Aadi Pooram on Aug. 7, 2024 : Invoke Andal's Blessings for the Family & a Better Life Order Now
Kumbha Rasi Sani Peyarchi Palangal 2022-2025, கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கும்ப ராசியில்
சனிப் பெயர்ச்சி 2023

கும்ப ராசி

சனி பெயர்ச்சி 2024 பலன்கள்

கும்ப ராசி
கும்ப பொதுப்பலன்

கும்ப ராசி அன்பர்களே! இந்த சனி பெயர்ச்சியில், உங்கள் ராசியான கும்ப ராசியில் சனி பிரவேசிக்கப் போகிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கான இந்த பெயர்ச்சி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறும் இந்த பெயர்ச்சி 2025 மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கும். அதாவது இந்த பெயர்ச்சி 26 மாத காலம் வரை நீடிக்கும். சனி உங்கள் ராசியிலிருந்து முறையே 1 ஆம் வீட்டையும் 12ஆம் வீட்டையும் ஆட்சி செய்கிறார்.

இந்த சனிபெயர்ச்சி உங்கள் ராசியில் நடக்கப் போகிறது. எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனச்சோர்வு, பற்றின்மை மற்றும் சங்கடங்கள் இருக்கலாம். நீங்கள் எந்தவொரு செயலையும் தெளிவாக செயல்படுத்த வேண்டும். சனிப்பெயர்ச்சி எப்போதுமே படிப்ப்பினையை அளிக்க வல்லது. எனவே முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள். அவர் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் போது, ​​முன்னேற்றம் மெதுவாக இருக்கும். உங்கள் முன்முயற்சிகள் நல்ல பலனைத் தராமல் போகலாம், மேலும் உங்கள் ஆற்றல் நிலைகள் குறைவாக இருக்கலாம். பொறுமை மிகவும் முக்கியமானது. எப்போதும் அமைதியையும் நெகிழ்வுத்தன்மையையும் பராமரிக்கவும். தினமும் பிரார்த்தனைகளுக்கு நேரத்தை செலவிடுங்கள். இது அதிசயங்களைச் செய்யும். உங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாவிட்டால், உங்கள் நலம் விரும்பிகளிடம் பேசி நல்ல தெளிவு பெறவும்.

கும்ப உத்தியோகம்

வேலையில் பொறுப்புகள் அதிகமாகும். அதிக பணிச்சுமை அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் தொழிலில் மெதுவான முன்னேற்றம் ஏற்படலாம். சிலர் நல்ல வேலை தேடலாம். ஆனால் பணியில் சேர்வதற்கு முன், நிறுவனம் மற்றும் பணிச்சூழல் குறித்து சாத்தியமான அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்யுங்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உங்கள் பணியின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்படும். தற்போதைய காலகட்டத்தை கற்றுக் கொள்வதற்கான நேரமாக கருதுங்கள், அதிகம் கவலைப்பட வேண்டாம். பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.

கும்ப காதல் / குடும்ப உறவு

அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கலாம். அன்புக்குரியவர்கள் உங்கள் கருத்துகளுக்கு எதிராக இருப்பார்கள், அது சில மோதல்களுக்கு வழிவகுக்கும். பல விஷயங்கள் உங்களை மனச்சோர்வடையச் செய்யும், நம்பிக்கையற்றதாக இருக்கும். முடிந்தவரை சமரச மனப்பான்மையைக் கடைப்பிடிக்கவும். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளை அமைத்துக் கொள்ள இது சிறந்த நேரம் அல்ல. மக்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களைப் பயன்படுத்தலாம்.

கும்ப திருமண வாழ்க்கை

திருமணமான தம்பதிகள் உறவில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கோபம் அதிகரிக்கும் போது அமைதியாக இருப்பது நல்லது. திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஏனெனில் முடிவுகளை எடுப்பதற்கு இது சரியான நேரம் அல்ல. நேரம் ஆதரவாக இல்லாததால், நீங்கள் மிகவும் தெளிவாக தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம்

கும்ப நிதிநிலை

உங்கள் செலவுகளில் கவனமாக இருங்கள். உங்கள் நிதி விஷயங்களில் சில பின்னடைவுகள் இருக்கலாம். பணப்புழக்கம் சீராக இருக்கும். நீங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் பணம் மற்றும் சேமிப்பு தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் மற்றும் தொழில் விரிவாக்கம் தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை சிறிது காலத்திற்கு ஒத்தி வையுங்கள். முதலீடுகள் கூட கவனமாகச் செய்ய வேண்டும். விதிமுறைகளை நன்கு அறிந்து பிறகு செய்யுங்கள். உங்கள் வேலையைச் செய்ய குறுக்குவழிகளுக்குச் செல்லாதீர்கள் அல்லது சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். உங்கள் பணியாளர்களை சனி பிரதிநிதித்துவம் செய்வதால் அவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். இது சனியை மகிழ்விக்கும் மற்றும் அதன் எதிர்மறையை குறைக்கும்.

கும்ப மாணவர்கள்

கவனமுடன் படித்தால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். இந்த காலக் கட்டத்தில் நீங்கள் அதிக தடைகளை சந்திக்க நேரும். எனவே திட்டமிட்டு உங்கள் படிப்பை மேற்கொள்ளுங்கள். நீங்கள் ஆர்வத்துடன் படித்தால் பிரகாசிப்பீர்கள். பாடங்களில் சந்தேகம் இருந்தால் ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்பவர்கள் வெற்றி காண கடினமாக உழைக்க வேண்டும். ஆராய்ச்சிக் கல்வி பயில்பவர்கள் கண்டிப்பாக வெற்றி காண்பார்கள். வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். தாங்கள் விரும்பும் வெற்றியைப் பெறுவார்கள்.

கும்ப ஆரோக்கியம்

தேவையற்ற பதற்றத்தை தவிருங்கள். உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள். மசாலா கலந்த பொருட்களை அதிகம் உண்ணாதீர்கள். துரித உணவுவகைகளைத் தவிருங்கள். சிறிய அளவில் ஆரோக்கிய பாதிப்பு இருந்தாலும் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசியுங்கள். அடிக்கடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள். காய்கறி மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கும்ப பரிகாரம்

தெருவில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு காலணிகளை வாங்கித் தாருங்கள்

ஓம் நீலாஞ்சன சமாபாசம் ரவி புத்ரம் யமாக்ராஜம் சாயா மார்த்தாண்ட சம்பூதம் தம் நமாமி ஷனைஷ்ச்சரம் – இந்த மந்திரத்தை தினமும் ஜெபியுங்கள்

வீட்டில் வேலை செய்யும் பணியாட்களை தரக் குறைவாக நடத்தாதீர்கள்.

VEDIC NEW YEAR HOMA
எங்கள் தலை சிறந்த ஜோதிட நிபுணர்களுடன் கலந்து ஆலோசியுங்கள்

எங்கள் ஜோதிடர்களின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம், சனிபெயர்ச்சி பலன்களையும், எந்த முக்கிய செயல்களை தற்போது செய்யலாம், எதை தள்ளிப்போடலாம் என்று அறிந்து, அதற்கேற்ப நீங்கள் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணலாம்.

சனிபெயர்ச்சி 2023 – 2024 பலன்கள்

உங்களின் ராசிக்கான சனிபெயர்ச்சி 2023 பலன்களை அறியவும், சனிபெயர்ச்சி காரணமாக உங்கள் வாழ்வில் ஏற்படவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை அறியவும், தனிப்பட்ட பலன்களுக்கு ஆர்டர் செய்யுங்கள்

சனிபெயர்ச்சி 2023 – 2024 பரிகாரம்

சனி ஹோமம் செய்வதன் மூலம், சனி அருளால் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் செல்வம் மேம்படும்