AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
திதி நித்யா தேவிகள்- சந்திரனின் 15  கலைகளையும் ஆட்சி செய்யும் காவல் தெய்வங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

திதி நித்யா தேவிகள்- சந்திரனின் 15  கலைகளையும் ஆட்சி செய்யும் காவல் தெய்வங்கள்

திதி நித்யா தேவிகள்- சந்திரனின் 15  கலைகளையும் ஆட்சி செய்யும் காவல் தெய்வங்கள்

ஸ்ரீ சக்கரத்தில் பிந்து மத்திய வாசினியாக ஆசை, சக்தி மற்றும் செழிப்பைக் குறிக்கும் லலிதா பரமேஸ்வரி வீற்றிருக்க அவளைச் சுற்றி இருக்கும் முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே இந்த திதி நித்யா தேவிகள்.

பதினைந்து திதிகளுக்கும் வெவ்வேறு தேவதைகள் அதிபதியாக உள்ளனர். அவர்களின் பெயர்கள் கீழே அந்தந்த திதிகளுடன்  கொடுக்கப்படுள்ளது. த்ரிக் கணித  பஞ்சாங்கத்தின் படி ஒவ்வொரு திதிக்கும் உண்டான திதி சூன்ய ராசிகளும் அதற்குரிய கிரகங்களும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

14 திதிகள், திதி சூன்யத்தால் பாதிப்பிற்குள்ளாகும் 12 ராசிகள், மற்றும் 7கிரகங்கள்

திதிகள்  திதி சூன்ய ராசிகள்  திதி சூன்ய கிரகங்கள்  திதி சூன்யம் நீக்கும் நித்யா தேவிகள் 
பிரதமை & துவாதசி (1 ஆவது  & 12ஆவது திதி) துலாம், மகரம்  சுக்கிரன் & சனி காமேஸ்வரி & விஜயா 
த்விதியை  & ஏகாதசி  (2ஆவது  & 11ஆவது திதி) தனுசு, மீனம்  குரு பகமாலினி  & நீலபதாகா 
த்ரிதியை (3ஆவது திதி) சிம்மம், மகரம் சூரியன் & சனி நித்யக்லின்னா
சதுர்த்தி  (4ஆவது திதி) ரிஷபம், கும்பம்  சுக்கிரன் & சனி பேருண்டா
பஞ்சமி  & அஷ்டமி  (5ஆவது & 8ஆவது திதி) மிதுனம், கன்னி புதன்  வஹ்நிவாசினி &த்வரிதா
சஷ்டி  (6ஆவது திதி) மேஷம், சிம்மம் செவ்வாய் & சூரியன்  மகா வஜ்ரேச்வரி
சப்தமி (7ஆவது திதி) கடகம், தனுசு சந்திரன் & குரு சிவதூதி
நவமி & தசமி  (9ஆவது  & 10ஆவது திதி) சிம்மம், விருச்சிகம் சூரியன் & செவ்வாய்  குலசுந்தரி&நித்யா 
த்ரயோதசி (13ஆவது திதி) ரிஷபம், சிம்மம் சுக்கிரன் & சூரியன்  சர்வமங்களா
சதுர்த்தசி (14 ஆவது திதி) மிதுனம், கன்னி, தனுசு, மீனம்  புதன் & குரு  ஜ்வாலாமாலினி 
பௌர்ணமி & அமாவாசை   

“திதி சூன்ய” நிலையை அடையும் கிரகங்கள் அதன் சொந்த வீட்டில் (அல்லது) உச்ச வீட்டில் (அல்லது) நன்மை தரும் வீடுகளில் (அல்லது) நட்பு வீடுகளில் (அல்லது) நன்மை தரும் கிரகங்களுடன் இணைந்திருந்தால், (அல்லது) நன்மை தரும் கிரகங்களால் பார்க்கப்பட்டால் சக்தியற்றதாகிவிடும் என்பது பொது விதி.

திதி சூன்யத்தால் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை சமாளிக்க 15 திதி நித்யா  தேவதைகள் உங்களை ஆசீர்வதிப்பது மற்றும் உதவுவது எப்படி?

1வது திதி : பிரதமை – வளர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கும் முதல் திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

சுக்கிரன்:  தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் நல்லிணக்கத்தை பாதிக்கிறது, பொருளாதாரத்தில்  உறுதியற்ற தன்மை மற்றும் மந்தமான ஆளுமை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது

சனி : உடல்நலப் பிரச்சினைகள், தொழிலில் உறுதியற்ற தன்மை, அதிகாரத்தில் இருப்பவர்களுடன்  பிரச்சனைகள், குறைந்த சுயமரியாதை மற்றும் ஒழுக்கமற்ற வாழ்க்கை அணுகுமுறை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது

திதிநித்யா தேவி : காமேஸ்வரி – அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்த தெய்வம்

தெய்வீகப் பண்புகள்: அவள் ஆசைகளின் தலைவி. ஆசைகளைக் கொடுப்பவளும் அவளே. அதனை அழிப்பவளும் அவளே. படைப்பு ஆற்றலைக் குறிப்பவள். மேலும் செல்வத்தையும் வளத்தையும்  ஈர்க்க உதவுகிறாள், சந்தேகங்கள், மாயைகளை அகற்றுபவள் காமேச்வரியை சரனடைய பேரின்பம் கிட்டும்.

பலன்கள் : ஆசைகள் நிறைவேறும். பொருளாதார ஆதாயங்கள் கிட்டும். திருப்தி மற்றும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் நல்ல உறவுகளைப் பெறலாம். தெளிவான சிந்தனை கிட்டும்.  மேலும் புதிய முயற்சிகளைத் தொடர உங்களை அனுமதிக்கிறது.

# 2 வது திதி :த்விதியை –படைப்பாற்றல், ஞானம் மற்றும் சுய வெளிப்பாட்டைக் குறிக்கும் இரண்டாம் திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

திதி நித்யா தேவி :பகமாலினி – புகழ் மற்றும் அதிர்ஷ்டம் என்னும் மங்காத செல்வங்களை உடையவள்

தெய்வீகப் பண்புகள்: ‘பகம்’ என்றால் ஏராளமான செல்வம், ஞானம், கவர்ச்சி, தைரியம், நீதி மற்றும் முக்தியைக் குறிக்கும். அந்தந்த துறையில் பிரகாசிக்க உங்கள் வளங்களையும் அறிவுத்திறனையும் பயன்படுத்தும் திறனை அவள்  வழங்குகிறாள்

பலன்கள்: எதிரிகளை வெல்லாம்.  மற்றவர்களை ஈர்க்கும் இணையற்ற திறனைப்  பெறலாம். ஞானம் கிட்டும். உண்மையான திறனைக் கண்டறிந்து செயல்படலாம். மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படும் திறனைப் பெறலாம்.

# 3 வது திதி :த்ரிதியை– சக்தி, வெற்றி மற்றும் பொருள் செல்வத்தைக் குறிக்கும் மூன்றாம் திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

சூரியன்: குறைந்த தன்னம்பிக்கை, தைரியம், மற்றும் சுயமரியாதை, தந்தையுடன் பிரச்சினைகள், மோசமான உடல்நலம் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு தன்மை ஏற்படுத்துகிறது.

சனி: குறைந்த உந்துதல், செல்வ இழப்பு அல்லது செல்வத்தை அடைவதற்கான வாய்ப்புகள் இழப்பு  தொழிலில் தேக்கநிலை மற்றும் ஒழுக்கக்கேடான பழக்கங்களைத் தருகிறது.

திதி நித்யா தேவி : நித்யக்லின்னா– எப்போதும் கருணையால் நனைந்த உள்ளம் கொண்டவள்  

தெய்வீகப் பண்புகள்: நித்யக்லின்னா என்றால் ‘நித்திய கருணை’ என்று பொருள். இந்த வடிவத்தில் தேவி எப்போதும் தயையுடன் இருப்பாள். இது அவளுடைய கருணை, இரக்கம் மற்றும் திருவருளைக்  குறிக்கிறது. கருடபுராணத்தில் புக்தி (பொருள் வளம்  மற்றும் ஆசை நிறைவேறுதல்) மற்றும் முக்தி (விமோசனம்) ஆகியவற்றை அருளுகிறவளாக அவள் போற்றப்படுகிறாள்

பலன்கள்: தடைகளைத் தாண்டி இலக்குகளை அடையும் சக்தியைப் பெறலாம். குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் கூடும். குடும்ப ஒற்றுமை ஓங்கும்.  வலிமை மற்றும் அழகு மேம்படும்.

# 4 வது திதி : சதுர்த்தி – தூய்மை மற்றும்  ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கும் நான்காம் திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

சுக்கிரன்: உறவுகளில் கருத்து வேறுபாடு, பொருளாதார  பிரச்சனைகள், சுயமரியாதை இல்லாமை

சனி: ஒழுக்கமின்மை, இலக்குகளை அடைவதில் தாமதம் அல்லது தடைகள், செல்வம் அடைவதைத் தடுக்கிறது

திதிநித்யா தேவி : பேருண்டா – அகிலத்துக்கே ஆதி காரணியாகத் திகழ்பவள்.  தூய்மை மற்றும் பாதுகாப்பின்  தெய்வம்

தெய்வீகப் பண்புகள்: ‘பேருண்டா’ என்றால் முழு பிரபஞ்சத்திலும் இருப்பவள் மற்றும் அனைத்து படைப்புகளுக்கும் ஆதாரமாக இருப்பவள். உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை தாக்கங்களையும் எதிர்மறை ஆற்றலையும் நீக்குபவள்.  நீங்கள் ஆன்ம உணர்வு பெற  உதவுபவள்.

பலன்கள் : உடல், மனம் மற்றும் ஆன்மாவை மேம்படுத்துகிறது. நீண்ட ஆயுளை அளிக்கிறது, மேன்மை  மற்றும் நல்ல கர்மாவை அடைய உதவுகிறது, எதிர்மறை எண்ணங்களை நீக்குகிறது

# 5 வது திதி : பஞ்சமி – கலை, கல்வி மற்றும் தொழில் இலக்குகளில் சிறந்து விளங்குவதைக் குறிக்கும். ஐந்தாம் திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

புதன்: ஒரு நபரை கனவு காண்பவராக ஆக்குகிறது, தகவல் தொடர்பு, கற்றல் மற்றும் முடிவெடுப்பதில் சிரமங்களைக் கொண்டுவருகிறது. உயர் கல்வியைத் தடுக்கிறது, நிதி நெருக்கடிகளை ஏற்படுத்துகிறது.

திதி நித்யா தேவி : வஹ்னிவாசினி– நெருப்பில் வசிக்கும் தெய்வம்

தெய்வீகப் பண்புகள்: ‘வஹ்னிவாஸினி’ என்றால் அக்னி மண்டலத்தில் வசிப்பவர் என்று பொருள். அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள்.எனவே அவள்  குண்டலினி சக்தி, இது உடல் வழியாக பாய்ந்து ஆன்மீக உணர்வு, படைப்பாற்றல் மற்றும் வெளிப்பாடு ஆகியவற்றை எழுப்புகிறது.

பலன்கள்: உலக இன்பங்களை அனுபவிக்க இயலும்.  படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கும் உற்சாகம், ஆர்வம் மற்றும் நம்பிக்கையை அளிக்கும்.  தேக பலத்தை பெற இயலும்.

# 6 வது திதி – ஆசைகளை வெளிப்படுத்துவதைக் குறிக்கும். ஆறாவது திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

செவ்வாய்: ஆக்ரோஷமான போக்கு, அதிகமாக வாதிடுதல்  அதிக விமர்சனம்  யோசிக்காமல்  அவசரசமாக முடிவெடுப்பது

சூரியன்: மோசமான ஆரோக்கியம், மன உறுதியின்மை மற்றும் விடாமுயற்சியின்மை  பணிகளை முடிக்க இயலாமை.

திதிநித்யா தேவி : மகா வஜ்ரேச்வரி  மின்னலின் உருவம் கொண்ட (வஜ்ரம் என்னும் ஆயுத உருவம்) தெய்வம்

தெய்வீகப் பண்புகள்: ‘வஜ்ரேஸ்வரி’ என்றால் வஜ்ர ஆயுதத்தை ஏந்தி வஜ்ர (வைரம்) நகரத்தில் வசிப்பவள் என்று பொருள். பாவனோபநிஷத் அவளை மஹத்-தத்வாவுடன் அடையாளப்படுத்துகிறது.பிறவிப் பிணி தீர்ப்பவள். கனிவான பார்வையுடன் பக்தர்களைக் காப்பவள்.

பலன்கள் : தீமைகள் அழியும்.  பகுத்தறியும் திறன்கள் அதிகரிக்கும்.  இலக்குகளை அடைய உதவும். துன்பத்தை நீக்கும்.

# 7 வது திதி : சப்தமி – புதிய முயற்சிகளில் வெற்றியைக் குறிக்கும் ஏழாம் திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

சந்திரன்: உணர்ச்சி உறுதியற்ற தன்மை, மனநிலை மாற்றங்கள், திருப்தியின்மை, பாதுகாப்பின்மை மற்றும் முடிவெடுக்கும் திறன் இன்மை

வியாழன்: குறைந்த வாய்ப்புகள் மற்றும் குறைவான வளர்ச்சி  மற்றும் பொருளாதார  சிக்கல்கள் மற்றும் உறவுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது

திதி நித்யா தேவி : சிவதூதி– சிவனை தனது தூதராக கொண்ட ஆதி பெண் சக்தி

தெய்வீகப் பண்புகள்: ‘சிவதூதி’ என்றால் சிவனையே தூதராகக் கொண்டவள். அவளுடைய இனிமையான முகம் சூரியனைப் போல பிரகாசமாக இருக்கிறது, அவளுடைய கருணை நமது வாழ்க்கையில் எல்லா மங்களங்களையும் அளிக்கும். நீங்கள் பணிவாக இருக்கவும்,  நம்பகமானவராக இருக்கவும்  தன்னம்பிக்கையுடன் பணிகளை மேற்கொள்ளவும், எதிர்மறை மற்றும் தடைகளை அழித்து, உங்கள் திறனை உணர்ந்து கொள்ளவும்   உதவுகிறாள்.

பலன்கள் : பணிகளைச் செய்ய உந்துதலையும் ஒழுக்கத்தையும் வளர்க்கிறது, நியாயமான ஆசைகள் நிறைவேறும். பாவம் மற்றும் அநீதியை ஒழிக்கிறது

# 8 வது திதி : அஷ்டமி – எதிரிகள் மற்றும் தடைகள் மீது வெற்றியைக் குறிக்கும் எட்டாம் திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

புதன்: தர்க்கரீதியான பகுத்தறிவு, தகவல் தொடர்பு திறன் மற்றும் பகுப்பாய்வு திறன்களை பாதிக்கிறது, நிதி நெருக்கடி, உடல்நலக்குறைவு மற்றும் எதிரிகளால் தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது.

திதி நித்யா தேவி : த்வரிதா – வேகமாக வந்து தேவைகளை நிறைவேற்றும் தெய்வம்

தெய்வீகப் பண்புகள்: ‘த்வரிதா’ என்றால் உங்கள் பிரார்த்தனைகளுக்கு விரைவாகப் பதிலளிப்பவள். கருநீல நிறத்தில், அவள் உடலில் எட்டு பாம்புகளை அணிந்திருக்கிறாள். மேலும் தன் பக்தர்களைக் காக்க எப்போதும் தயாராக இருக்கிறாள் மற்றும் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்க சித்தி (வெற்றி) மற்றும் ‘அபார சிந்தனை ஆற்றல்’ ஆகியவற்றை வழங்குகிறாள்.

பலன்கள் : கல்வியில் சிறந்து விளங்கலாம். மேம்பட்ட  ஆரோக்கியம் பெறலாம்.  விஷத்திலிருந்து பாதுகாப்பு பெறலாம்  மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம். மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறலாம்.

# 9வது திதி : நவமி – சுய வளர்ச்சி மற்றும் செழிப்பைக் குறிக்கும் ஒன்பதாம் திதி

திசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

சூரியன்: மோசமான ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது, குடும்ப உறவுகளில் ஒற்றுமையின்மை, அதிகார நபர்களுடன் பிரச்சினைகள், ஆற்றல்  மற்றும் கவனம் இல்லாமை ஏற்படுத்தும்

செவ்வாய்: உங்களை விபத்துக்கள் மற்றும் காயங்களுக்கு ஆளாக்குகிறது, சூழ்ச்சி மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபடுத்துகிறது, உறவுகளில் மோதல்களைக் கொண்டுவருகிறது.

திதி நித்யா தேவி : குலசுந்தரி – செழிப்பை அருளும் அன்னை & ஞானம் அளிப்பவர்

தெய்வீகப் பண்புகள்: ‘குலசுந்தரி’ என்பது குலத்தை (உடலை) நிலைநிறுத்தும் மற்றும் வலுவூட்டும் குண்டலினி ஆற்றலைக் குறிக்கிறது. இந்த அன்னை நமது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக தனது ஏராளமான ஆசீர்வாதங்களை வழங்குகிறாள், புரிதல் மற்றும் சுய அக்கறையை வளர்க்கிறாள். மேலும் உங்கள் வாழ்க்கையில் பிறருடன்  இணக்கமாக இருக்க உதவுகிறாள்.

பலன்கள் : அறிவு மற்றும் சர்வஞானம் பெறலாம்.  விவேகம் மற்றும் தெய்வீக ஞானம் பெறலாம். லௌகீக இன்பங்களை அடையலாம்.  எதிரிகள் அழியலாம்.

# 10 வது திதி : தசமி – ஆத்ம ஞானம் மற்றும் நேர்மையான செயல்களைக் குறிக்கும் பத்தாம் திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

சூரியன்: உடல்நலக் குறைபாடு, உறவுச் சிக்கல்கள், தைரியமின்மை,  நம்பிக்கையின்மை ஆகியவற்றைக் கொண்டுவருகிறது

செவ்வாய்: ஆக்ரோஷம், கட்டுப்பாடின்மை, எளிதில் கோபப்படுதல் மற்றும்  உறவுகளில் நல்ல பிணைப்பைத் தடுக்கவும் செய்கிறது

திதிநித்யா தேவி : நித்யா – அறிவின் திருவுருவமான நித்திய தேவி

தெய்வீகப் பண்புகள்: ‘நித்யா’ என்றால், காலத்தைப் போலவே என்றும் அழிக்க முடியாதவள் என்று பொருள். அவள் எல்லையற்ற தகவல் மற்றும் கர்மப்  பதிவுகளின் களஞ்சியமாக இருக்கிறாள். நித்ய சர்வாத்மிகா என்றும் அழைக்கப்படுகிறாள் – எல்லா உயிர்களையும் தாங்கி, மங்களத்தை அளிப்பவள்.

பலன்கள் : அபரிமிதமான வலிமை, உத்வேகம் மற்றும் கவனத்தை அளிக்கிறது, வாக் சித்தியை  – வார்த்தைகளை யதார்த்தத்துடன் வெளிப்படுத்தும் திறன் தருகிறது.  உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது

# 11வது திதி : ஏகாதசி – மறுசீரமைப்பு மற்றும் மறுபிறப்பைக் குறிக்கும் பதினொன்றாம் திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

வியாழன்: வழக்குகள், சட்டச் சிக்கல்கள், மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரச்சினைகள், குரு அல்லது ஆசிரியர்களுடனான  உறவில் முரண்பாடுகள் மற்றும் அதிக செலவு மற்றும் இழப்புகளை ஏற்படுத்துகிறது.

திதி நித்யா தேவி : நீலபதாகா – பூரணத்துவத்தை வழங்கும் நீலமணி-நிறம் கொண்ட தேவி

தெய்வீகப் பண்புகள்: ‘நீலபதாகா’ என்றால் நீலநிறம் கொண்டவர். அன்னையின் அருளால் உங்களுக்குள் உள்ள உறுதி என்னும் நெருப்பை எழுப்ப முடியும், உங்கள் உடல் மற்றும் மனதின்  நச்சுத்தன்மை நீக்க முடியும், மேலும் அவளுடைய அருட்பார்வை உங்கள் நிலையை ஒரு கணத்தில் உயர்த்தும்.

பலன்கள் : போரில் வெற்றியை மேம்படுத்துகிறது, வணிகம் மற்றும் வர்த்தகத்தில் வெற்றியை அளிக்கிறது, சட்டரீதியான வெற்றிகளைப் பெற உதவுகிறது, உத்வேகத்துடன் இருக்கவும் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது

# 12 வது திதி – துவாதசி – செழிப்பைக் குறிக்கும் பன்னிரண்டாம் திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

சுக்கிரன்: தனிப்பட்ட மற்றும் தொழில் உறவுகளில் மோதல்கள், கடன்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளை உருவாக்குகிறது

சனி: தொழிலில் உறுதியற்ற தன்மையைக் கொடுக்கிறது, உங்களை மந்தமாகவும், திசையற்றவராகவும், ஒழுங்கற்றவராகவும் ஆக்குகிறது, கல்வியை முடிப்பதில் சிக்கல்களை உருவாக்குகிறது.

திதி நித்யா தேவி : விஜயா – வெற்றியைத் தரும்  தெய்வம்

தெய்வீகப் பண்புகள்: ‘விஜயா’ என்றால் ஒட்டுமொத்த வெற்றியை அளிப்பவர். அதிகாலை சூரியனைப் போல் பிரகாசிக்கும் தேவி, அகத் தீமைகளை அழித்து அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற உதவுவாள்.

பலன்கள் : முயற்சிகளில் வெற்றி, விவாதங்களில் வெற்றி, அழகு, இயல்பு நிலை, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு

# 13 வது திதி : த்ரயோதசி – ஆசை-நிறைவேறுதல் மற்றும் இன்பமயமான உறவைக் குறிக்கும். பதிமூன்றாம் திதி

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

சுக்கிரன்: குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவில் சிக்கல்கள், சரியான துணையை கண்டுபிடிப்பதில் தாமதம், பிடிவாதம், நிதி சிக்கல்கள்

சூரியன்: ஒரு நபரை தன்னலமுள்ளவராகவும், ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், மோசமான மனநிலையுடையவராகவும் ஆக்கும். உடல்நலப் பிரச்சினைகள்  மற்றும் அன்புக்குரியவர்களுடன் மோதலை ஏற்படுத்தும்.

திதி நித்யா தேவி : சர்வமங்களா- சகல ஐஸ்வர்யங்களையும் அருளும் தந்திர தேவி

தெய்வீக பண்புகள்: ‘சர்வமங்களா’ என்றால் மங்களத்தையும் ஒட்டுமொத்த நேர்மறையையும் அளிப்பவள் என்று பொருள். அவளை சாந்தப்படுத்துவதன் மூலம்  பயணத்தின் போது அறியப்படாத ஆபத்திலிருந்து காக்கும் அவளின் அருள் என்னும்  தெய்வீகக் கவசத்தை பெறலாம்.

பலன்கள் : நம்பிக்கை மற்றும் நேர்மறையான அணுகுமுறையைத் தூண்டுகிறது. உங்கள் லௌகீக  மற்றும் ஆன்மீக நல்வாழ்வை மேம்படுத்துகிறது. நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் இலக்குகளை விரைவாக அடைவதற்கு ஆசீர்வதிக்கிறது.

# 14 வது திதி : சதுர்த்தசி –கர்மா-சுத்தம் & வாழ்க்கை மாற்றத்தைக் குறிக்கும் பதினான்காம் திதி  

திதிசூன்யம் பெற்ற கிரகங்கள்  & பிறப்பு ஜாதகத்தில் அதன் தாக்கம் :

புதன்: தகவல் தொடர்பில் சிரமம், மோசமான நினைவாற்றல், பலவீனமான பகுப்பாய்வு திறன், மனஅழுத்தம் மற்றும் பதட்டம், வியாபாரத்தில் சிக்கல்  மற்றும் நிதி சிக்கல்கள், கடன்கள் மற்றும் வழக்கு சிக்கல்கள்

வியாழன்: அவநம்பிக்கை மற்றும் உற்சாகமின்மை, கல்வி கற்பதில் மற்றும் உயர்கல்வியில் சிரமங்கள், ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளுடனான சுமுகமற்ற உறவுகள், முன்னரே திட்டமிட்டு இலக்குகளை அடைய இயலாமை.

திதி நித்யா தேவி : ஜ்வாலா மாலினி – சுடர் மாலையை அணிந்திருக்கும் நாக தேவி

தெய்வீக குணங்கள்: ‘ஜ்வாலமாலினி’ என்றால் சுடர் வடிவில் இருப்பவள், சுடர் மாலையை அணிந்தவள் என்று பொருள். இந்த உக்கிரமான மற்றும் உணர்ச்சிமிக்க தேவி பக்தியின் நெருப்பைக் குறிக்கிறாள்.  உங்கள் கர்மா, துன்பம் மற்றும் உங்கள் மனதின் அசுத்தங்களை எரித்து, நீங்கள் முன்னேறி வெற்றிகரமான வாழ்க்கையை நடத்த உதவுகிறாள்.

பலன்கள் : மென்மேலும் வளரும் செல்வம், எதிரிகள் மற்றும் துக்கங்களின் அழிவு. லௌகீக மற்றும் ஆன்மீக இலக்குகளை அடைய உங்கள் வரம்புகள் மற்றும் உள் மற்றும் வெளிப்புற தடைகளைத் தாண்டி   உயர்வதற்கான உதவி.

# 15 வது திதி – பௌர்ணமி & அமாவாசை – புதிய சாத்தியக்கூறுகளைக் குறிக்கும் பதினைந்தாம் திதி  

திதி நித்யா தேவி : சித்ரூபா (சித்ரா)- உதய சூரியனின் கதிர்களைப் போல பளபளப்பானவள்

தெய்வீகப் பண்புகள்: ‘சித்ரா’ என்றால் அழகின் உருவமாகத் திகழ்பவள், தன் பக்தர்களின் இதயங்களில் ஞான ஒளியைப் பாய்ச்சுகிறவள் என்று பொருள். பௌர்ணமியின் போது திரிபுரசுந்தரி தேவியாக, அனைத்தையும் அன்புடன் அரவணைத்து, ஒளியையும், ஆசீர்வாதத்தையும் பரப்பி, தீவிரமான ஆசைகளை நிறைவேற்றுகிறாள். அமாவாசையின் போது அன்னை காளியாக, அனைத்தையும் கிரகித்து, அனைத்து அசுத்தங்களையும் சுத்தப்படுத்துகிறாள், கஷ்டங்களைப் போக்குகிறாள், பயம் மற்றும் துயரங்களைப் போக்குகிறாள்.

பலன்கள் : திடீர் ஆதாயம், பெயர், புகழ், படைப்பாற்றல், உள்ளுணர்வு  மற்றும் செல்வத்தை குவிக்கும் திறன்