தமிழ் மாதம் மொத்தம் பன்னிரண்டு. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்புத்தன்மை உள்ளது. அந்த வகையில் கார்த்திகை மாதம் என்றாலே பல திருவிழாக்கள் இருந்தாலும் தீபத் திருவிழா மிகச்சிறப்பு வாயந்ததாக கருதப்படுகிறது. சிவபிருமானை ஜோதி ரூபமாக வழிபடக் கூடிய மாதம்.
இந்த ஆண்டு கார்த்திகை மாதம் பௌர்ணமி நடசத்திரம் இணைந்து வரும் நாளான 26.11.2023 அன்று திருவண்ணமலையில் திருக் கார்த்திகை தீப விழா நடை பெறும்.
இந்த விழாவின் முத்தாய்ப்பாக கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
17 நவம்பர் 2023: கார்த்திகை 1 வெள்ளிக்கிழமை திருவண்ணாமலையில் கொடியேற்றம்கோலாகலமாக நடைபெற்றது.
20 நவம்பர் 2023: (கார்த்திகை 4 திங்கள்) வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு வாகனத்தில் ஈசன் வலம்வருதல்.
21 நவம்பர் 2023: (கார்த்திகை 5 செவ்வாய்) வெள்ளி ரிஷப வாகனம்
22 நவம்பர் 2023: (கார்த்திகை 6 புதன்) வெள்ளி ரதம்
23 நவம்பர் 2023: (கார்த்திகை 7 வியாழன்) பஞ்சமூர்த்திகள் மகா ரதம். காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் வடம் பிடித்தல்
26 நவம்பர் 2023: (கார்த்திகை 10 ஞாயிறு) பரணி தீபம் காலை 4 மணிக்கு
மாலை 6 மணிக்கு மகா தீபம்
வீட்டில் தீபம் ஏற்ற சரியான நேரம் :
தீபத் திருநாளான கார்த்திகை தீபம் அன்று கார்த்திகை தீபம் நம் வீடுகளிலும் ஏற்றி வைத்து வழிபடுவது அவசியம். இது காலம் காலமாக நம்முடைய வழக்கத்தில் இருந்து வருகிறது எனலாம்.
நாம் அன்றைய தினத்தில் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு மற்றும் வீட்டில் பூஜை அறையில் விளக்குகளை தயார் செய்து விளக்கேற்றி வழிபட தயாராக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டவுடன் மாலை 6 மணிக்கு நாமும் நம் வீட்டில் வாசல் மற்றும் பிற இடங்களில் வைக்கக்கூடிய தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025