இந்து நாட்காட்டியின்படி, ஸ்ரீ ராம நவமி வளர்பிறை ஒன்பதாம் நாளில் வருகிறது, அதாவது சுக்ல பக்ஷம், சித்திரை மாதத்தில், நவமி திதியில் வரும் இந்த ஸ்ரீ ராம நவமி விழா சித்திரை நவராத்திரியின் ஒரு பகுதியாகும். கிரிகோரியன் நாட்காட்டி படி இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி ராம நவமி வருகிறது. இதுவிருப்ப அரசு விடுமுறை நாள் ஆகும்.
ராம நவமி முஹுர்த்த நேரம் – 17 ஏப்ரல் 2024 அன்று காலை 11:22 முதல் மதியம் 01:54 வரை
ராம நவமி மதியத் தருணம் – 17 ஏப்ரல் 2024 அன்று மதியம் 12:38
நவமி திதி தொடக்கம் – 16 ஏப்ரல் 2024 அன்று பிற்பகல் 01:23
நவமி திதி முடிவு – 17 ஏப்ரல் 2024 அன்று பிற்பகல் 03:14
ராம நவமியின் புனித நாளில், பக்தர்கள் பிரார்த்தனைகள், கதைகள் மற்றும் ராமாயண இதிகாச பாராயணம் செய்து சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்திகளை நடத்துகிறார்கள். நாட்டின் பல பகுதிகளில் சிறிய ராமர் விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்வித்து ஆடைகள் மற்றும் ஆபரணங்களில் அலங்கரித்து, தொட்டிலில் வைப்பது ஒரு பாரம்பரியம்.
ராமரின் பிறந்த நாளான ஸ்ரீ ராம நவமி அன்று, கோயில்களிலும், வீடுகளிலும் பஜனை மற்றும் கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, அங்கு கலைஞர்கள் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கலை நிகழ்சிகளை நடத்துகிறார்கள். சிறப்பு கலந்துரையாடல் மற்றும் பட்டிமன்றங்கள் பல நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன, அதைத் தொடர்ந்து சமூக உணவு மற்றும் தொண்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. .
பக்தர்கள் ஸ்ரீ ராமரைக் குறித்து அன்றைய தினம் விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். சிலர் உணவு மற்றும் தண்ணீரை முழுவதுமாகத் தவிர்ப்பதைத் தேர்வுசெய்தாலும், சிலர் சாபுதானா,(ஜவ்வரிசி) பானகம் மற்றும் நீர் மோர் மட்டும் உட்கொண்டு விரதம் இருக்கிறார்கள்.
பக்தர்கள் சரயு நதியின் புனித நீரில் நீராடிவிட்டு ராமர் கோயிலுக்குச் செல்வார்கள். ரதயாத்திரைகள் அல்லது ஷோபா யாத்திரைகள் என்று அழைக்கப்படும் ரத ஊர்வலங்கள் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் மிகவும் விமரிசையாக ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.
அயோத்தியைத் தவிர, சீதா சமாஹித் ஸ்தல் (உத்திரப் பிரதேசம்), சீதாமர்ஹி (பீகார்), ராமேஸ்வரம் மற்றும் ராமநாதசுவாமி கோயில் (தமிழ்நாடு), பத்ராசலம் (தெலுங்கானா) ஆகிய இடங்களிலும் ராம நவமி கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025