Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Meena Rasi Rahu Ketu Peyarchi Palangal 2023 to 2025 , மீன ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ராகு-கேது பெயர்ச்சி 2024


ராகு-கேது பெயர்ச்சி 2024 தேதிகள்
அக்டோபர் 30, 2023 முதல் மே 18, 2025


மீனம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2024

மீனம் பொதுப்பலன்கள்

ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகம் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் என்று அழைக்கப்படுகின்றன. ராகு போககாரகன் என்று அழைக்கப்படுகிறது. நமது விருப்பங்கள் மற்றும் பொருள் வசதிகளை ராகு குறிப்பிடுகிறது. கேது மோட்சகாரகன் என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக உணர்வு மற்றும் இறை தொடர்பை கேது குறிப்பிடுகிறது. இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த நிழல் கிரகங்களின் நிலைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மீன ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 7 ஆம் வீடாகிய கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 30 அக்டோபர் 2023 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் 2025 மே 18 வரை அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.

திருமணத்திற்கான திட்டம் வைத்திருப்பவர்கள் அதனை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும். அவசியம் திருமணம் நடத்த வேண்டும் எனில் நெகிழ்வாக நடந்து கொள்வதன் மூலம் அமைதி இருக்கும். திருமணமான தம்பதிகள் வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள். தவறான புரிந்துணர்வு இருக்கலாம். இதனால் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ளுங்கள். ஈகோ காரணமாக இருவருக்கும் இடையே மோதல்கள் இருக்கலாம்.

இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படலாம்.உண்ணும் உணவில் கட்டுப்பாடு தேவை. ஆரோக்கியம் அளிக்கும் உணவை உட்கொள்ளுங்கள். உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்கள் ராசியில் ராகு இருப்பதால் தேவையற்ற மன உளைச்சல்களை சந்திக்க நேரலாம். தூக்கமின்மையால் நீங்கள் பாதிக்கப்பட நேரலாம். இனம் புரியாத பயம் உங்கள் மனதில் தோன்றலாம். யோகா அல்லது தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். வயதில் மூத்தவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உங்கள் ராசியில் ராகு மற்றும் ஏழாம் வீட்டில் கேது இருப்பது உறவு நிலைக்கு அனுகூலமானது அல்ல. உங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கலாம். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் அன்பும் அக்கறையும் காட்டினாலும் அவரிடம் இருந்து உங்களுக்கு பரஸ்பரம் அன்பும் அரவணைப்பும் கிட்டாத நிலை இருக்கும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். கட்டாயப் படுத்தாதீர்கள். அதன் மூலம் பிரிவினைக்கு வாய்ப்பு உள்ளது.

உங்கள் பெற்றோரிடமிருந்து ஆதரவு கிடைக்கும். நீங்கள் ஆறுதலை தேடும் போது அவர்களின் வழிகாட்டல் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் அவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. தேவைப்படும் நேரத்தில் உங்கள் உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். அவர்களுடன் உங்களின் தரமான நேரத்தை கழிப்பதன் மூலம் நல்லிணக்கம் கூடும். நண்பர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கருத்துகளுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளது.

இந்த காலக்கட்டத்தில் அதிக செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரலாம். விரயங்கள் அதிகமாக இருக்கலாம். முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும். உங்கள் தேவைகளுக்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். தேவைப்பட்டால் மட்டுமே செலவுகளை மேற்கொள்ள வேண்டும். ஆடம்பர செலவுகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் கடன் வாங்கும் அளவிற்குக் கூட செல்லலாம். நிதி விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுங்கள். ஊக வணிகங்களில் ஈடுபடாதீர்கள். முதலீடுகளை கவனமாக மேற்கொள்ளுங்கள். நீங்கள் தொழில் செய்பவர் என்றால் ஒப்பந்த ஆவணங்களில் திருப்தி அடைந்த பின்னர் கையொப்பம் இடுங்கள். தொழிலில் லாபம் கிடைக்க தாமதம் ஏற்படலாம்.

இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் உங்கள் உத்தியோக வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கலாம். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் மூலம் சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். எனவே கவனம் தேவை. அதிக பணிச்சுமைகள் இருக்கலாம். வேலை மாறுவதற்கான எண்ணம் கொள்வீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு கிடைக்க தாமதம் ஆகலாம். எனவே பொறுமை காக்க வேண்டும். தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் மந்த நிலை இருக்கும். எனவே நஷ்டத்தை தவிர்க்க யோசித்து செயல்படுங்கள். இவையெல்லாம் தாற்காலிக தடைகளாகத் தான் இருக்கும். எனவே இதைப் பற்றி பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள். திட்டமிட்டு செயல்படுங்கள். இந்த காலக்கட்டத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளை நம்ப வேண்டாம். அரசாங்கத் துறையில் பணி புரிபவர்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். இதனால் மன உளைச்சல் ஏற்படலாம். பொறுமை மிகவும் அவசியம்.

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இது போட்டிகள் நிறைந்த உலகம் என்பதால் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். விடா முயற்சியுடனும் ஈடுபாட்டுடனும் படிப்பதன் மூலம் வெற்றி வாகை சூடலாம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் இது உகந்த நேரம் ஆகும். சரியான வழிகாட்டிகளின் ஆலோசனைகளை மேற்கொண்டு உங்கள் எதிர்காலத்திற்கான தளத்தை அமைத்துக் கொள்ள இது ஏற்ற நேரம். வெளிநாடு சென்று படிக்கவும் இது ஏற்ற நேரம். ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்கள் பிறருக்கு பயன்படும் புது விஷயங்களை கண்டுபிடிக்கலாம்.

எங்கள் நிபுணர் ஜோதிடருடன் பேசுங்கள்

இந்த ஜோதிட ஆலோசனை ராகு கேது போக்குவரத்து உங்களை தனிப்பட்ட மட்டத்தில் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், எப்போது செயல்பட வேண்டும், எப்போது காத்திருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க உதவுகிறது.

ராகு – கேது பெயர்ச்சி 2024 அறிக்கை

உங்கள் சந்திரன் அடையாளத்தின் அடிப்படையில் ராகு மற்றும் கேது போக்குவரத்து 2024 உங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கையை ஆர்டர் செய்யவும்.

ராகு – கேது பெயர்ச்சி 2024 க்கான தீர்வுகள்

ராகு கேது டிரான்ஸிட் ரெமிடியல் ஹோமம் (ஃபயர் லேப்) பாம்பு கிரகங்களை சமாதானப்படுத்தலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற உதவும்.

மீனம் வீட்டில் செய்யக்கூடிய பரிகாரம்
  1. தினமும் விநாயகர் (கேதுவின் அதிபதி) மற்றும் துர்கா தேவி (ராகுவின் அதிபதி) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.
  2. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் துர்கா சாலிசா மந்திரம் மற்றும் தினமும் கணேஷ பஞ்சரத்னம் மந்திரத்தை ஜெபிக்கவும் அல்லது கேட்கவும்.
  3. நீங்கள் குருவின் ராசியில் பிறந்திருப்பதால் வேத பண்டிதர்கள் அல்லது ஆசிரியர்களை மாதந்தோறும் ஆதரிக்கத் தொடங்குங்கள்; அவர்களுக்கு உதவுவது எதிர்மறையான விளைவுகளை குறைக்கலாம்.
  4. அருகிலுள்ள கோவிலுக்கு மாதந்தோறும் சுத்தமான நெய்யை வழங்கவும், முடிந்தால், தொழுநோயாளிகளுக்கு நிதியுதவி வழங்கவும்.
  5. 'ஓம் ராஹவே நம' என்று 18 முறையும், 'ஓம் கேதுவே நம' என்று 7 முறையும் ஜெபிக்கவும்.