Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Kanni Rasi Rahu Ketu Peyarchi Palangal 2023 to 2025 Tamil, கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 to 2025
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ராகு-கேது பெயர்ச்சி 2024


ராகு-கேது பெயர்ச்சி 2024 தேதிகள்
அக்டோபர் 30, 2023 முதல் மே 18, 2025


கன்னி ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2024

கன்னி பொதுப்பலன்கள்

ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது கிரகம் வடக்கு மற்றும் தெற்கு முனைகள் என்று அழைக்கப்படுகின்றன. ராகு போககாரகன் என்று அழைக்கப்படுகிறது. நமது விருப்பங்கள் மற்றும் பொருள் வசதிகளை ராகு குறிப்பிடுகிறது. கேது மோட்சகாரகன் என்று அழைக்கப்படுகிறது. ஆன்மீக உணர்வு மற்றும் இறை தொடர்பை கேது குறிப்பிடுகிறது. இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளுக்கு ஜோதிடத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த நிழல் கிரகங்களின் நிலைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கன்னி ராசிக்காரர்களுக்கு, ராகு பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 7 ஆம் வீடாகிய மீன ராசியிலும், கேது பெயர்ச்சி உங்கள் ராசியாகிய கன்னி ராசியிலும் நடக்கும். இந்த பெயர்ச்சி 30 அக்டோபர் 2023 அன்று நிகழும், மேலும் ராகு மற்றும் கேது இருவரும் 2025 மே 18 வரை அந்தந்த ராசிகளில் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த பெயர்ச்சி 18 மாதங்கள் நீடிக்கும்.

திருமணமான தம்பதிகளுக்கு வாழ்க்கை புளிக்கும். கணவன் மனைவிக்கு இடையே தவறான புரிதல்கள் உருவாகலாம்; எனவே நெகிழ்வாக இருக்க முயற்சி செய்யுங்கள் மற்றும் சமரசத்திற்கு தயாராக இருங்கள். உங்கள் மனைவியுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டியிருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, நெகிழ்வுத்தன்மை மற்றும் பொறுமை ஆகியவை இந்த தற்காலிக தடைகளை கடக்க உதவும் முக்கிய காரணிகளாக இருக்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு உங்களை ஆட்கொள்ளலாம். எதிர்மறை உணர்ச்சிகளுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்காதீர்கள்.

இந்த பெயர்ச்சியில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த ஆரோக்கியக் குறைபாடுகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். புத்துணர்ச்சியுடன் இருக்க சத்துள்ள பழங்களை உண்ணுங்கள். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள். அதிக பணிகள் காரணமாக உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளியுங்கள். உடற்பயிற்சி, யோகா தியானம் போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்குங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும்.

இந்த பெயர்ச்சிக் காலம் உறவு நிலைக்கு சாதகமாக இல்லை என்பதால் ஒற்றையர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். காதலுக்கு இது உகந்த நேரமல்ல. நீங்கள் எதிர்பார்க்கும் பிணைப்பு இருக்க வாய்ப்பில்லை இது சில கவலைகள் மற்றும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும். உறவில் சில மோதல்கள் ஏற்படலாம். தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். சில விஷயங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும்.

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். குடும்ப உறுப்பினர்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். அவர்களின் தேவைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கும். குடும்பத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு உடனடியாக எதிர்வினை புரியாதீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் உங்களின் தரமான நேரத்தை கழித்து உங்களின் அன்பு மற்றும் அரவணைப்பை வெளிப்படுத்துங்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் கூடும்.

நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் தேவைகளை நீங்கள் நிறைவேற்றிக் கொள்வீர்கள். நீங்கள் கணிசமான பணத்தை சேமிப்பீர்கள். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவில் இருக்கும். உங்களின் பிரியமானவர்களுக்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். முதலீடுகளை நீங்கள் மேற்கொள்ளலாம். ஊகம் மற்றும் பிற பரஸ்பர நிதி முதலீடுகள் எதிர்பார்த்த லாபங்களை அளிக்கும். எதிர்பாராத பணம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது அதனைக் கொண்டு உங்கள் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்துக் கொள்வீர்கள். ஒரு சிலர் கடனை அடைத்து அதில் இருந்து விடுபடுவீர்கள்.

உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விஷயங்கள் நடக்காமல் போகலாம். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இல்லாமல் இருக்கலாம். நீங்கள் கடின உழைப்பை மேற்கொண்டாலும் முன்னேற்றத்தில் தாமதம் இருக்கலாம். உங்கள் ராசியில் கேது இருப்பதால் பற்றின்மை உணர்வு இருக்கலாம். எனவே பொறுமை தேவை. பணியிடத்தில் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் எதிர்கால திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வேலை மாற்றம் குறித்த எண்ணம் இருந்தால் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் தேவை. அராசாங்கத் துறையில் இருப்பவர்கள் அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில் செய்பவர்கள் நஷ்டங்களைத் தவிர்க்க கூட்டாளிகள் மற்றும் விதி முறைகளில் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடக்கம் அல்லது தொழில் விரிவாகத்தை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும்.

மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி சவால்கள் நிறைந்த காலமாக இருக்கும். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெற மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டும். திட்டமிட்டுப் பாடங்களைப் படிக்க வேண்டும். குழுவாக படிப்பது வரவேற்கத்தக்கதது அல்ல. ஆராய்ய்சி சார்ந்த கல்வியில் இருப்பவர்கள் நல்ல முடிவுகளைப் பெற அர்ப்பணிப்புடன் படிக்க வேண்டும். நீங்கள் புதிய திறமைகளை கற்றுக் கொள்ள இந்த பெயர்ச்சி அனுகூலமாக உள்ளது. வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் மாணவர்கள் தாங்கள் நினைக்கும் துறையில் விரும்பும் கல்லூரியில் சேர்க்கை கிடைக்கப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்.

எங்கள் நிபுணர் ஜோதிடருடன் பேசுங்கள்

இந்த ஜோதிட ஆலோசனை ராகு கேது போக்குவரத்து உங்களை தனிப்பட்ட மட்டத்தில் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், எப்போது செயல்பட வேண்டும், எப்போது காத்திருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்க உதவுகிறது.

ராகு – கேது பெயர்ச்சி 2024 அறிக்கை

உங்கள் சந்திரன் அடையாளத்தின் அடிப்படையில் ராகு மற்றும் கேது போக்குவரத்து 2024 உங்கள் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட அறிக்கையை ஆர்டர் செய்யவும்.

ராகு – கேது பெயர்ச்சி 2024 க்கான தீர்வுகள்

ராகு கேது டிரான்ஸிட் ரெமிடியல் ஹோமம் (ஃபயர் லேப்) பாம்பு கிரகங்களை சமாதானப்படுத்தலாம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற உதவும்.

கன்னி வீட்டில் செய்யக்கூடிய பரிகாரம்
  1. தினமும் விநாயகர் (கேதுவின் அதிபதி) மற்றும் துர்கா தேவி (ராகுவின் அதிபதி) ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.
  2. சனிக்கிழமைகளில் கருப்பு நாய்களுக்கு உணவளிக்கவும்.
  3. உடல்நலம் அனுமதித்தால், செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விரதம் அனுசரிக்கவும்.
  4. தினமும் 'ஓம் ராஹவே நமஹ 'என்று 18 முறையும், 'ஓம் கேதுவே நமஹ' என்று 7 முறையும் ஜபிக்கவும்.
  5. அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு பால் வழங்கி தெய்வீக அருள் பெறவும்.