறவு நன்றாக இருக்கும். இருவருக்கும் இடையிலான பிணைப்பு நன்றாக இருக்கும். நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வீர்கள், உங்கள் தேவைகள் நிறைவேறும். பொறாமை, பேராசை, காமம் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

மிதுன நிதிநிலை

ஏப்ரல் 2023 வரை, பணப்புழக்கம் சீராக இருக்கலாம், ஆனால் பின்னர், அது குறையலாம். அபரிமிதமான முடிவுகளை ஈர்க்கும் வகையில் உங்கள் முதலீடுகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளை தடுத்து நிறுத்துங்கள். ஒரு சிலர் சொத்து சார்ந்த முதலீடு செய்யலாம். உங்கள் தொழிலை விரிவுபடுத்த, நீங்கள் கடன்களைப் பெறலாம். சிறந்த தெளிவான ஆலோசனை பெற நெருங்கியவர்களின் ஆலோசனையைப் பெறவும்.

மிதுன மாணவர்கள்

மாணவர்கள் தங்கள் தகுதியை நிரூபிப்பார்கள், அவர்களின் கடின உழைப்பு அனைத்தும் நல்ல முடிவுகளைத் தரும். நீங்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க முயற்சி செய்யலாம். உங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், ஆராய்ச்சிகள் மற்றும் யோசனைகளால் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் அவற்றை முறியடிக்கலாம். சில சமயங்களில், உங்கள் இலக்குகளை அடைவதைத் தடுக்கும் சில தடைகள் இருக்கலாம். உங்கள் மன உறுதியையும் நேர்மறையான அணுகுமுறையையும் விட்டுவிடாதீர்கள்.

மிதுன ஆரோக்கியம்

நோயின்றி சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் கிரக சேர்க்கை மற்றும் பெயர்ச்சி பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு இரத்தக் கோளாறுகள், முழங்கால் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சளி அல்லது இருமல் இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள், விழிப்புடன் இருங்கள். விபத்துக்கள் மற்றும் பெரிய காயங்களைத் தவிர்க்க நீங்கள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். கவலைப்படத் தேவையில்லை. கவனமாக இருங்கள். தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்த்து, உடல் தகுதிக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். கண்டிப்பான உணவைப் பின்பற்றி, நார்ச்சத்து, கீரைகள், புதிய பழச்சாறுகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதால் நோய் எதிர்ப்புச் சக்தி வலுப்பெறும்.

மிதுன பரிகாரம்

சனிக்கிழமைகளில் ஏழை எளியவர்களுக்கு ஆடை மற்றும் போர்வை வழங்குங்கள்

சனிக்கிழமைகளில் ஏழை எளியவர்களுக்கு எள்ளு கலந்த சாதம் அளியுங்கள்

சனிக்கிழமைகளில் உங்களால் முடிந்த தொண்டினை பிறருக்கு செய்யுங்கள்.

VEDIC NEW YEAR HOMA
எங்கள் தலை சிறந்த ஜோதிட நிபுணர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்

எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், சனிபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.

சனிபெயர்ச்சி 2023 – 2024 பலன்கள்

உங்களின் ராசிக்கான சனிபெயர்ச்சி 2023 பலன்களை அறியவும், சனிபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்

சனிபெயர்ச்சி 2023 – 2024 பரிகாரம்

சனி ஹோமம் செய்வதன் மூலம், சனிவின் அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்